(ம.ரூபன்)
பொலிஸ் மா அதிபர் சீ.டி.விக்கிரமரட்னவின் பதவிக்காலம் 3 மாதங்கள் நீடிக்கப்பட்டுள்ளது. பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோனை நியமிப்பதற்கு ஜனாதிபதி தீர்மானித்தார்.குற்றவியல் வழக்கு தொடர்புடைய எந்த அதிகாரியையும் இப்பதவிக்கு நியமிக்கவேண்டாம் என சட்டத்தரணிகள் சங்கம் பொது அமைப்புக்கள் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்திருந்தன.
இலங்கை பொலிஸ் வரலாற்றில் சிவில் சேவை அதிகாரியை இப்பதவிக்கு நியமித்தவர் பிரதமர் பண்டாரநாயக்காவே.1959 மார்ச் 3 துறைமுக ஊழியர்களின் தொழிற்சங்க போராட்டத்தை கலைத்து கைது செய்ய நடவடிக்கை எடுக்குமாறு (IGP) ஒஸ்மன்ட் டீ சில்வாவிடம் பிரதமர் கேட்டதும் அதனை சட்டவிரோதமானது என மறுத்ததால் அவரை 1959 ஏப்ரல் 24 கட்டாய ஓய்வூதியம் பெறச்செய்தார். (1955-1959).
பிரியாவிடையின்போது பிரதமரின் கோரிக்கையை நிராகரித்த காரணங்களையும் சட்டம் ஒழுங்கை பேணும் பொலிஸாரின் பொறுப்புகள் கடமைகளையும் வலியுறுத்தி அரசியல் தலைவர்களின் பணிப்புரைக்கு செயற்படமுடியாது எனவும் பொலிஸ் அதிகாரிகளுக்கு ஒஸ்மன்ட் அறிவுரை கூறினார்.
பிரதமருக்கு எதிராக சிலர் சதி செய்வதாக பிக்கு ஒருவர் தெரிவித்த புகாரை விசாரணை செய்தவர். பிரதமருக்கு விசேட பாதுகாப்பு அளிக்க முன்வந்தபோது பிரதமர் அதனை ஏற்கவில்லை.1959 செப்டம்பர் 26 பிரதமரின் படுகொலையின்போது ஒஸ்மன்ட் இதனை நினைவுபடுத்தினார்.
1956 ஏப்ரல் தேர்தலில் பௌத்தத்துக்கு முன்னுரிமை என பதவிக்கு வந்து பௌத்தரான ஒஸ்மன்டை பதவி நீக்குவதாக பௌத்த அமைப்புக்கள் கண்டித்தன.தனது நண்பரும் சிவில் சேவை அதிகாரியுமான பௌத்தரான வால்டர் அபேயக்கோனை நியமிப்பதாக அவர்களுக்கு கூறினார்.
பண்டாரநாயக்காவை பின்பற்றி அவருக்கு பின்பு ஆட்சிக்கு வந்தவர்கள் படைத்துறையில் பௌத்தர்களுக்கும் அரசுத்தலைவர்களின் உறவினர்கள் நண்பர்களுக்கும் முன்னுரிமை அளித்து வருகின்றனர். இதுவரை ருத்திரா ராஜசிங்கம் (1982),ரீ.ஈஆனந்தராஜா (2002) ஆகிய இரு தமிழர்களே பொலிஸ் மா அதிபர்கள்.
ஒஸ்மன்ட் டீ சில்வாவுக்கு அடுத்த தரத்தில் உள்ள பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள் சீ.சீ.திசநாயக்கா,எஸ்.ஏ.திசநாயக்கா (சகோதரர்கள்) சிட்னி டீ சொய்சா ஆகியோர் கத்தோலிக்கர்கள் என்பதால் அவர்களை தவிர்த்து பொலிஸ் துறையை அறிந்திராதவரை நியமித்தததை உயர் பொலிஸ் அதிகாரிகள் கண்டித்தனர். சிரேஷ்ட (DIG) சீ.சீ.திசநாயக்காவும் சில பொலிஸ் அதிகாரிகளும் பதவி விலக முன்வந்து பின்னர் கைவிட்டனர்.
