logo

இயக்குநர் நலன் குமாரசாமியுடன் இணையும் கார்த்தி

Published By: Ponmalar

28 Mar, 2023 | 04:05 PM
image

'சூது கவ்வும்', 'காதலும் கடந்து போகும்' ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கத்தில் தயாராகவிருக்கும் பெயரிடப்படாத படத்தில் கதையின் நாயகனாக நடிக்க நடிகர் கார்த்தி சம்மதம் தெரிவித்திருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

கடந்த ஆண்டில் வெளியான 'விருமன்', 'பொன்னியின் செல்வன் 1', 'சர்தார்' என ஹெட்ரிக் வெற்றியை வழங்கிய நடிகர் கார்த்தி, தற்போது இயக்குநர் ராஜு முருகன் இயக்கத்தில் தயாராகி வரும் 'ஜப்பான்' எனும் படத்தில் கதையின் நாயகனாக நடித்து வருகிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த திரைப்படம் எதிர்வரும் தீபாவளி திருநாளன்று வெளியாகும் என திரையுலக வணிகர்கள் உறுதியாக கூறுகிறார்கள்.

இந்நிலையில் நடிகர் கார்த்தி விரைவில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தயாராகும் 'கைதி' படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்கவிருப்பதாகவும், இதனைத் தொடர்ந்து இயக்குநரும், நடிகருமான நலன் குமாரசாமி இயக்கத்தில் தயாராகும் பெயரிடப்படாத படத்தில் நடிப்பதாகவும் உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

'கைதி 2', மற்றும் நலன் குமாரசாமி இயக்கத்தில் தயாராகும் படம் ஆகியவற்றின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு, ஏப்ரல் 14ஆம் திகதியன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே நடிகர் கார்த்தி 'பொன்னியின் செல்வன்' படத்தின் இரண்டாம் பாகத்திற்கான விளம்பர நிகழ்வுகளில் பங்கு பற்றுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right