17ஆவது சபாநாயகர் ஜோசப் மைக்கல் பெரேரா காலமானார்

28 Mar, 2023 | 07:40 PM
image

(செய்திப்பிரிவு)

பாராளுமன்றத்தின் 17ஆவது சபாநாயகராக பதவி வகித்த ஜோசப் மைக்கல் பெரேரா செவ்வாய்க்கிழமை (28) தனது 82 ஆவது வயதில் காலமானார்.

2001 டிசம்பர் முதல் 2004 பெப்ரவரி வரை அவர் சபாநாயகராக பதவி வகித்துள்ளார். 1941 செப்டெம்பர் 15ஆம் திகதி பிறந்த அவர் 1964 இல் ஜா-எல நகரசபை உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டு தனது அரசியல் பயணத்தை ஆரம்பித்திருந்தார்.

1964-1967 ஜா-எல நகர சபைக்கு உறுப்பினராக பணியாற்றிய அவர் , 1967-1970 ஜா-எல நகர சபையின் உப தலைவராக நியமனம் பெற்றார்.

1970-1971 ஜா-எல நகர சபையின் தலைவராக நியமிக்கப்பட்டார். 1971-1976 ஐக்கிய தேசிய கட்சியின் தலைமை அமைப்பாளராக செயற்பட்டிருந்தார்.

1976 -1977 முதல் தேசிய மாநில சட்டசபைக்கு பாராளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1977-1978 இரண்டாவது தேசிய மாநில சட்டசபைக்கு பாராளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1978-1988 இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் முதலாவது பாராளுமன்றத்திற்கு பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தொலைநோக்குடைய தலைமையொன்றே நாட்டுக்கு அவசியம் -...

2023-06-04 15:53:05
news-image

எஹலியகொட பன்னிலவில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு...

2023-06-04 15:27:57
news-image

நாட்டில் இயல்பு நிலையை ஏற்படுத்துவது நம்...

2023-06-04 14:41:24
news-image

மூன்று மாதங்களுக்குள் உண்மை மற்றும் நல்லிணக்க...

2023-06-04 14:18:56
news-image

சிறுநீர் பாதையிலிருந்து இரத்தம் கசியும் வரை...

2023-06-04 14:02:53
news-image

புலம்பெயர் நிகழ்ச்சி நிரல்களுக்குள் சிக்காதீர்கள் -...

2023-06-04 13:45:02
news-image

450 மில்லியன் அமெரிக்க டொலரை இலங்கைக்கு...

2023-06-04 13:24:16
news-image

தெஹியத்தகண்டி பிரதேச ஆற்றில் நீராடிய இருவர்...

2023-06-04 13:13:28
news-image

யாழ். பல்கலையில் மோதல் : 31...

2023-06-04 13:02:15
news-image

நான் யாருக்கும் அஞ்சமாட்டேன் - ஜனாதிபதியிடம்...

2023-06-04 12:23:12
news-image

12.5 கிலோ கிராம் சிலிண்டரின் விலை...

2023-06-04 12:14:40
news-image

16 முதல் 18 வயதுக்குட்பட்டவர்களை சிறைகளிலிருந்து...

2023-06-04 12:01:57