9 பொலிஸ் அத்தியட்சகர்கள் கிறிஸ்தவர்கள்.எனவே பௌத்தரான நன்கு அனுபவமும் ஆளுமைத்திறனுமுடைய (SP) ஸ்ரான்லி சேனாநாயக்காவை (IGP) ஆக நியமிக்குமாறும்,அவருக்கு கீழ் நாம் பணியாற்றுவோம் எனவும் பொலிஸ் அதிகாரிகள் ( DIG, SP,ASP) பிரதமரை சந்தித்து உறுதியளித்தனர். ஆனால்,பிரதமர் அதனை நிராகரித்து அபேயக்கோனை 1959 மே 1 IGP ஆக நியமித்தார்.
1962 ஜனவரி 27 சிறிமாவோ ஆட்சியை கவிழ்க்க மேற்கொள்ளப்பட்ட சதிப்புரட்சியில் குற்றம் சுமத்தப்பட்ட படை அதிகாரிகளில் பிரதிப்பொலிஸ் மா அதிபர்களான சீ.சீ.திசநாயக்கா சிட்னி சொய்சா (ஓய்வு) முக்கியமானவர்கள். இச்சதித்திட்டத்தை (SP) ஸ்ரான்லி சேனாநாயக்கா மனைவிக்கு கூறியதால் சதி அம்பலமானது.
பண்டாரநாயக்கா நியமித்த IGP அபேயக்கோனை பிரதமர் சிறிமாவோ ஓய்வுபெறச்செய்து தனக்கு எதிரான சதிப்புரட்சி விசாரணைகளை முன்னெடுத்த ( DIG) எஸ்.ஏ.திசநாயக்காவை (CID) 1963 பெப்.3 பொலிஸ் மா அதிபராகவும் 1966 இல் ஓய்வுபெற்ற அவரை 1971 ஜே.வி.பி.ஆயுதப்போராட்ட காலம் பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளராகவும் நியமித்தார். 1970 செப். 13 ஸ்ரான்லி சேனாநாயக்கா பொலிஸ் மா அதிபரானார்.
இராணுவத்தில் சிரேஸ்ட அதிகாரி பெட்ரம் ஹெயின் உள்ள நிலையில் மருமகன் ரிச்சரிட் உடுகமவை 1963 டிசம்பர் 31 தளபதியாக சிறிமாவோ நியமித்தார்.1966 டட்லி சேனாநாயக்கா ஆட்சியை கவிழ்க்க சதிசெய்ததான வழக்கில் விடுதலையானர்.1970 தேர்தலில் மாத்தளையில் சுதந்திரக்கட்சியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.பாராளுமன்றம் வந்த முதல் இராணுவத்தளபதி.1979-1982 ஈராக் தூதுவர்.
1979 ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தனா மருமகன் திஸ்ஸ வீரதுங்கவை வடக்கின் தளபதியாக தமிழ் போராளிகளை ஒழிக்கும் பணிக்கும்,1981 இராணுவத்தளபதியாகவும் நியமித்தார்.1983 ஒரே மகன் ரவி ஜெயவர்த்தனாவை தேசிய பாதுகாப்பு ஆலோசகராவும்,விசேட அதிரடிப்படை உருவாக தளபதியாகவும்,சிங்கள ஊர்காவல் படையை அமைக்கும் அதிகாரியாகவும் நியமித்தார்.
மருமகன்மார் அனா செனிவிரட்னாவை 1978 பொலிஸ் மா அதிபராகவும்,நளின் செனிவிரட்னாவை 1985 இராணுவத்தளபதியாகவும் பின்னர் 1988 வடகிழக்கு ஆளுநராகவும் நியமித்தார். (இருவரும் சகோதரர்கள்). ஜனாதிபதி சந்திரிகா மாமனார் அனுருத்த ரத்வத்தையை 1994 பிரதிப்பாதுகாப்பு அமைச்சராக நியமித்து யுத்தத்தை நடத்தினார்.2005 ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தம்பி கோட்டாபயவை பாதுகாப்பு அமைச்சு செயலாளராக நியமித்தார்.
இதேபோன்று ஓய்வு பெற்ற படை அதிகாரிகள் தூதுவர்களாக,அரச நிறுவனங்களின் பணிப்பாளர்களாகவும் நியமிக்கப்படுகின்றனர்.கோட்டாபய ஜனாதிபதியானதும் சில ஓய்வுநிலை படை அதிகாரிகள் இவ்வாறு நியமித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM