மக்கள் பிரதிநிதிகள் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டு மூடிய அறையில் மேற்கொள்ளப்பட்ட எல்லை நிர்ணயம் மீள் பரிசீலனைக்குட்படுத்தப்பட வேண்டும் - சமத்துவக் கட்சி

Published By: Digital Desk 3

29 Mar, 2023 | 11:04 AM
image

எல்லை மீள்நிர்ணயம் தொடர்பான பிரேரணைகள் மாவட்டச் செயலர்கள் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவொன்றின் ஊடாக பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மேற்குறிப்பிடப்பட்ட குழுக்களில் எவற்றிலும் மக்கள் அமைப்புகள், மக்கள் பிரதிநிதிகள், அல்லது பொதுமக்களை பிரதிநிதித்துவம் செய்யும் அரசியற் கட்சிகள் திட்டமிட்ட வகையில் புறக்கணிக்கப்பட்டு, தங்களின் எஜமானர்களை திருப்திசெய்யும் பிரேரணைகள், மாவட்டச் செயலர்கள் அடங்கிய குழுவினரால் மிகவும் நுட்பமான வகையில் உள்சேர்க்கப்பட்டிருக்கின்றன. எனவே இது மீள் பரிசீலனை செய்யப்படல் வேண்டும் என சமத்துவக் கட்சி எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் தலைவர்  மஹிந்த தேசப்பிரியவுக்கு கடிதம் ஒன்றை கையளித்துள்ளது.

குறித்த கடிதம் நேற்று (28) கொழும்பில் உள்ள அவரது அலுவலகத்தில் நேரடியாக சமத்துவக்கட்சியின் பொதுச் செயலாளர், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மு.சந்திரகுமாரினால் நேரடியாக கையளிக்கப்பட்டுள்ளது. 

குறித்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

கள யதார்த்தையும் சமூக கட்டமைப்புகளையும் கருத்தில் கொள்ளாமல்,  வெறும் மூடிய அறையில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் முன்மொழிவுகள், சமூக இயங்கியலை, அதன் ஒருங்கிசைவை எவ்வாறு அழிவுக்கு இட்டு செல்லும் என்பது ஆராயப்பட்டிருக்கப்படவில்லை. முற்றிலும் பொருத்தமற்ற ஆளணியினரை கொண்டு உருவாக்கப்பட்டிருக்கும் மேற்படி முன்வரைபுகள், சமூக வளர்ச்சியில் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும் என்ற அச்சம் சமத்துவ கட்சி அடங்கலான அனைத்து அரசியல் கட்சியினருக்கும் ஏற்பட்டிருக்கிறது.

இந்தப் புதிய எல்லை நிர்ணயத்தின் மூலம் பல பிரதேசங்களில் (வட்டாரங்களில்) சமூகப் பிளவுகள் ஏற்படக்கூடிய நிலை ஏற்படுவதற்கான சூழலே அதிகமாகக் காணப்படுகிறது. மட்டுமல்ல, ஏற்கனவே இருந்த வட்டார எல்லைகளை விரித்து அகலமாக்கும்போது குறித்த பிரதேசங்களில் (கிராம நிலையில் அல்லதுகிராமசேவகர் நிலையில்) உரிய உறுப்பினர்களைத் தெரிவு செய்ய முடியாத நிலை மக்களுக்கு ஏற்படவுள்ளது. இதனால் அபிவிருத்தி தொடக்கம் மக்கள் பிரதிநிதித்துவம் வரையில் ஏகப்பட்ட பிரச்சினைகள் ஏற்படும். ஆகவே இது சமூகப் பிளவுகளை ஆழமாக உண்டாக்கும்.

புதிய வட்டார எல்லைகளிற் பலவும் பொருத்தப்பாடற்றவையாகக் காணப்படுகின்றன. இதனை மீள்பார்வைக்குட்படுத்த வேண்டும். இவ்வாறு வகுக்கப்படுமிடத்து அபிவிருத்திப் பணிகளைச் செய்வதற்கும் சபையில் உரிய பிரதேசங்களின் குரலை ஒலிப்பதற்கும் நெருக்கடிகளே அதிகமாக இருக்கும். இதுவும் சமூகக் கொந்தளிப்பை உண்டாக்கும்.

