கழிவகற்றல் கட்டமைப்பு திருத்தப்பணியில் ஈடுபட்ட ஊழியர்கள் இருவர் உயிரிழப்பு - கொட்டாஞ்சேனை பகுதியில் சம்பவம்

Published By: Digital Desk 3

28 Mar, 2023 | 12:00 PM
image

(எம்.வை.எம்.சியாம்)

கொழும்பு, கொட்டாஞ்சேனை பகுதியில் நேற்று (27) கழிவகற்றல் கட்டமைப்பு திருத்தப்பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த மூவரில் இருவர் தவறி விழுந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

கொட்டாஞ்சேனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஹெட்டியாவத்தை சந்தியில் கழிவகற்றல் கட்டமைப்பு திருத்தப்பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த இருவர் குழியில் தவறி விழுந்துள்ளனர். பின்னர் இருவரும் மீட்கப்பட்டு கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

இதன்போது உயிரிழந்தவர்கள் 28 மற்றும் 38 வயதுடைய கொழும்பு பிரதேசங்களை சேர்ந்த கொழும்பு மாநகர சபை ஊழியர்கள் என்று பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர்களில் ஒருவர் கழிவகற்றல் குழியில் தவறி விழுந்துள்ள நிலையில் அவரை காப்பாற்றுவதற்கு முயன்ற  மற்றைய நபரும் குழிக்குள் தவறி விழுந்துள்ளதாக  ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் கொட்டாஞ்சேனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஐக்கிய அரபு எமிர் குடியரசுடன் முதலீட்டு...

2025-02-11 17:20:06
news-image

முகத்துவாரத்தில் ஹெரோயின் போதைப்பொருளுடன் ஒருவர் கைது!

2025-02-11 18:38:34
news-image

லிட்ரோ எரிவாயு விலையில் மாற்றமில்லை

2025-02-11 17:18:28
news-image

ஜப்பானிய காகித மடிப்புக் கலையை ஊக்குவிக்கும்...

2025-02-11 17:21:24
news-image

அரச சேவையில் 7,456 பதவி வெற்றிடங்கள்...

2025-02-11 17:22:36
news-image

தையிட்டி சட்டவிரோத விகாரையை அகற்றுமாறு கோரி...

2025-02-11 17:04:54
news-image

அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் சபாநாயகர் விடுத்துள்ள...

2025-02-11 16:25:59
news-image

வவுனியாவில் 2 கிலோ கஞ்சாவுடன் இளைஞன்...

2025-02-11 16:23:23
news-image

திருகோணமலையில் நான்கு வலம்புரிச் சங்குகளுடன் மூவர்...

2025-02-11 16:15:00
news-image

முச்சக்கரவண்டி மோதி ஒருவர் உயிரிழப்பு ;...

2025-02-11 16:10:33
news-image

புதிய மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தை...

2025-02-11 16:45:37
news-image

கஞ்சா, ஐஸ் போதைப்பொருளுடன் பொலிஸ் கான்ஸ்டபிள்...

2025-02-11 16:02:43