logo

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள்: அப்போலோ மருத்துவர்கள் தகவல்

Published By: Rajeeban

27 Mar, 2023 | 04:49 PM
image

கொரோனா   தொற்று பாதிப்புக்கு பிறகுசர்க்கரை நோய் ஞாபக மறதிசுவாச கோளாறு உள்ளிட்ட பிரச்சினைகள் பொதுமக்களிடையே அதிகரித்துள்ளதாக அப்போலோ மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். சுவாச மண்டலம் தொடர்பாக அப்போலோ மருத்துவமனையின் சார்பில் நெஞ்சக சிகிச்சைக்கான உச்சி மாநாடு-2023 சென்னையில் நேற்று நடைபெற்றது.

மருத்துவமனையின் மூத்த சுவாச மண்டலநிபுணர் ஆர்.நரசிம்மன் தலைமையில் நடைபெற்ற இம்மாநாட்டில் நெஞ்சக சிகிச்சைத்துறை மருத்துவ நிபுணர்கள் பலர் கலந்து கொண்டு  கொரோனா  காலத்தில் ஏற்பட்ட பாதிப்புகள் வயது வந்தோருக்கான தடுப்பூசி ஆஸ்துமா இன்ப்ளூயன்சா பாதிப்பு சுவாச நோய்கள் உள்ளிட்டவை குறித்து கலந்துரையாடினர்

குறிப்பாக  கொரோனா  தொற்று பாதிப்புக்கு பிந்தைய நிலையில் பெரும்பாலானவர்களுக்கு நுரையீரல் தொற்று அதிகரித்து உள்ளதாகவும் தற்போது பரவும் இன்ப்ளுயன்சா ஏ மற்றும் பி வகைகளின் காரணமாக தொற்று பாதிப்பு எளிதில் ஏற்படுவதாகவும் கூறி விவாதித்தனர். இதனால் சிகிச்சை அளிப்பதற்கு சவாலாக இருப்பதாகவும் தெரிவித்தனர்.

அப்போலோ மருத்துவமனை துணைத் தலைவர் ப்ரீத்தா ரெட்டி பேசுகையில் “ கொரோனா வின் தாக்கம் நமக்கு பலவற்றை கற்றுகொடுத்திருக்கிறது. எதிர்காலத்தில் மருத்துவத் துறையின் பயன்பாட்டை தெளிவுபடுத்தியுள்ளது. இந்திய மருத்துவத் துறையில்சமீப காலமாக அதிகரித்துவரும் முன்னேற்றங்கள் பாராட்டத்தக்கவை” என்றார்.

    கொரோனா தொற்று பாதிப்புக்குபிறகு சிலருக்கு உடல் சோர்வுஞாபக மறதி சுறுசுறுப்பு இல்லாமை நுரையீரல் கோளாறு போன்ற பல்வேறுபிரச்சினைகள் சீராக ஏற்படுவதை காணமுடிகிறது. சர்க்கரை நோய்பிரச்சினையும் பரவலாக கண்டறியப்பட்டுள்ளது. இன்ப்ளூயன்சாவுக்கு பிறகு மாரடைப்புகளும் அதிகரித்துள்ளன. ஏனெனில் கொரோனாவால் பாதிக்கப்படும்போது உடலின் மற்ற உறுப்புகளும் பாதிப்படைய வாய்ப்புள்ளது.என சுவாச மண்டல நிபுணர் ஆர்.நரசிம்மன் தொற்றுநோய் பிரிவு மருத்துவர் சுரேஷ்குமார் நிருபர்களிடம் இவ்வாறு அவர்கள் கூறினர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

காண்டாஸ் விமான  ஊழியர்களின் சீருடை விதிகளில்...

2023-06-09 16:43:20
news-image

ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தோரின் உடல்கள்...

2023-06-09 15:29:54
news-image

ரஷ்ய குடியிருப்புக் கட்டடத்தின் மீது ஆளில்லா...

2023-06-09 13:53:29
news-image

புகலிடம் நிராகரிக்கப்பட்டவர்களை நாடு கடத்துவதற்கான சட்டத்தை...

2023-06-09 12:46:05
news-image

டெல்லி மருத்துவமனையில் தீ விபத்து: 20...

2023-06-09 12:11:52
news-image

விமானத்தின் கதவு இருந்த இடத்தில் மேகம்...

2023-06-09 11:35:50
news-image

ஆப்கான் பள்ளிவாசலில் குண்டுவெடிப்பு: 11 பேர்...

2023-06-09 11:03:04
news-image

வீடியோ கேம்ஸ் மூலம் வளரிளம் பருவத்தினர்...

2023-06-09 10:43:28
news-image

டிரம்பின் ஜனாதிபதி கனவிற்கு மீண்டும் ஆபத்து...

2023-06-09 06:14:31
news-image

பிரான்சில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் 22...

2023-06-08 20:25:24
news-image

இந்தியா - இலங்கைக்கிடையிலான கப்பல் போக்குவரத்து...

2023-06-08 19:57:05
news-image

சத்திரசிகிச்சையின் பின் சிறந்த நிலையில் பாப்பரசர்:...

2023-06-08 17:18:43