மேலும்,  கடந்த ஜனவரி மாதம் முதல் வாரத்தில் தங்களுக்கும், சிறுபான்மை அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் இடையில், உள்ளூராட்சி தேர்தல் தொடர்பாக நடைபெற்ற சந்திப்பொன்றின்போது, கட்சிகளின் பிரதிநிதிகளால் முன்வைக்கப்படட ஆலோசனைகள் கவனத்துடன் பரிசீலக்கப்படும் என்று தங்கள் வழங்கிய வாக்குறுதியை தற்போது நினைவுபடுத்த விரும்புகிறேன். 

மேற்படி சந்திப்பின்போது, தற்போதுள்ள தேர்தல் முறைகளிலும் உறுப்பினர் எண்ணிக்கையிலும் ஏற்படக்கூடிய எந்தவொரு மாற்றமும், இலங்கையில் வாழக்கூடிய சிறுபான்மை சமூகத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் புதிய தேர்தல் முறையொன்றின்கீழ் குறைந்தளவு எண்ணிக்கையில் உறுப்பினர் தேர்வு இடம்பெறுமாயின் ஏற்கனவே பாதிக்கப்பட்டிருக்கும் சமுதாயங்கள் மேலும் புறக்கணிக்கப்படும் அபாயம் இருப்பதையும் ஒருமனதோடு சுட்டிக்காட்டியிருந்தார்கள். அத்துடன், விகிதாசார பிரதிநிதித்துவ முறை மட்டுமே இலங்கை போன்ற பன்முக சமுதாயங்கள் வாழக்கூடிய நாட்டிற்கு பொருத்தமானதும் சரியானதும் ஆகும் என்பதும் அந்த சந்திப்பின் போது வலியுறுத்தப்பட்டிருந்தது.

ஆகவே இவை போன்ற வரலாற்றுத் தவறுகள் எமது நாட்டில் மேலும் சமூக நெருக்கடியையும் பிரச்சினைகளையும் உருவாக்குமே தவிர, சுமுகமான சூழலை உருவாக்காது. நமது நாடு பிரச்சினைகளிலிருந்து மீள வேண்டியுள்ளது. அதற்கு அதிகாரப் பரவலாக்கம் மிகமிக அவசியமானது. அதைக் குறித்து சிந்திப்பதே மிகத் தேவையானதாகும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிணைமுறி பத்திர உரிமையாளர்கள் குழுவுடன் இறுதிக்கட்ட...

2024-04-16 09:31:45
news-image

தமிழ் பொதுவேட்பாளர் தொடர்பில் மீண்டும் பேச்சு...

2024-04-15 16:25:40
news-image

இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்கவின்...

2024-04-16 09:19:55
news-image

பரந்துபட்ட கூட்டணி குறித்து சிந்திக்கிறோம் :...

2024-04-15 16:12:00
news-image

கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம்...

2024-04-15 17:06:59
news-image

கல்முனை வடக்கு பிரதேச செயலகம் :...

2024-04-15 16:09:52
news-image

மின்னல் தாக்கியதில் ஒருவர் உயிரிழப்பு!

2024-04-16 08:52:36
news-image

விக்னேஸ்வரனிடம் கால அவகாசம் கோரினார் வேலன்...

2024-04-15 16:06:32
news-image

வெள்ளியன்று தமிழரசின் மத்திய குழுக்கூட்டம் : ...

2024-04-15 15:58:07
news-image

இன்றைய வானிலை

2024-04-16 06:15:57
news-image

யாழில் போதைப்பொருள் பாவனைக்காகத் திருட்டில் ஈடுபட்டவர்...

2024-04-16 01:31:08
news-image

வாகன இறக்குமதிக்கான கட்டுப்பாடுகளை இலகுபடுத்த விரைவில்...

2024-04-15 22:57:31