(என்.வீ.ஏ.)
இந்தியாவில் அக்டோபர் மாதம் ஆரம்பமாகவுள்ள 12ஆவது ஐசிசி உலகக் கிண்ண (50 ஓவர்) கிரிக்கெட் போட்டியில் நேரடியாக விளையாடும் இலங்கையின் வாய்ப்பு மேலும் அருகிவருகிறது.
கிறைஸ்ட்சேர்ச்சில் இன்று செவ்வாய்க்கிழமை (28) நடைபெறவிருந்த நியூஸிலாந்துக்கும் இலங்கைக்கும் இடையிலான 2ஆவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டி கடும் மழையினால் முழுமையாக கைவிடப்பட்டது.
இதன் காரணமாக உலகக் கிண்ணப் போட்டியில் இலங்கை நேரடியாக பங்குபற்ற தகுதிபெறுமா என்ற சந்தேகம் வலுக்கத் தொடங்கியுள்ளது.
இரண்டாவது போட்டி கைவிடப்பட்டதால் நியூஸிலாந்துக்கும் இலங்கைக்கும் தலா 5 புள்ளிகள் வழங்கப்பட்டுள்ளன.
ஐசிசி கிரிக்கெட் உலகக் கிண்ண சுப்பர் லீக்கில் 77 புள்ளிகளுடன் 10ஆம் இடத்தில் இருந்த இலங்கை தற்போது 82 புள்ளிகளுடன் அணிகள் நிலையில் 9ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளது.
மேற்கிந்தியத் தீவுகள் 88 புள்ளிகளுடன் தொடர்ந்தும் 8ஆம் இடத்தில் இருக்கிறது.
இதேவேளை, 78 புள்ளிகளுடன் 10ஆம் இடத்தில் இருக்கும் தென் ஆபிரிக்கா, தனது சொந்த நாட்டில் நடைபெறவுள்ள சுப்பர் லீக் கிரிக்கெட் தொடரில் பலம்குன்றிய நெதர்லாந்தை சந்திக்கவுள்ளது. அந்த 2 போட்டியிலும் தென் ஆபிரிக்கா வெற்றிபெற்றால், உலகக் கிண்ண தகுதிகாண் சுற்றில் இலங்கை விளையாட நேரிடும்.
ஒருவேளை தென் ஆபிரிக்கா ஒரு போட்டியில் தோல்வி அடைந்து நியூஸிலாந்துடான கடைசிப் போட்டியில் இலங்கை வெற்றிபெற்றால் உலகக் கிண்ணப் போட்டியில் இலங்கை நேரடியாக விளையாட தகுதிபெறும்.
இது இவ்வாறிருக்க, அணிகள் நிலையில் 68 புள்ளிகளுடன் தற்போது 11ஆம் இடத்தில் இருக்கும் அயர்லாந்து எதிர்வரும் மே மாதம் 3 போட்டிகள் கொண்ட சர்வதேச ஒருநாள் சுப்பர் லீக் தொடரில் பங்களாதேஷை எதிர்த்தாடவுள்ளது.
ஒருவேளை, இலங்கை, தென் ஆபிரிக்கா ஆகிய அணிகளுக்கு பாதகமான முடிவுகள் கிடைத்து அயர்லாந்து 3 போட்டிகளிலும் வெற்றிபெற்றால் உலகக் கிண்ணப் போட்டியில் நேரடியாக விளையாட அயர்லாந்து தகுதிபெறும்.
இலங்கைக்கும் நியூஸிலாந்துக்கும் இடையிலான 3ஆவதும் கடைசியுமான சர்வசேத ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஹெமில்டனில் வெள்ளிக்கிழமை (31) நடைபெறவுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM