logo

தமிழ் புத்தாண்டில் வெளியாகும் 'சொப்பன சுந்தரி'

Published By: Ponmalar

28 Mar, 2023 | 04:21 PM
image

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கதையின் நாயகியாக நடித்திருக்கும் 'சொப்பன சுந்தரி' எனும் திரைப்படம், தமிழ் புத்தாண்டு தினமான ஏப்ரல் 14ஆம் திகதியன்று உலகம் முழுதும் பட மாளிகையில் வெளியாகும் என்பதை பிரத்யேக புகைப்படத்தை வெளியிட்டு படக்குழுவினர் உறுதிப்படுத்தி இருக்கிறார்கள்.

'லாக்கப்' எனும் படத்தை இயக்கிய இயக்குநர் எஸ். ஜி. சார்லஸ் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் 'சொப்பன சுந்தரி'.

இதில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கதையின் நாயகியாக நடிக்க, அவருடன் நடிகைகள் லட்சுமி பிரியா சந்திர மௌலி, தீபா சங்கர், கருணாகரன், மைம் கோபி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஜி. பாலமுருகன் மற்றும் விக்னேஷ் ராஜகோபாலன் இணைந்து ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு அஜ்மல் தஹ்ஸின் மற்றும் விஷால் சந்திரசேகர் இருவரும் இணைந்து இசையமைத்திருக்கிறார்கள்.

காரை மையப்படுத்தி டார்க் கொமடி ஜேனரில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஹம்ஸினி என்டர்டெய்ன்மென்ட் மற்றும் ஹியூ பொக்ஸ் ஸ்டுடியோஸ் ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் பாலாஜி மற்றும் விவேக் ரவிச்சந்திரன் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக், டீசர், பாடல்கள், முன்னோட்டம் ஆகியவை வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில் 'கரகாட்டக்காரன்' படத்தில் இடம்பெறும் நகைச்சுவை காட்சி ஒன்றில்.. காரை யார் வைத்திருக்கிறார்? என்றொரு நகைச்சுவை வசனம் இடம் பெறும். அந்த வசனத்தையே கதையாக்கி.., முழு நீள நகைச்சுவை சித்திரமாக உருவாக்கி இருப்பதால்.., இப்படத்திற்கு ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right