இன்று ஒருவரை ஒருவர் சந்தித்து நலம் விசாரிக்கும் போது தவறாமல் இரத்த சர்க்கரையின் அளவு குறித்த விடயமும் இடம்பெறுவது தவிர்க்க முடியாததாகிவிட்டது.
அதிலும் சிலர் உணவின் ருசிக்கு அடிமையாகி, அகால நேரத்திலும் சுவையான உணவுகளை பசியாறுகிறார்கள். இதன் காரணமாக அவர்களின் ரத்த சர்க்கரையின் அளவு கட்டுப்பாடில்லாமல் உயர்கிறது.
இதனால் நாளடைவில் க்ரானிக் ஹைப்பர் கிளைசிமியா எனப்படும் நாள்பட்ட உயர் ரத்த சர்க்கரை பாதிப்பிற்கு ஆளாகிறார்கள்.
இதனை இதற்குரிய பிரத்யேக அறிகுறிகளின் மூலம் கண்டறிந்து தொடர்ச்சியாகவும், முழுமையாகவும் சிகிச்சை பெற வேண்டும்.
இல்லையென்றால் இதயம், சிறுநீரகம், நரம்பு மண்டலம் உள்ளிட்ட உறுப்புகள் பாதிக்கப்பட்டு உயிருக்கு ஆபத்தான சூழலை ஏற்படுத்தி விடும்.
அதிகளவு சிறுநீர் வெளியேறுவது, தாகம் அதிகரிப்பது, பார்வையில் தடுமாற்றம் ஏற்படுவது, சோர்வாக உணர்வது.. இவையெல்லாம் நாட்பட்ட உயர் ரத்த சக்கரை பாதிப்பின் தொடக்கநிலை அறிகுறிகளாகும். வேறு சிலருக்கு உதடு, வாய் ஆகியவை உலர்ந்து விடுவது, வயிற்றில் வலி ஏற்படுவது, மூச்சு திணறல், குழப்பம், குமட்டல் அல்லது வாந்தி, நிதானமின்மை, உணர்விழப்பு போன்ற அறிகுறிகள் ஏற்பட்டால்.., இவை நாட்பட்ட உயர் ரத்த சக்கரை பாதிப்பின் தீவிர அறிகுறியாக எடுத்துக்கொண்டு உடனடியாக மருத்துவரை சந்தித்து சிகிச்சை பெற வேண்டும். இதனை புறக்கணித்தால் இதய ரத்த நாள பிரச்சனை, உடலில் நரம்பியல் பாதிப்பு, சிறுநீரக சேதம் மற்றும் சிறுநீரக செயலிழப்பு, பார்வை நரம்புகளில் ரத்தக் கசிவு, பாதங்கள், எலும்புகள், பற்கள், ஈறுகள் ஆகியவற்றில் தொற்று பாதிப்பு... ஆகியவை ஏற்பட்டு, இதன் காரணமாக கோமா நிலைக்கும் சென்று விடக்கூடும்.
இத்தகைய தருணங்களில் மருத்துவர்கள் பரிந்துரைக்கும் HbA1c என்ற ரத்த பரிசோதனையை மேற்கொண்டு, அதன் அளவு ஏழுக்குள் இருக்க வேண்டும். இதன் அளவு 10 அல்லது 11 க்கு மேல் இருந்தால் அவர்களின் உடல் உறுப்புகளை பாதுகாக்க மருத்துவர்கள் இன்சுலின் தெரபி எனும் சிகிச்சையை முதன்மையான மற்றும் முழுமையான நிவாரண சிகிச்சையாக வழங்குவர். இதன் போது நோயாளிகள் மருத்துவருக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்கி, உடல் உறுப்புகளை பாதுகாத்துக் கொள்ள வேண்டும். வேறு சிலருக்கு Fluid Replacement மற்றும் Electrolyte Replacement ஆகிய சிகிச்சைகளும் அவசியப்படலாம்.
டொக்டர் ராஜேஷ்
தொகுப்பு அனுஷா.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM