காதலி அனுஷ்காவுடன் புத்தாண்டு கொண்டாட சுற்றுலா சென்ற கோஹ்லியினால் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் பெரும் மனக்கவலையில் உள்ளனர்.

அவுஸ்திரேலிய தொடருக்கு தயாராகாமல் தன்னுடைய காதலியுடன் நேரத்தை செலவிட சென்ற விராட் கோஹ்லியினால் இந்திய ரசிகர்கள் கவலைக்கடலில் ஆழ்ந்துள்ளனர்.

இந்திய அணி அடுத்த வருடம் அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 ஒருநாள், 3 இருபதுக்கு20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கவிருக்கிறது. இந்நிலையில் தற்போது டெஸ்ட் அணித்தலைவராக உள்ள கோஹ்லி, ஒருநாள் போட்டிக்கும் விரைவில் தலைவராகும் நிலையில் அவரின் துடுப்பாட்டத்தில் ஓட்ட மழை பொழிய ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

இந்த நிலையில் விராட் கோஹ்லி இந்திய அணியுடன் சேர்ந்து பயிற்சியில் கவனம் செலுத்தாமல், புத்தாண்டு கொண்டாட காதலி அனுஷ்காவுடன் சுற்றுலாவுக்கு கிளம்பி விட்டார்.