இலாபமடையும் அரச நிறுவனங்களை தனியார் மயப்படுத்துவதன் பின்னணி என்ன ? -சரித ஹேரத் கேள்வி

Published By: Digital Desk 5

28 Mar, 2023 | 02:15 PM
image

(இராஜதுரை ஹஷான்)

அரச நிறுவனங்களை மறுசீரமைப்பதாக குறிப்பிட்டுக் கொண்டு இலாபமடையும் அரச நிறுவனங்களை தனியார் மயப்படுத்துவதன் பின்னணி என்ன, அரச நிறுவனங்களை மறுசீரமைக்கும் வழிமுறை பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

தன்னிச்சையான முறையில் அரச நிறுவனங்களை தனியார்மயப்படுத்தினால் பாரிய விளைவுகளை அரசாங்கம் எதிர்கொள்ள நேரிடும் என பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சரித ஹேரத் தெரிவித்தார்.

சுதந்திர மக்கள் சபை காரியாலயத்தில் செவ்வாய்க்கிழமை (28) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

நாடு வங்குரோத்து நிலையில் இருந்து மீண்டு விட்டது. நாடு வழமைக்கு திரும்பி விட்டது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குறிப்பிடுகிறார்.

உள்ளூராட்சிமன்றத் தேர்தலுக்கு தேவையான நிதியை விடுவிக்குமாறு குறிப்பிட்டால் நாடு வங்குரோத்து, தேர்தல் இல்லை என்று குறிப்பிட்டால் நாடு வங்குரோத்து நிலையில் இருந்து மீண்டு விட்டது என்பது அரசாங்கத்தின் நிலைப்பாடாக உள்ளது.

உள்ளூராட்சிமன்றத் தேர்தல் விவகாரத்தில் நாடு வங்குரோத்து நிலையில் இல்லை, ஆளும் தரப்பே வங்குரோத்து நிலையில் உள்ளது. உள்ளூராட்சிமன்றத் தேர்தல் தொடர்பில் எதிர்வரும் நாட்களில் உரிய சட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்போம்.

பொருளாதாரப் பாதிப்பில் இருந்து மீள்வதற்கு இலங்கை இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம் 16 தடவைகள் சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை பெற்றுக்கொண்டுள்ளது,

ஆனால் நாடு முன்னேற்றமடையவில்லை. நல்லாட்சி அரசாங்கம், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான இரு அரசாங்கங்களினால் பொருளாதாரம் பாதிக்கப்பட்டது என்பதை ஆளும் தரப்பினர் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை பெற்றுக்கொண்டுள்ளோம், ஆகவே இனி பிரச்சினையில்லை என ஆளும் தரப்பினர் குறிப்பிடுவது அடிப்படையற்றது, நாடு என்ற ரீதியில் இனி தான் பல நெருக்கடிகளுக்கு முகம் கொடுக்க வேண்டும். கடன் மறுசீரமைப்புக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது, ஆகவே கட்டாயம் கடன் மறுசீரமைக்கப்பட வேண்டும்.

அரச நிறுவனங்கள் மறுசீரமைக்கப்பட வேண்டும் என சர்வதேச நாணய நிதியம் குறிப்பிட்டதை தொடர்ந்து அரசாங்கம் நட்டமடையும் அரச நிறுவனங்களை விடுத்து இலாபமடையும் அரச நிறுவனங்களை தனியார் மயப்படுத்த அவதானம் செலுத்தியுள்ளது.

ஸ்ரீ லங்கன் எயார்லைன் நிறுவனத்தை அரசாங்கத்தினால் தொடர்ந்து நிர்வகிக்க முடியாது என கோப் குழுவின் தலைவராக மூன்று அறிக்கைகளை சமர்ப்பித்துள்ளேன். பெற்றோலிய கூட்டுத்தாபனம், மின்சார சபை ஆகியவற்றை மறுசீரமைக்கும் நடவடிக்கைகள் அவதானத்துடன் மேற்கொள்ள வேண்டும்.

நட்டமடையும் அரச நிறுவனங்களை மறுசீரமைக்கும் தீர்மானத்தை ஜனாதிபதி மற்றும் அமைச்சரவை மாத்திரம் எடுக்க முடியாது, ஏனெனில் இந்த ஜனாதிபதிக்கும், அரசாங்கத்திற்கும் மக்களாணை கிடையாது, ஆகவே மறுசீரமைக்கும் நிறுவனங்கள் தொடர்பான தீர்மானத்தை பாராளுமன்றம் எடுக்க வேண்டும். லிட்ரோ நிறுவனம், காப்புறுதி நிறுவனம், டெலிகொம் நிறுவனம் ஆகியவற்றின் அரச பங்குகளை தனியார் மயப்படுத்துவதன் பின்னணி என்ன, ஜனாதிபதி,அமைச்சரவை மாத்திரம் நாடு அல்ல ஆகவே கடன் மறுசீரமைப்பு மற்றும் மறுசீரமைக்கப்படும் அரச நிறுவனங்கள் தொடர்பில் பாராளுமன்றத்திற்கு அறிவிக்க வேண்டும்.மக்களின் அபிலாசைகளை கோர அரசாங்கம் தயார் இல்லை,ஆகவே பாராளுமன்றத்தின் ஊடாக உரிய தீர்மானத்தை எடுக்க வேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22