(எம்.ஆர்.எம்.வசீம்)
மாகாணசபை மற்றும் உள்ளூராட்சி மன்றங்களை கண்காணிப்பதற்கு குழுவொன்றை அமைக்கும் அரசாங்கத்தின் தீர்மானத்துக்கு இணங்க முடியாது.
அவ்வாறானதொரு தீர்மானத்தை அரசாங்கம் எடுக்குமானால், தேர்தல் இடம்பெறுவது மேலும் பிற்படுத்தப்படும் என்பது தெளிவாகின்றது என பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாள் ராேஹன ஹெட்டியாரச்சி தெரிவித்தார்.
மாகாணசபை மற்றும் உள்ளூராட்சி மன்றங்களை கண்காணிப்பதற்கு அரசாங்கம் குழுவொன்றை அமைப்பதற்கு எடுத்திருக்கும் தீர்மானம் தொடர்பாக குறிப்பிடுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
இதுதொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,
மாகாணசபைகளை கண்காணிப்பதற்கும் உள்ளூராட்ச்சி மன்றங்களை கண்காணிப்பதற்கும் குழுவொன்றை அமைப்பதற்கு அரசாங்கம் பிரேரித்திருப்பதாக தெரியவருகிறது.
எந்தவொரு தேர்தலையும் அண்மைக்காலத்தில் நடத்துவதற்கு அரசாங்கம் எந்த தயாரும் இல்லை என்பதே இதன் மூலம் தெளிவாகின்றது.
அதேபோன்று கண்காணிப்பு குழு அமைப்பதன் மூலம் நிறைவேற்றுத்துறை இந்த நிறுவனங்களின் அதிகாரங்களை மீண்டும் தனது கையில் வைத்துக்கொள்ளும் நிலையே ஏற்படுகிறது. இவ்வாறான நிலைமை ஜனநாயக நாடொன்றுக்கு எந்தவகையிலும் பொருத்தம் இல்லை.
அதனால் நாட்டின் ஜனநாயகம், அதிகார பரவலாக்கம், அபிவிருத்தி சமநிலையை பாதுகாத்துக்கொள்ளும் அதிகாரம் இருப்பது பாராளுமன்றத்துக்காகும்.
அதிகாரங்கள் தனி ஒருமனிதனை சுற்றி இருப்பது எந்தவொரு நாட்டுக்கும் நன்மையாக அமையப்போவதில்லை. அதனால் இதுதொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர்களின் கவனம் இதுதொடர்பாக செலுத்தப்படவேண்டும்.
அத்துடன் பாராளுமன்றத்தில் இருக்கும் ஆளும் எதிர்க்கட்சி யாராக இருந்தாலும் அரசாங்கத்தின் இந்த தீர்மானம் ஒரு தரப்பினருக்கு நல்லதாக இருந்தாலும் நாடு என்றவகையில் ஜனநாயகத்தின் பெறுமதியை கருத்திற்கொண்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் இதுதொடர்பாக ஒன்றாக செயற்பட வேண்டும்.
இந்த சந்தர்ப்பத்தில் இதனை உங்களால் பாதுகாக்க முடியாமல் போனால் எதிர்காலத்தில் இதன் பெறுபேறு உங்களுக்கு எதிராகவே அமையும்.ஏனெனில் ஜனநாயக தேர்தல் முறையில் அடுத்த முறை நீங்கள் எதிர்க்கட்சியில் இருக்க வேண்டி ஏற்பட்டால் இதன் பாதிப்பு உங்களுக்கே ஏற்படும் என்றார்.















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM