நோக்கம் நிறைவேறியதா? - 20 இல் ஈராக்கிய போர்

Published By: Digital Desk 3

27 Mar, 2023 | 04:02 PM
image

வினோத் மூனசிங்க

2003 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில், அமெரிக்கா உலகின் முன்னணியில் இருந்தது. ஏக வல்லரசாக, அதன் சித்தாந்தவாதிகள் அமெரிக்காவை "உலகளாவிய பொலிஸ்காரர்" என்று வெளிப்படையாகப் கூறுவதால், “அமெரிக்காவால் மேற்பார்வை செய்யப்படுகின்ற சர்வதேச ரீதியான சமாதானத்தை” (Pax Americana) அமுலாக்கின்ற பலதரப்பட்ட பிரதான போர்களில் அது போராடுகின்றது. அந்த மார்ச் மாதம், அமெரிக்கா ஈராக் மீது படையெடுத்ததுடன், இன்றைய அதிகரித்த பல்முனை உலகில் விளைவாகியுள்ள நிகழ்வுகளின் தொடரை இயக்கியது.

அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யூ புஷ் தனது குடியரசுக்கட்சி மற்றும் அரசியல் பங்காளிகளின் அழுத்தத்தின் கீழ் படையெடுப்பை ஆரம்பித்தார். ஈராக்கின் எண்ணெய் வளம் மட்டுமல்லாது, அதன் அதிகார எண்ணத்தை பிராந்தியத்தில் விரிவாக்குவதற்கான வசதியளிக்கின்ற தந்திரோபாய இடமாகவும் பார்க்கப்பட்டது.

புஷ்ஷின் மூதாதையரான பில் கிளிண்டன் 1998 இல் ஈராக் விடுதலை சட்டமூலத்திற்கான தனது ஒப்புதலில் கையெழுத்திட்டதன் மூலம் படையெடுப்பிற்கு அடித்தளமிட்டார். ஈராக் "பேரழிவு ஆயுதங்களை" தயாரித்ததாக அமெரிக்கா பொய்யாகக் குற்றம் சாட்டி அதன் படையெடுப்பு ஊடக பிரச்சாரங்கள் மூலமாக முன்னுரைத்ததுடன் இது ஈராக் மற்றும் அல்கொய்தா பயங்கரவாதக் குழுவிற்கும் இடையேயுள்ள தவறான சமத்துவத்தை அமெரிக்கர்களின் மனதில் உருவாக்கியது.

1991 வளைகுடாப் போருக்குப் பிறகான பொருளாதாரத் தடைகளின் கீழ், அமெரிக்காவும் இங்கிலாந்தும் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக ஈராக் மீது தொடர்ந்து குண்டுவீசின. அமெரிக்கா 2001 ஆம் ஆண்டு ஆரம்பித்து, 30 மில்லியன் லிட்டர் எரிபொருளை சேமிப்பது போன்ற அமைப்புகளுடன், நாளாந்தம் படைகளுக்கு தேவைப்படும் 9 மில்லியன் லிட்டர் எரிபொருளை அமெரிக்காவிற்கு குவைத்/ஈராக் எல்லை வரை வழங்குவதற்காக ஒரு விசேட குழாய்த்தொகுதியுடன் படையெடுப்புக்கான தளவாட கட்டமைப்பை தயாரித்தது

அதிர்ச்சி மற்றும் பிரமிப்பு

1991 இல் வளைகுடாப் போரின் போது அமெரிக்கா ஈராக் மீது வீடியோ கேமை நினைவூட்டும் வான்வழித் தாக்குதலுடன் தாக்குதலை நடாத்தியது. இந்த முறை அவர்கள் தங்கள் திட்டத்தை புதிய "விளைவுகள் அடிப்படையிலான" அணுகுமுறையை அடிப்படையாகக் கொண்டுள்ளதுடன், இதன் மூலம் பென்டகன் அதன் "வான்தரை போர்" எனும் கோட்பாட்டை மாற்றியது.

1983 கிரனாடா தோல்வியைத் தொடர்ந்து நீண்ட ஆராய்ச்சி காலத்திற்குப் பிறகு உருவாக்கப்பட்ட புதிய கோட்பாடானது "அதிர்ச்சி மற்றும் பிரமிப்பு" அல்லது "விரைவான ஆதிக்கம்" என்று அறியப்படுகிறது, இது நாஜி "தீவிரமான தாக்குதலைப்" (Blitzkrieg) போலவே செயற்படும் நோக்கம் கொண்டதுடன், இது எதிரியின் தலைமையை உறைய வைப்பதற்காக அச்சுறுத்துவதை நோக்கமாகக் கொண்டதாகும். ஜோர்ஜ் டபிள்யூ புஷ்ஷின் பாதுகாப்புச் செயலரான டொனால்ட் ரம்ஸ்பீல்ட் இதனை "நிலைமாற்றம்" என்று குறிப்பிட்டு ஈராக்கிற்குப் பிரயோகித்தார். பென்டகன் விளக்கக்காட்சியில், எண்ணக்கருவுடன் தொடர்புடைய ஒரு அதிகாரி கூறுகையில்

"... நாம் உருவாக்க முயற்சிக்கும் விளைவுகள், சாத்தியமான இராணுவ நடவடிக்கைகளின் ஆரம்பத்திலேயே மிகவும் வெளிப்படையாகவும், மிகவும் அதிகமாகவும் இருக்க வேண்டும், சண்டையிட்டு இறப்பதைத் தவிர அல்லது விட்டுக்கொடுப்பதைத் தவிர வேறு உண்மையான மாற்று இங்கே இல்லை என்பதை எதிரி விரைவாக உணர்ந்துகொள்ள வேண்டும்.”

" ஈராக் சுதந்திர நடவடிக்கை" என்ற குறியீட்டுப் பெயரிடப்பட்ட இந்த நடவடிக்கைக்கான உத்தியானது, 1,800 அமெரிக்க, அவுஸ்திரேலிய, பிரிட்டிஷ் மற்றும் கனேடிய விமானங்களைப் பயன்படுத்தும் ஒரு திடீர் தாக்குதலை உள்ளடக்கியது. முதல் இரண்டு நாட்களில், "ஈராக்கை உடல் ரீதியாகவும், உணர்ச்சி ரீதியாகவும் மற்றும் உளவியல் ரீதியாகவும் சிதைக்கும்" நோக்கத்துடன் ஈராக்கிய துருப்புக்கள், சக்தி மற்றும் நீர் வழங்கல்களை இலக்காக கொண்ட 800 க்கும் மேற்பட்ட ஏவுகணைகள் மற்றும் 2,500 க்கும் மேற்பட்ட குண்டுகளின் வரலாறு காணாத ஏவுகையை கொண்டிருந்தது. 

வான்வழி ஆயுதங்களில் 10% மட்டுமே துல்லியமாக வழிநடத்தப்பட்ட "பாலைவனப் புயல் நடவடிக்கைக்கு" மாறாக, இந்த புதிய நடவடிக்கையானது 80% துல்லியமான வழிகாட்டுதல் ஆயுதங்களைக் கொண்டிருப்பதை நோக்கமாகக் கொண்டது.

ஈராக் மீதான தாக்குதல் 19-20 மார்ச் 2003 இரவு ஈராக் தலைமைக்கு எதிரான "தலைமையை நீக்குவதற்கான போராட்டத்தை" ஆரம்பித்தது, அதாவது போரை ஒரு விரைவான முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்பதாகும். 

எனினும், அது தோல்வியடைந்தது. அடுத்த சில இரவுகளில் பாக்தாத் 20 ஆண்டுகாலப் போரில் கண்டிராத மிகப் பெரிய குண்டுவெடிப்பைக் கண்டதுடன், முற்றிலும் இராணுவ இலக்குகளை அழிக்கின்ற, சிறிய "இணை சேதம்" கொண்ட உயர் துல்லியத் தாக்குதல்களை” கொண்ட  "மாசற்ற போர்" என்ற கூற்றுக்கள் இருந்தபோதிலும் அதற்கேற்ற சிவிலியன்கள் பலியாகினர்.

