இலவச அரிசி விநியோகம் கல்முனையில் ஆரம்பித்து வைப்பு

Published By: Ponmalar

28 Mar, 2023 | 02:08 PM
image

அரசின் நலத்திட்ட உதவிகள் பெறுபவர்களுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் முன்மொழியப்பட்ட இலவச அரிசி வழங்கும் திட்டத்தின் கீழ் கல்முனைப் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட மக்களுக்கு இலவச அரிசி வழங்கும் நிகழ்வு மருதமுனை சமுர்த்தி வங்கியில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

கல்முனைப் பிரதேச செயலாளர் ஜே.லியாக்கத் அலி தலைமையில நடைபெற்ற இந்நிகழ்வில் தலைமைப் பீட சிரேஷ்ட சமுர்த்தி முகாமையாளர் ஏ.ஆர்.எம்.சாலிஹ்,  சமுர்த்தி வங்கி முகாமையாளர் ஏ.எல்.எம்.நஜீப் உட்பட சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்,விவசாய அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டரை்.

இலவச அரிசி விநியோகம் மருதமுனை சில பிரிவு மக்களுக்கு வழங்கி வைக்கப்பட்டதுடன் ஏனைய பிரிவுகளுக்கு தொடராக அரிசி விநியோகம் வழங்கப்படும் என பிரதேச செயலாளர் ஜே.லியாகத் அலி இதன்போது தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right