197 சர்வதேச போட்டிகளில் விளையாடி சாதனை படைத்த கிறிஸ்டியானோ ரொனால்டோ

Published By: Digital Desk 5

28 Mar, 2023 | 05:28 PM
image

(நெவில் அன்தனி)

சர்வதேச கால்பந்தாட்ட அரங்கில் தனது 197ஆவது போட்டியில் விளையாடியதன் மூலம் கிறிஸ்டியானோ ரோனால்டோ புதிய சாதனை படைத்துள்ளார்.

லீச்டென்ஸ்டீன் அணிக்கு எதிராக நடைபெற்ற 2024 ஐரோப்பிய சம்பியன்ஷிப் போட்டியில் விளையாடியதன் மூலம் அவர் இந்த சாதனையை நிலைநாட்டினார்.

மேலும், போர்த்துக்கல் அணியில் மீண்டும் இடம்பெறும் கிறிஸ்டியானோ ரொனால்டோ, தனது ஆற்றல் மங்கிவிடவில்லை என்பதை இந்த வருடம் விளையாடிய முதல் இரண்டு போட்டிகளில் நிரூபீத்துள்ளார்.

பெரும் ஏமாற்றத்தைத் தோற்றுவித்த கத்தார் 2022 உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டியின் பின்னர் போர்த்துக்கல் அணியில் மீண்டும் இடம்பெற்ற ரொனால்டோ, தனது முதல் இரண்டு போட்டிகளில் தலா 2 கோல்களைப் போட்டு அசத்தினார்.

உலகக் கிண்ணப் போட்டிக்கு பின்னர் சவூதி அரேபிய கால்பந்தாட்ட கழகம் ஒன்றில் இணைந்த ரொனால்டோ, 2024 ஐரோப்பிய சம்பியன்ஷிப் கால்பந்தாட்டப் போட்டியில் அசத்தி வருவதுடன் சர்வதேச கால்பந்தாட்டத் தரம் தன்னிடம் தொடர்ந்தும் இருக்கின்றது  என்பதை  நிரூபித்துள்ளார்.

லக்ஸம்பேர்க் அணிக்கு எதிரான போட்டியில் போர்த்துக்கல் ஈட்டிய 6 - 0 என்ற வெற்றியில் ரொனால்டோ 2 கோல்களைப் போட்டதுடன், லீச்டென்ஸ்டீன் அணியுடனான போட்டியில் ஈட்டிய 4 - 0 என்ற வெற்றியிலும் அவர் 2 கோல்களைப் போட்டிருந்தார்.

லீச்டென்ஸ்டீன் அணியுடனான போட்டியானது சர்வதேச கால்பந்தாட்ட அரங்கில் கிறிஸ்டியானோ ரொனால்டோ விளையாடிய சாதனைமிகு 197ஆவது சர்வதேச போட்டியாகும்.

இதன் மூலம் அதிகளவிலான சர்வதேச கால்பந்தாட்ட போட்டிகளில் விளையாடிய வீரர் என்ற சாதனையைப் படைத்தார்.

இரண்டு போட்டிகளில் இரண்டு வெற்றிகள் மகிழ்ச்சி தருகிறது என போர்த்துக்கல் அணித் தலைவர் ரொனால்டோ தனது சமூக ஊடகத்தில் குறிப்பிட்டார்.

'எமது தேசிய அணி சாதகமான பெறுபெறுகளை ஈட்டியமை மகிழ்ச்சி தருகிறது. இங்கிருந்து முன்னோக்கி நகர்வோம்' என சமூக ஊடகத்தில் கூறியிருந்தார்.

கத்தாரில் கடந்த வருடம் நடைபெற்ற  மொரோக்கோவுக்கு எதிரான  உலகக் கிண்ண  கால் இறுதிப் போட்டியில் போர்த்துக்கல் தோல்வி அடைந்து வெளியேறியபோது ரொனால்டோ கண்ணீர் சிந்தியவாற அரங்கிலிருந்து வெளியேறியிருந்தார்.

அதன் பின்னர் இந்த வருடம் விளையாடிய முதல் இரண்டு போட்டிகளிலும் போர்த்துக்கல் வெற்றிபெற்றது ரொனால்டோவுக்கு மகிழ்ச்சியையும் திருப்தியையும் கொடுத்துள்ளது.

பெரும் ஏமாற்றத்தைத் தந்த உலகக் கிண்ணப் போட்டிக்குப் பின்னர் தேசிய அணியில் விளையாடக் கிடைக்குமா என்ற சந்தேகத்திற்கு மத்தியில் சவூதி அரேபியாவின் அல் நாசர் கழகத்தில் பெருந்தொகை பணத்திற்கு ரொனால்டோ ஒப்பந்தமாகியிருந்தார்.

எனினும் போர்த்துக்கல் அணியில் மீண்டும் இடம்பிடித்த ரொனால்டோ 2 போட்டிகளில் 4 கோல்களைப் போட்டு தனது திறமை மங்கவில்லை என்பதை மீண்டும் எடுத்துக்காட்டியுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்படும்

2024-04-16 12:43:21
news-image

சாதனைகள் குவித்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத்திடம் பணிந்தது...

2024-04-15 23:55:33
news-image

நேபாள கிரிக்கெட் வீரர் திப்பேந்த்ரா சிங்;...

2024-04-15 18:45:05
news-image

பாரிஸ் ஒலிம்பிக் மெய்வல்லுநர் போட்டிகளில் தங்கம்...

2024-04-15 16:59:59
news-image

இத்தாலி மெய்வல்லுநர் போட்டியில் யுப்புன் அபேகோனுக்கு...

2024-04-15 16:16:50
news-image

பாரிஸ் 2024 ஒலிம்பிக் டென்னிஸில் பங்குபற்றி...

2024-04-15 13:06:04
news-image

மதீஷவின் பந்துவீச்சில் மண்டியிட்டது மும்பை : ...

2024-04-15 13:24:55
news-image

ரி20 உலகக் கிண்ணத்துக்கான இலங்கை முன்னோடி...

2024-04-14 22:18:48
news-image

பில் சோல்ட், மிச்செல் ஸ்டாக் பிரகாசிக்க,...

2024-04-14 19:59:07
news-image

வுல்வாட் அபார சதம் : இலங்கையை...

2024-04-14 09:35:43
news-image

கடைசி 2 ஓவர்களில் ஹெட்மயரின் அதிரடியால்...

2024-04-13 23:48:46
news-image

இலங்கையில் ICC கிரிக்கெட் உரிமைகள் 2025...

2024-04-13 07:06:22