ஐக்கிய தேசியக் கட்சியுடன் கூட்டணியமைக்க தீர்மானிக்கவில்லை - பொதுஜன பெரமுன

Published By: Nanthini

27 Mar, 2023 | 05:34 PM
image

(இராஜதுரை ஹஷான்)

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவும், ஐக்கிய தேசிய கட்சியும் கூட்டணியமைத்து ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ளதாக வெளியாகியுள்ள செய்தி அடிப்படையற்றது என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார். 

அத்துடன் ஜனாதிபதி தேர்தலில் பொதுஜன பெரமுன தனித்துப் போட்டியிட வேண்டும் என கட்சியின் பெரும்பாலான உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.

சமகால அரசியல் நிலைவரம் தொடர்பில் வினவியபோது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறுகையில், 

பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்காகவே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு வழங்கியுள்ளோம். அரசியல் கொள்கை ரீதியில் இரு தரப்புக்கும் இடையில் வேறுபாடுகள் காணப்படுகின்றன. பொதுஜன பெரமுன கொள்கை அடிப்படையில் செயற்படும்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை தடுக்க ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன அரசாங்கத்துக்கு அழுத்தம் பிரயோகித்ததாக எதிர்க்கட்சிகள் குறிப்பிடுவது அடிப்படையற்றது. 

நாளை தேர்தல் இடம்பெற்றாலும், போட்டியிட தயாராகவுள்ளோம். தேர்தலை விரைவாக நடத்துமாறு குறிப்பிடும் எதிர்க்கட்சிகள் தான் தேர்தலை ஏதாவதொரு வழியில் பிற்போடுமாறு ஜனாதிபதியிடம் வலியுறுத்தினார்கள்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் இழுபறி நிலையில் உள்ள பின்னணியில் தற்போது ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. 

அரசியலமைப்பின் பிரகாரம், 2024 நவம்பர் மாதத்துக்குப் பின்னரே ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படும். ஆகவே, ஜனாதிபதி தேர்தல் குறித்து தற்போது அவதானம் செலுத்துவது அவசியமற்றது.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவும், ஐக்கிய தேசிய கட்சியும் கூட்டணியமைத்து ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ளதாக வெளியான செய்தி அடிப்படையற்றது. 

ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தனித்து போட்டியிட வேண்டும் என பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளார்கள்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் முக்கிய பதவிகள் வெகுவிரைவில் மறுசீரமைக்கப்படும். கட்சியின் தவிசாளர் ஜி.எல்.பீரிஸுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அத்தியாவசிய உணவுப் பொருட்கள் சிலவற்றின் விலைகள்...

2025-03-18 16:05:35
news-image

வேடுவர் சமூகத்தை தவறாக சித்தரித்த யூடியூப்...

2025-03-18 15:57:57
news-image

திட்டமிடப்பட்ட குற்றச் செயல்கள் மற்றும் போதைப்பொருள்...

2025-03-18 15:35:08
news-image

பத்தாவது பாராளுமன்றத்தில்  துறைசார் மேற்பார்வைக் குழுக்களை...

2025-03-18 15:30:43
news-image

8 இலட்சம் ரூபா பெறுமதியான கேரள...

2025-03-18 14:51:05
news-image

மீன்பிடி படகுடன் 3 இந்திய மீனவர்கள்...

2025-03-18 14:05:02
news-image

ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் தவிசாளர்...

2025-03-18 14:03:08
news-image

சுகாதார தொழிற்சங்க நடவடிக்கையால் வவுனியாவில் நோயாளர்கள்...

2025-03-18 13:41:54
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2025-03-18 13:25:19
news-image

கல்முனையில் துணை வைத்திய நிபுணர்கள் வேலை...

2025-03-18 13:23:53
news-image

சிகிரியாவில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணி உயிரிழப்பு...

2025-03-18 13:18:04
news-image

திருமலை நகரசபை ஊழியர்கள், உத்தியோகத்தர்கள் பணிப்பகிஷ்கரிப்பு...

2025-03-18 13:15:22