(நெவில் அன்தனி)
லங்கா பிறீமியர் லீக் (LPL) 4ஆவது அத்தியாயத்தை ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் (SLC) எதிர்வரும் ஜுலை, ஆகஸ்ட் மாதங்களில் நடத்தவுள்ளது.
ஐந்து அணிகள் பங்குபற்றும் 4ஆவது எல்பிஎல் அத்தியாயம் 3 சர்வதேச விளையாட்டரங்குகளில் நடைபெறவுள்ளது.
இப் போட்டி ஜூனல 31ஆம் திகதி ஆரம்பமாகி ஆகஸ்ட் 22ஆம் திகதி நிறைவடையும் என ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது.
'இந்த சுற்றுப் போட்டியை ஜுலை, ஆகஸ்ட் மாதங்களில் நடத்துவதற்கு நாங்கள் தீர்மானித்துள்ளோம். இந்தக் காலப்பகுதியிலேயே வெளிநாட்டு வீரர்களை வெகுவாக கவர்ந்திழுக்கக் கூடியதாக இருக்கும். அத்துடன் இலங்கையின் சர்வதேச கிரிக்கெட் நாட்காட்டிக்கு மிகவும் பொருத்தமாக அமையும்' என லங்கா பிறீமியர் லீக் போட்டி பணிப்பாளர் சமன்த தொடன்வல தெரிவித்தார்.
சர்வதேச வீரர்களின் பங்கேற்புடன் இலங்கையில் நடத்தப்படும் அதி உயரிய உள்ளூர் கிரிக்கெட் போட்டி இதுவாகும்.
இந்த சுற்றுப் போட்டியில் பங்குபற்றும் ஒவ்வொரு அணியிலும் 6 வெளிநாட்டு வீரர்களும் 14 உள்ளூர் வீரர்களுமாக 20 வீரர்கள் பதிவுசெய்யப்படுவர் .
நடந்து முடிந்த 3 அத்தியாயங்களிலும் திசர பெரேரா தலைமையிலான ஜெவ்னா அணி சம்பியனாகியிருந்தது.
அங்குரார்ப்பண அத்தியாயத்தில் ஜெவ்னா ஸ்டாலியன்ஸும் அடுத்த 2 அத்தியாயங்களில் ஜெவ்னா கிங்ஸும் சம்பியனாகியிருந்தன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM