லெப்பர்ட் 2 ரக இராணுவத் தாங்கிகளை உக்ரேனுக்கு ஜேர்மனி அனுப்பியுள்ளது என ஜேர்மனிய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்தள்ளது.
ஜேர்மனியில் தயாரிக்கப்பட்ட லெப்பர்ட்2 (Leopard 2 tanks) ரக நவீன இராணுவத் தாங்கிகளை தனக்கு வழங்குமாறு உக்ரேன் கோரி வந்தது.
ஆனால், இதற்கு ஆரம்பத்தில் ஜேர்மனி மறுத்தது. பின்னர் வேறு நாடுகள் இந்த தாங்கிகளை உக்ரேனுக்கு வழங்க ஜேர்மனி அனுமதியளித்தது. இறுதியில் தானும் உக்ரேனுக்கு இத்தாங்கிகளை வழங்க ஜேர்மனி கடந்த ஜனவரியில் சம்மதித்தது.
இந்நிலையில், உக்ரேனுக்கான லெப்பர்2 தாங்கிகளின் முதல் தொகுதி உக்ரேனுக்கு அனுப்பப்பட்டுள்தளாக ஜேர்மனிய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
நேட்டோ நாடுகளால் தயாரிக்கப்பட்ட மிகச் சிறந்த யுத்த தாங்கிகளாக லெப்பர்ட் 2 தாங்கிகள் கருதப்படுகின்றன.
ரஷ்யாவின் T90 தாங்கிகளை எதிர்த்துப் போரிடுவதற்கு ஏற்ப லெப்பர்ட் 02 தாங்கிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
ஐரோப்பாவில் சுமார் 2000 லெப்பர்ட் 2 தாங்கிகள் பாவனையில் உள்ளன. இத்தகைய தாங்கிகளை இயக்குவதற்கு உக்ரேனியர்களுக்கு ஜேர்மனி பல வாரங்கள் பயிற்சிகளை வழங்கின.
இதேவேளை, பிரிட்டனில் தயாரிக்கப்பட்ட சலெஞ்சர் 2 ரக இராணுவத் தாங்கிகள் ஏற்கெனவே உக்ரேனை வந்தடைந்துள்ளதாக உக்ரேன் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM