உயிர்த்த ஞாயிறு தாக்குதல் : பேராயர் தாக்கல் செய்த ரிட் மனுவை ஆராய திகதி குறிப்பு

Published By: Digital Desk 5

27 Mar, 2023 | 06:49 PM
image

(எம்.எம்.சில்வெஸ்டர்)

உயிர்த்த ஞாயிறு தின குண்டுத்தாக்குதல் தொடர்பிலான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவினால் சட்ட மா அதிபர் திணைக்களத்திற்கு விடுக்கப்பட்ட பரிந்துரைகளை செயற்படுத்துமாறு தொடர்பில் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகையினால்  மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு ஆராய்வதற்கான திகதி வெளியிடப்பட்டுள்ளது.

சோபித்த ராஜகருணா மற்றும்  தம்மிக்க கனேபொலகே ஆகியோரைக் கொண்ட நீதியரசர் குழு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளனர். 

திங்கட்கிழமை (27)  குறித்த ரிட் மனு மீதான விசாரணையின்போது, சட்ட மா அதிபர் சார்பில் மேலதிக சொலிஸிடர் ‍ ஜெனரல் பிரியன்த்த  நாவனவும், மனுதாரர் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகளினால் முன்வைக்கப்பட்ட  விடயங்களையும் கருத்துக்களையும் கருத்திற்கொண்ட ‍மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் குழு குறித்த மனு தொடர்பில் முன்வைக்கப்பட்ட  விடயங்களை உறுதிப்படுத்துவதற்காக எதிர்வரும் மே மாதம் 9 ஆம் திகதியன்று விசாரணைக்கு அழைக்கப்படும் என உத்தரவிட்டனர்.

உயிர்த்த ஞாயிறு தின குண்டுத்தாக்குத‍லை தடுப்பதற்கு முயற்சிகள் எடுக்கப்படாததனால், உயிர்த்த ஞாயிறு தின குண்டுத்தாக்குதல் தொடர்பிலான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு அறிக்கையில் பொலிஸார் சிலருக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு பரிந்துரை விடுக்கப்பட்டுள்ளபோதிலும், அது குறித்து எதுவிதுமான செயற்பாடுகளும் எடுக்கப்படாமல் இருப்பதாக  மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை நீதிமன்றிடம் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாடசாலைகளிலுள்ள ஆபத்தான கட்டிடங்கள் மற்றும் மரங்களை...

2023-12-11 21:18:06
news-image

இளைஞர் சமுதாயத்தை விவசாயத்தின் பக்கம் ஈர்க்கத்...

2023-12-11 20:57:33
news-image

கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் இருந்து 50...

2023-12-11 21:36:10
news-image

நியாயமான வரிக்கொள்கையையே எதிர்பார்க்கிறோம் - நாமல்

2023-12-11 18:26:32
news-image

இந்தியத் தூதரை சந்திக்க வடக்கு எம்.பி.க்களுக்கு...

2023-12-11 18:22:58
news-image

தமிழர்களை இலக்காகக் கொண்டு தகவல் திரட்டவில்லை...

2023-12-11 13:48:37
news-image

காணாமல்போன பாடசாலை மாணவி சடலமாக மீட்பு

2023-12-11 18:34:53
news-image

ரணிலும் சஜித்தும் ஒருபோதும் இணையப்போவதில்லை :...

2023-12-11 18:31:27
news-image

கிராம சேவகரின் வேலையை பொலிஸார் பார்க்கக்...

2023-12-11 13:40:57
news-image

கம்பஹாவில் நகை அடகுக் கடையில் கொள்ளை

2023-12-11 18:24:12
news-image

பெறுதிமதி சேர் வரி திருத்தச் சட்ட...

2023-12-11 17:59:32
news-image

யாழ். பல்கலை முன்னாள் கலைப்பீட மாணவர்...

2023-12-11 17:44:17