(என்.வீ.ஏ.)
வட மாகாண பாட்மின்டன் சங்கத்தினால் கிளிநோச்சியில் அமைந்துள்ள மாகாண உள்ளக அரங்கில் நடத்தப்பட்ட வட மாகாண பாட்மின்டன் சுற்றுப் போட்டியில் ஆதிக்கம் செலுத்திய எஸ். சௌமியா 3 சம்பியன் பட்டங்களை சுவீகரித்து வரலாறு படைத்தார்.
பெண்களுக்கான ஒற்றையர், இரட்டையர், கலப்பு இரட்டையர் ஆகிய 3 பிரிவுகளிலும் சௌமியா சம்பியனானார்.
ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் சம்பியனான ரி. சில்வியன், கலப்பு இரட்டையர் பிரிவிலும் சம்பியனானார்.
இந்த சுற்றுப் போட்டியில் பெண்களுக்கான ஒற்றையர் மற்றும் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு என்பன பிரதான போட்டிகளாக அமைந்தன.
பெண்களுக்கான பகிரங்க ஒற்றையர் இறதிப் போட்டியில் ஆர். ராகவியை எதிர்த்தாடிய சௌமியா 21 - 15, 21 - 13 என்ற புள்ளிகளைக் கொண்ட 2 நேர் செட்களில் வெற்றிபெற்று சம்பியன் பட்டதை சுவீகரித்தார்.
ஆண்களுக்கான பகிரங்க ஒற்றையர் இறுதிப் போட்டியில் கே. துசனை எதிர்த்தாடிய ரி. சில்வியன் 21 - 14 என்ற புள்ளிகள் அடிப்படையில் முதலாவது செட்டில் வெற்றிபெற்றார். 2ஆவது செட்டில் 16 - 11 என்ற புள்ளிகள் அடிப்படையில் சில்வியன் முன்னிலையில் இருந்தபோது துசன் உபாதைக்குள்ளாகி போட்டியிலிருந்து வாபஸ் பெற்றார். இதனை அடுத்து சில்வியனுக்கு வெற்றி அளிக்கப்பட்டு சம்பியன் பட்டத்தை தனதாக்கிக்கொண்டார்.
இது இவ்வாறிருக்க, பெண்களுக்கான இரட்டையர் பிரிவு இறுதிப் போட்டியில் ஆத்மிகா, எம். கவின்யா ஜோடியினரை 21 - 9, 21 - 15 புள்ளிகளைக் கொண்ட 2 நேர் செட்களில் சௌமியா, பி. ஒலிவியா ஜோடியினர் வெற்றிகொண்டு சம்பியனாகினர்.
கலப்பு இரட்டையர் பிரிவில் சில்வியனுடன் ஜோடி சேர்ந்து சௌமியா சம்பினானார்.
கலப்பு இரட்டையர் இறுதிப் போட்யில் ஆர். சுலக்சன், எஸ். தனோஜனா ஜோடியினரை சந்தித்த சௌமியா, சில்வியன் ஜோடியினர் 21 - 12, 21 - 16 என்ற புள்ளிகள் அடிப்படையில் வெற்றிபெற்று சம்பியனாகினர்.
ஆண்களுக்கான இரட்டையர் பிரிவு இறுதிப் போட்டியில் ஜ. தனுகாந்த், ஆர். யுதாகரன் ஜோடியினரை சந்தித்த எல். ஆர். ரெமின்சன், ரி. துஷ்யந்தன் ஜோடியினர் 21 - 13, 21 - 9 என்ற புள்ளிகளைக் கொண்ட 2 நேர் செட்களில் வெற்றிபெற்று சம்பியனாகினர்.
ஸ்ரீலங்கா பாட்மின்டன் நிறுவனத் தலைவர் ரொஹான் டி சில்வா சிறப்பு அதிதிகளில் ஒருவராகக் கலந்துகொண்டு பரிசில்களை வழங்கினார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM