(எம்.மனோசித்ரா)
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தை தனியார்மயப்படுத்தும் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆரம்பிக்கப்பட்ட சத்தியாக்கிரகப் போராட்டம் புதன்கிழமை (29) மூன்றாவது நாளாகவும் தொடர்கின்றது.
தமது அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடி தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாக இலங்கை சுதந்திர ஊழியர் சேவை சங்கம் தெரிவித்துள்ளது.
எரிபொருள் நிரப்பு நிலையங்களை தனியார் நிறுவனங்களுக்கு வழங்குவதற்ககு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளமை, மிகவும் கவலைக்குரிய விடயமென இலங்கை சுதந்திர ஊழியர் சேவை சங்கம் தெரிவித்துள்ளது.
இதனிடையே, இலங்கையின் எரிபொருள் சந்தைக்குள் பிரவேசிப்பதற்காக 3 வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அனுமதிப்பத்திரங்களை வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
சீனாவின் சினொபெக், அவுஸ்திரேலியாவின் யுனைடட் பெட்ரோலியம் மற்றும் அமெரிக்காவின் ஆர்.எம்.பாக்ஸ் ஆகிய நிறுவனங்களுக்கே இவ்வாறு அனுமதி வழங்கப்படவுள்ளது. இந்நிலையிலேயே இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த சத்தியாக்கிரக போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM