ஐக்கிய அமரிக்காவிற்கும், கியூபாவிற்கும் சுமார் 50 வருடங்களாக நிலவி வந்த பகைமை உணர்வு தற்போது கைச்சாத்திடப்பட்டுள்ள புதிய பொருளாதார ஏற்றுமதி உடன்படிக்கையின் மூலம் முடிவுக்கு வந்துள்ளது.
ஐக்கிய அமெரிக்காவும் கியூபாவும் அரை நூற்றாண்டுக்கும் மேலாக பகை நாடுகளாக இருந்தன. கடந்த 1959 ஆம் ஆண்டு பிடெல் காஸ்ட்ரோ தலைமையிலான கம்யூனிஸ்ட் புரட்சிப்படை அமரிக்கா சார்பான ஆட்சியை தூக்கியெறிந்த பின்னர் இருநாடுகளுக்குமிடையிலான பகை உருவாகியது.
தற்போதைய அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவும், கியூபாவின் தற்போதைய ஜனாதிபதியான ராவுல் காஸ்ட்ரோவும் ஏற்படுத்திய புரிந்துணர்வு அடிப்படையில் இரு நாடுகளுக்கிடையே உள்ள உறவில் சமரசம் ஏற்பட்டது.
இந்நிலையில், சுமார் 55 ஆண்டிற்குப் பிறகு கியூபாவில் இருந்து அமெரிக்காவிற்க்கு விவசாய படிமங்களால் உருவாக்கப்படும் மர கரி (vegetable charcoal) வகைகளை ஏற்றுமதி செய்ய இரு நாடுகளுக்கிடையே வணிக ரீதியிலான ஒப்பந்தம் கையொப்பமாகியுள்ளது. ஒரு டன் மரக்கரி 420 அமெரிக்க டாலர் என்ற விலையில், முதல் கட்டமாக 40 டன் மரக்கரி ஏற்றுமதி செய்யப்படவுள்ளதாக, வெளிநாட்டு ஊடகமொன்று தகவல் பகிர்ந்துள்ளது.
வருடத்திற்கு 40,000 தொடக்கம் 80,000 மெட்ரிக் டன் அளவிலான மரக்கரிகளை ஐரோப்பிய நாடுகளுக்கு கியூபா ஏற்றுமதி செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. குறித்த ஒப்பந்தம் கியூப அமெரிக்க உறவில் புதிய பாலமாக இருக்கும் என கருதப்படுகிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM