(எம்.ஆர்.எம்.வசீம்)
ஐக்கிய அரபு ராஜ்ஜியம் கட்டார் போன்ற நாடுகளில் ஆண், பெண்களுக்கு தொழில் பெற்றுத்தருவதாக தெரிவித்து சட்டவிரோதமான முறையில் சமூக வலைத்தளங்களில் விளம்பரங்களை பிரசுரித்துவந்த பெண்ணொருவர் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விசேட விசாரணை பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் 1985 21ஆம் இலக்க சட்டத்தின் 37 (1) சரத்துக்கமைய, அனுமதியளிக்கப்பட்ட முகவர் ஒருவர் வெளிநாட்டு வேலைவாய்ப்பு தொடர்பாக விளம்பரம் பிரசுரிப்பதாக இருந்தால் அது தொடர்பாக பணியகத்தின் பூரண அனுமதியை பெற்றுக்கொள்ளவேண்டும்.
இவ்வாறு இல்லாமல் விளம்பரப்படுத்தி வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கு ஆட்சேர்ப்பு செய்தல் அல்லது வேலைவாய்ப்புக்காக பணம் அறவிடுதல் பணியகத்தின் சட்டத்தின் பிரகாரம் சட்டவிரோதமாகும்.
அதன் பிரகாரம் பணியகத்தின் விசாரணைப்பிரிவுக்கு கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றுக்கு அமைய செயற்பட்ட விசாரணை பிரிவினர் குருணாகலை பாரியபொல பிரதேசத்தைச்சேந்த 36வயதுடைய பெண்ணாெருவரை நேற்று (27) கைதுசெய்துள்ளனர்.
இவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைளயின்போது, குறித்த பெண் வெளிநாட்டு வேலைவாய்ப்பு முனவர் நிறுவனம் ஒன்றின் தரகர் எனவும் சமூக வலைத்தலங்கள் ஊடாக விளம்பரங்களை பிரசுரித்து தொடர்புகொள்ளப்படும் நபர்களை குறித்த முகவர் நிறுவனத்துக்கு அனுப்புவதாக தெரிவந்துள்ளது.
கைதுசெய்யப்பட்ட குறித்த பெண்ணை குருணாகலை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தியபோது 5இலட்சம் ரூபா சரீர பிணையில் விடுவிக்குமாறு நீதிவான் உத்தரிவிட்டுள்ளார்.வழக்கு விசாரணை ஜூன் மாதம் 30ஆம் திகதி மீண்டும் எடுத்துக்கொள்ளப்பட இருப்பதாக பணியம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் வெளிநாட்டு வேலைவாய்ப்பு சம்பந்தமாக முகவர் நிறுவனம் ஒன்று விளம்பரம் பிரசுரிப்பதாக இருந்தால் குறித்த விளம்பரத்தில் நிறுவனத்தின் பெயர், அனுமதி இலக்கம் பதிவிடப்பட்டிருக்கிறதா என பார்க்குமாறும், தெரிவிக்கப்பட்டிருக்கும் தொழில் வாய்ப்பு குறித்த நிறுவனத்தில் இருப்பதா என பணியகத்தின் 1989 என்ற துரித இலக்கத்துக்கு தொடர்ப்பு கொண்டு உறுதிப்படுத்திக்கொள்ளுமாறும் பணியகம் வெளிநாட்டு தொழிலை எதிர்பார்ப்பவர்களிடம் கேட்டுக்கொள்கிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM