யாழ்ப்பாணம் தொழில்நுட்பவியல் கல்லூரியின் வைரவிழா நூல் வெளியீடு

Published By: Ponmalar

28 Mar, 2023 | 03:18 PM
image

(எம்.நியூட்டன்)

யாழ்ப்பாணம் தொழில்நுட்பவியல் கல்லூரியின் வைரவிழா நேற்று திங்கட்கிழமை  யாழ். தொழில்நுட்பவியல் கல்லூரி பணிப்பாளர் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ்ப்பாணம் பல்கலைக்கழக தூணைவேந்தர் பேராசிரியர் எஸ் சற்குணறாஜா, சிறப்பு விருந்தினராக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் சிவபாலசுந்தரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

வரவேற்பு நடனத்துடன் ஆரம்பமான நிகழ்வில் விருந்தினர்கள் உரையை தொடர்ந்து கல்லூரியின் நூல் வெளியீடு இடம்பெற்றது. வைர விழா நூலினை பிரதம விருந்தினர் வெளியீட்டு வைக்க அதன் முதல்பிரதியை தொழிலதிபர் பாஸ்கரன் பெற்றுக்கொண்டார். நிகழ்வில் மதத்தலைவர்கள். பழைய மாணவர்கள் , ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர் உட்பட பலரும் கலந்து கொண்டார்கள்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right