logo

பிரஜின் நடிக்கும் ஃ (அக்கு) படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

Published By: Ponmalar

28 Mar, 2023 | 04:05 PM
image

'D3 'படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் பிரஜின் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு ஃ (அக்கு) என பெயரிடப்பட்டு, அதன் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.

நடிகரும், இயக்குநருமான வி. ஸ்டாலின் இயக்கத்தில் தயாராகி இருக்கும் திரைப்படம் ஃ (அக்கு). இதில் நடிகர் பிரஜின் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை காயத்ரி ரமா நடித்திருக்கிறார்.

தேவசூர்யா ஒளிப்பதிவு செய்யவிருக்கும் இந்த திரைப்படத்திற்கு சதீஷ் செல்வம் இசையமைக்கிறார். மிஸ்ட்ரி திரில்லர் ஜேனரில் தயாராகும் இந்த திரைப்படத்தை அம்பிகாபதி மூவி மேக்கர்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் பொன். செல்வராஜ் தயாரிக்கிறார்.

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. ஃபர்ஸ்ட் லுக்கில் நடிகர் பிரஜினின் தோற்றமும், ஃ (அக்கு) என்ற டைட்டில் குருதியால் வடிவமைக்கப்பட்டிருப்பதும், தலைப்பின் கீழ் கர்மா ஒருபோதும் மன்னிப்பதில்லை-  என ஆங்கிலத்தில் எழுதப்பட்ட டேக் லைன் இணைக்கப்பட்டிருப்பதால் படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right