சுவாமி விபுலானந்தரின் 131 வது அகவை தினத்தை முன்னிட்டு சிறப்பு நிகழ்வுகள்!

Published By: Ponmalar

28 Mar, 2023 | 05:17 PM
image

சுவாமி விபுலானந்தரின்  131ஆவது அகவை தினத்தை முன்னிட்டு  ‘திருகோணமலை சுவாமி விபுலானந்தர் நூற்றாண்டு விழா சபையினால்’ ஏற்பாடு செய்யப்பட்ட சுவாமியினுடைய திருவுருவச் சிலை உள்ள மூன்று பாடசாலைகளான தி/ஸ்ரீ கோனேஸ்வரா இந்துக் கல்லூரி, தி/உவர்மலை விவேகானந்தா கல்லூரி, தி/விபுலானந்தா கல்லூரியில் சுவாமிக்கு மலர் தூவி அக வணக்க வழிபாடும் இடம் பெற்றது.

    

அதனைத் தொடர்ந்து திருகோணமலை வலையக்கல்வி பணிமனையின் அனுசரணையுடன். இவ்வருடம் க.பொ.த சா/த பரிட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான முன்னோடி ஐந்து நாள் செயலமர்வு கருத்தரங்கு இம்மூன்று பாடசாலைகளுக்கும்  இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது. 

 ஏனைய பாடசாலைகளுக்கும் வருகிற கிழமைகளில்  நடத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது  என்பதும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right