அதிகரித்த எண்ணிக்கையின் பயன்

இந்த தாக்குதல் ஈராக்கிய கட்டளை நிலைகள் மற்றும் பதுங்கு குழிகளை தரைமட்டமாக்கினாலும், அது ஈராக்கிய அமைப்புகளின் செயற்பாட்டு வினைத்திறனை ஓரளவிற்கே குறைத்தது. பெரிய அளவில் சரிவு ஏற்படவில்லை. சதாம் உசேன் தனது படைகளின் கட்டுப்பாட்டில் இருந்ததுடன், அது படையெடுப்பிற்கு ஒழுங்கமைக்கப்பட்ட எதிர்ப்பைத் தொடர்ந்தது. படையெடுப்பு, ஏற்கனவே சரணடைந்த ஒரு நாட்டின் ஆக்கிரமிப்பாக மட்டுமே நோக்கப்பட்டதுடன், வான்தரை தாக்குதலுக்கு திரும்பியது.

அமெரிக்காவும் அதன் அவுஸ்திரேலிய, பிரிட்டிஷ், தென் கொரிய, போலந்து மற்றும் கனேடிய நட்பு நாடுகளும் (கடைசியாக பெயரிடப்பட்டது உயிர்ச்சேதமில்லா ஆதரவில் மட்டுமே) கிட்டத்தட்ட 470,000 விமானப்படை, இராணுவம் மற்றும் கடற்படை வீரர்களை இந்த நடவடிக்கைக்காக களமிறக்கின. 

ஈராக் மீதான தரை மூலமான ஆக்கிரமிப்பிற்காக, பிரிட்டிஷ் கவசப் பிரிவு மற்றும் வான் தாக்குதல் மற்றும் கமாண்டோ பிரிவுகள் மற்றும் அவுஸ்திரேலிய மற்றும் போலந்து விசேட படையணிகளின் ஆதரவுடன் அமெரிக்க இராணுவம் அதன் 10 செயற்பாட்டிலுள்ள இராணுவப் பிரிவுகளில் ஐந்து மற்றும் மூன்று நீர்மூலமான படைப்பிரிவுகளில் ஒன்றை வளைகுடாவிற்கு களமிறக்கியது.

படையானது சுமார் 500 M-1 ஆப்ராம்கள் மற்றும் சேலஞ்சர் II டாங்கிகள், 400 க்கும் மேற்பட்ட மற்றைய கவச வாகனங்கள், 150 சுடுகலன்கள் மற்றும் 18 பல்லெறிகுழல் ரொக்கெட் லாஞ்சர்கள் (MBRL) மற்றும் 350 ஹெலிகொப்டர்கள் ஆகியவற்றைக் கொண்ட சுமார் 200,000 தரைப்படை மற்றும் கடற்படை வீரர்களை கொண்டிருந்தன. வடக்கு ஈராக்கில் குர்திஷ் பெஷ்மெர்காவுடன் டாங்கிகள் மற்றும் துப்பாக்கிகளுடன் அதிகமான துருப்புக்கள் நிறுத்தப்பட்டன.

தளவாடத் திறன்கள் வெகுவாகக் குறைக்கப்பட்டதுடன், ஈராக் நாட்டைச் சுற்றி துருப்புக்களை விரைவாக நகர்த்த முடியாது (குறிப்பாக அமெரிக்க வான் தாக்குதல் திறன்களுக்கிடையில்), எனவே படை ஆக்கிரமிப்புகளின் பாதையில் இல்லாத அந்தப் படைப்பிரிவுகள் வினைத்திறனாக செயற்பட்டிருக்கவில்லை. மொத்த ஈராக்கிய தரைப்படைகள் 350,000 க்கும் 425,000 க்கும் இடையில் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ள நிலையில், 70,000 ஆண்கள் மற்றும் சுமார் 700 பழைய தாங்கிகள் மட்டுமே படையெடுப்பாளர்களை எதிர்கொண்டது.

அப்போது அமுலில் இருந்த பொருளாதாரத் தடைகள் காரணமாக,  வழிகாட்டும் தாங்கி எதிர்ப்பு ஏவுகணைகள் (ATGW) மற்றும் தாங்கி எதிர்ப்பு கண்ணிவெடிகள் போன்ற நவீன தற்காப்பு ஆயுதங்கள் அவர்களிடம் இல்லை. அதிலும் பிரதானமாக, பொருளாதாரத் தடைகள் ஈராக் இராணுவப் பயிற்சியில் கடுமையான பலவீனங்களை ஏற்படுத்தியது. முந்தைய ஆண்டில் பெரும்பாலான ஈராக் துருப்புக்கள் உயிர்ப்பான வெடிமருந்துகளை சுடவில்லை. இது பேரழிவை நிரூபித்தது, ஏனெனில் அடுத்தடுத்த போர்களில் டாங்கிகள் தங்களின் இலக்குகளைத் தவறவிட்டதுடன், ரொக்கெட் மூலம் செலுத்தப்படும் கையெறி குண்டுகள் (RPGs) தவறாக குறிவைக்கப்பட்டன அல்லது மிக விரைவில் சுடப்பட்டன.

தளவாடங்கள்

ஒப்பீட்டு ரீதியாக, அமெரிக்க போர் இயந்திரம் இயங்குவதற்கு ஒரு நாளைக்கு 9 மில்லியன் லிற்றர் எரிபொருள் தேவைப்பட்டது. 2001 ஆம் ஆண்டின் முற்பகுதியில் இருந்து, குவைத்/ஈராக் எல்லை வரை ஒரு விசேட குழாய்த்தொகுதியை கொண்ட 30 மில்லியன் லிற்றர் எரிபொருளை சேமிக்கும் திறன் கொண்ட ஓர் அமைப்பு ஈராக் படையெடுப்பை மனதிற் கொண்டு கட்டப்பட்டது. இதுவும் மற்றைய வழங்கல்களுக்கான இதே போன்ற அமைப்புகளும், அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் யூப்ரடீஸ் நதியின் இரு கரைகளிலும் பாக்தாத் வரை விரைவாக முன்னேறி, அதிகபட்ச வேகத்தில் நகர்ந்து, எதிர்ப்பைக் கடந்து முற்றிலும் தேவைப்படும் போது மட்டுமே போராடுவதை அனுமதித்தது.

முன்னேறும் துருப்புக்களுக்கு எரிபொருள், வெடிமருந்துகள் மற்றும் பிற தேவையான ஏற்பாடுகள், ஒன்று அல்லது இரண்டு நாள் இடைவெளியில் நிரப்பப்பட வேண்டியதுடன், தளவாடங்களை சீராகச் செயற்படுத்த வேண்டியிருந்தமை ஈராக்கியர்கள் தலையிடாவிட்டால் மட்டுமே சாத்தியமானதாகும். 

இருப்பினும், அமெரிக்கர்கள் மற்றும் அவர்களது பங்காளர்களின் அதிகரித்த எண்ணிக்கையின் நன்மையானது அவர்கள் எதிர்த்தரப்பை இலகுவில் தோற்கடிக்கும் வாய்ப்பை அதிகமாக்கியது. எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப, அவர்கள் சில வாரங்களில் பாக்தாத்தை அடைய முடிந்தது.

இருப்பினும், ஈராக்கியப் படைகள், சில சமயங்களில் சுற்றி வளைக்கப்பட்டாலும் வீழ்ந்து விடவில்லை, கடந்து சென்ற பிறகும் பிரதான நகரங்களில் தொடர்ந்து சண்டையிட்டனர். பல சந்தர்ப்பங்களில், ஈராக்கிய துருப்புக்கள் "தப்பி ஓடுவதற்கு" மாறாக பின்வாங்கி பின்னர் எதிர் தாக்குதலை நடாத்தியதாக, "மூன்றாந்தரப்பு" ஊடகங்கள் அறிக்கையிட்டன.

ஒவ்வொரு அமெரிக்கப் பிரிவின் ஒவ்வொரு பகுதியும் போர் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது - "பின்வரிசை" அலகுகள் கூட "முன் வரிசையாக" மாறியதாக போர் நடவடிக்கைக்குப் பிந்தைய மதிப்பீடு குறிப்பிடுகிறது. ஈராக்கிய ஒழுங்கற்ற துருப்புக்கள் தாக்குதல் துப்பாக்கிகள் மற்றும் ராக்கெட்-இயக்கப்படும் கையெறி குண்டுகள் மூலமாக பிரதான படைகள் அவர்களைக் கடந்து முன்னேறியவுடன், அமெரிக்க வரிசைகளுக்குப் பின்னால் மென்மையான இலக்குகளைத் தாக்கின.

இது தகவல் தொடர்பாடல்களை சீர்குலைத்ததுடன், அத்தியாவசியமான வழங்கல்கள், குறிப்பாக எரிபொருள் மற்றும் வெடிமருந்துகள் செல்வதைத் தடுக்கிறது. திட்டமிடப்படாத அளவில் ஈராக்கியர்களை தாக்குவதற்கான முன்னணிப் பிரிவுகளின் வெடிமருந்துகளின் தொடர்ச்சியான தேவைப்பாடு அதன் இயலுமைக்கு அப்பால் கிடைக்கக்கூடிய மேலதிக தளவாட இருப்பு  மீது சுமத்தப்பட்டது.

ஒரு கட்டத்தில், அமெரிக்க மற்றும் நேச நாடுகளின் முன்னரங்கு துருப்புக்களுக்கு உணவு (மற்றும் கழிப்பறை காகிதம் கூட) போன்ற அடிப்படை வசதிகள் குறைவாக இருந்தன. எனவே, அமெரிக்கர்கள் ஆரம்பத்தில் தங்களது வலிமையான தகவல்தொடர்புகளுக்கு இரண்டு அமெரிக்க வான்வழிப் பிரிவுகளை ஒதுக்கி பாக்தாத்தை முற்றுகையிட எண்ணியமையை நிறுத்தி கைவிட வேண்டியேற்பட்டது. 

செலவீனம்

இறுதியில், ஈராக் எதிர்ப்பு சரிந்தது. ஈராக்கிற்கான ரஷ்ய தூதர் விளாடிமிர் டிடோரென்கோ கூறுகையில், ஈராக்கிய ஜெனரல்கள் அமெரிக்கர்களுடன் இரகசிய ஒப்பந்தத்தில் நுழைந்து எதிர்ப்பைத் தவிர்ப்பதற்காக ஒரு சண்டை கூட இன்றி மிகவும் பாதுகாப்பான பாக்தாத்தை கிட்டத்தட்ட சரணடைய செய்தனர். எனவே, "ஸ்மார்ட் குண்டுகளை" விட "ஸ்மார்ட் லஞ்சத்தின்" விளைவுகளின் அடிப்படையில் "அதிர்ச்சி மற்றும் பிரமிப்பு" இனூடாக அமெரிக்கா ஈராக்கை வெற்றிகரமாக கைப்பற்றியது. மே 1, 2003 அன்று ஜோர்ஜ் டபிள்யூ புஷ் கலிபோர்னியா கடற்கரையில் அமெரிக்க விமானம் தாங்கி கப்பலில் சென்று போரின் முடிவை அறிவித்தார்.

இருப்பினும், தனிமைப்படுத்தப்பட்ட துருப்புக்கள் தொடர்ந்து அமெரிக்கர்களுடன் சண்டையிட்டதுடன் எதிர்ப்பு வலுத்து வந்தது. ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்கா ஈராக்கில் இருந்து அதிகாரப்பூர்வமாக வெளியேறும் நேரத்தில், 4,800 அமெரிக்க மற்றும் நட்பு நாடுகளின் துருப்புக்களும் 100,000 முதல் 1,000,000 ஈராக்கியர்களும் இறந்திருப்பார்கள். புஷ் நிர்வாகம் போரின் செலவீனம் $50 பில்லியன் முதல் $60 பில்லியனாக இருக்கும் என்று மதிப்பிட்டது, ஆனால் அது $1 டிரில்லியன் அமெரிக்க டாலர் செலவீனத்தில் முடிவடைந்திருந்தது. மிகவும் தீவிரமாக, இது அமெரிக்க இராணுவ வன்பொருள் பங்குகளை குறைத்து, பிற பயன்பாடுகளுக்கு சில ஆதாரங்களை விட்டுச் சென்றது. இந்த யுத்தத்தால் அமெரிக்காவிற்கு அதன் "ஏக வல்லரசு" என்ற அந்தஸ்தை இழந்தது.

ஈராக் போரின் பாடங்கள் தொடர்பான வரலாற்று ஆய்வு, 2013 இல் உயர் இராணுவத் தளபதி ஜெனரல் ரே ஒடியர்னோவால் ஆணையிடப்பட்டு அமெரிக்க இராணுவப் போர்க் கல்லூரியில் பல கள நிலை அதிகாரிகளால் நடாத்தப்பட்டதுடன், 2018 இல் போரானது, பாரம்பரியமாக ஈரானுக்கு பிராந்திய சமநிலை மற்றும் ஈரானிய நலனுக்காக செயற்படும் அதன் அரசாங்கத்தின் பிரதான கூறுகளைக் கொண்டிருந்த ஈராக்கை பலவீனப்படுத்தியது என தீர்மானிக்கப்பட்டது. இதன் விளைவாக, ஈரான் மட்டும் அதன் செல்வாக்கு யேமன், பஹ்ரைன் மற்றும் சிரியா வரை வேகமாக பரவி, அதிகரித்த நம்பிக்கையுடன் ஒரே வெற்றியாளராக வெளிப்பட்டது.

வினோத் மூனசிங்க வெஸ்ட்மின்ஸ்டர் பல்கலைக்கழகத்தில் இயந்திர பொறியியலை கற்றதுடன், இலங்கையில் தேயிலை இயந்திரங்கள் மற்றும் மோட்டார் உதிரிபாகங்கள் மற்றும் ரயில்வே துறைகளில் பணியாற்றினார். பின்னர் அவர் பத்திரிகை துறை மற்றும் வரலாறுகளை எழுதுவதில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். இலங்கை ஜேர்மன் தொழில்நுட்பப் பயிற்சி நிறுவனத்தின் ஆளுனர் குழுவின் தலைவராகப் பணியாற்றினார்.

Factum என்பது ஆசிய – பசுபிக்கை மையமாக கொண்ட சர்வதேச உறவுகள், தொழில்நுட்ப ஒத்துழைப்பு மற்றும் மூலோபாய தொடர்புகள் பற்றிய சிந்தனைக் குழுவாகும், அதனை www.factum.lk மூலமாக அணுகலாம்.

இங்கே வெளிப்படுத்தப்பட்ட கருத்துக்கள் ஆசிரியரின் சொந்தக் கருத்துக்கள் என்பதுடன் நிறுவனத்தின் பிரதிபலிப்புக்களாக இருக்க வேண்டிய அவசியமில்லை.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

செங்கோல் ஏந்திய இந்திய புதிய பாராளுமன்றம்...

2023-06-02 14:15:30
news-image

மகனை கண்டுபிடிக்க உதவுங்கள் - உடலையாவது...

2023-06-03 15:10:40
news-image

கொழும்பு மத்தி வீதியோர வியாபாரிகளின் பொருளாதார...

2023-06-02 21:15:04
news-image

திடீரென ஏற்பட்ட வீழ்ச்சி

2023-06-02 10:19:49
news-image

'லிபரேஷன் ஒபரேஷன்' : 36 ஆண்டுகளுக்கு...

2023-06-02 09:16:45
news-image

வீழ்ச்சியடையும் சுகாதார துறையுடன் போராடும் பொதுமக்கள்

2023-06-01 15:31:15
news-image

இலங்கை பல்கலைக்கழகங்களில் பணி நீக்கம் செய்யப்பட்ட ...

2023-06-01 14:44:30
news-image

சிரிப்பதற்கு உரிமையில்லை

2023-05-31 16:56:52
news-image

நான்கு தசாப்தம் கடந்தும் நெஞ்சில் கொழுந்து...

2023-05-31 16:00:00
news-image

கிழக்கு கரையில் இருந்து எங்களது குரல்

2023-05-31 14:24:50
news-image

Factum Perspective: தாய்லாந்து தேர்தல் -...

2023-05-31 11:43:39
news-image

புத்தகங்களையும் விட்டு வைக்காத சிங்கள பேரினவாதம்

2023-05-31 10:18:04