சிறுவர்களின் உள நலத்தை மேம்படுத்தும் செயற்றிட்டத்தின் அனுபவப்பகிர்வு

Published By: Ponmalar

29 Mar, 2023 | 11:11 AM
image

இலங்கையிலுள்ள மூன்று மாவட்டங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் சிறுவர்களின் உள நலத்தை மேம்படுத்தும்  செயற்றிட்டத்தின் அனுபவப்பகிர்வு குருநாகலில் இடம்பெற்றது.

யாழ்ப்பாணம், மட்டக்களப்பு மற்றும் நுவரெலியா ஆகிய மூன்று மாவட்டங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் சிறுவர்களின் உளநல மேம்பாடு மற்றும் சமூக மட்டத்தில் அவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் தொடர்பான கலந்துரையாடல் குருநாகல் துல்கிரிய பிரதேசத்தில் உள்ள மாஸ் அதன (MASATHENA) கலையரங்கில் முன்னெடுக்கப்பட்டது.

கடந்த 26, 27, 28 ஆகிய மூன்று தினங்களாக நடைபெற்ற  செயற்றிட்ட அனுபவத்தினை பகிர்ந்து கொள்ளல் நிகழ்வில் முதலாவது நாளில் மூன்று மாவட்டங்களைச் சேர்ந்த சிறுவர் கழகங்களை பிரதிநிதுவப்படுத்தும் சிறுவர்களின் விழிப்புணர்வு மேடை நாடகங்கள் இடம்பெற்றன. அத்துடன் மாணவர்களுக்கான ஊடக செயலமர்வும் சமூக விழிப்புணர்வு செயற்பாடுகள் தொடர்பான கலந்துரையாடல்களும் முன்னெடுக்கப்பட்டு இவர்களுடன் விசேட தேவையுடைய சிறார்களும் தமது திறன்களை வெளிக்காட்டியமை சிறப்பம்சமாகும்.

சிறுவர்களின் மேம்பாடு தொடர்பாக cbm, Bmz, ஆகிய அரச சார்பற்ற நிறுனங்களுடன் Itham CACPD, EKsath Lanka, ppcc ஆகிய தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் பங்குபற்றுதலுடன் முன்னெடுக்கப்பட்ட செயற்திட்ட நிகழ்வில் மூன்று மாவட்டங்களையும் சேர்ந்த அரச திணைக்கள தலைவர்கள், அதிகாரிகள் நிறுவனத்தின் பிரதிநிதிகள், உள்ளிட்டவர்களும் பாடசாலை மாணவர்கள் உள்ளடங்களாக சுமார் 144 பேர் வரை கலந்து கொண்டிருந்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right