அமீர் - ராசி இல்லாத ராஜாவாகிறாரா..?!

Published By: Digital Desk 5

27 Mar, 2023 | 12:23 PM
image

இயக்குநரும், நடிகருமான அமீர், தமிழ் திரையுலகில் ராசியில்லாத பிரபலம் என்ற நிலையை நோக்கி உயர்ந்து வருவதாக அவரை தொடர்ந்து அவதானிக்கும் திரையுலகினர் தெரிவிக்கிறார்கள்.

'மௌனம் பேசியதே' எனும் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகி இருந்தாலும், 'பருத்திவீரன்' எனும் படத்தின் மூலம் கவனத்தை ஈர்த்தவர் அமீர். இப்படத்தை தொடர்ந்து 'யோகி' எனும் படத்தில் கதையின் நாயகனாக அறிமுகமானார். 

அதன் பிறகு கதையின் நாயகனாகத்தான் வலம் வருவேன் என்று மனதிற்குள் சபதம் எடுத்து, திரையுலகில் தனக்கான வாய்ப்புகளை தேட தொடங்கினார். 

இந்நிலையில் அவரது நண்பரும், இயக்குநருமான வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான 'வடசென்னை' எனும் திரைப்படத்தில், வடசென்னை மக்களில் ஒருவராக பொருந்தாத கதாபாத்திரத்தில் வலிந்து நடித்திருந்தார்.

அந்தப் படம் வெளியான பிறகு அவரைத் தேடி வாய்ப்புகள் வரவில்லை. 2018 இல் வெளியான இந்த படத்திற்கு பிறகு அவர் நடிப்பில் இதுவரை எந்த திரைப்படங்களும் வெளியாகவில்லை. தனுஷ் நடிப்பில் உருவான 'மாறன்' எனும் திரைப்படமும் டிஜிட்டல் தளத்தில் வெளியாகி, வரவேற்பைப் பெறவில்லை. 

ஆனால் இவர் நடிப்பில் திரைப்படங்கள் தயாராகி வருவதாக அறிவிப்புகள் மட்டும் சீரான இடைவெளியில் வெளிவந்து கொண்டிருக்கும். 'பேரன்பு மிக்க பெரியோர்களே..' எனத் தொடங்கப்பட்ட படம், அதன் பிறகு 'நாற்காலி' என பெயர் மாற்றம் பெற்றது. 

அதன் பிறகு இந்த திரைப்படம் தற்போது 'உயிர் தமிழுக்கு' என பெயர் மாற்றம் பெற்று, வெளியீட்டிற்காக காத்திருக்கிறது. 

இதனிடையே இவரது நடிப்பில் 'சந்தன தேவன்', 'ஜிஹாத்', 'பாண்டிய வம்சம்' ஆகிய பெயர்களில் படங்கள் தயாராவதாக அறிவிப்பு மட்டும் வெளியானது. ஆனால் எந்த படங்களும் முழுமையாக நிறைவடையவில்லை.

திரையுலகில் வரவேற்கக்கூடிய உணர்வுபூர்வமான படைப்பாளியாக இருந்தாலும், சொந்த வாழ்வில் தீவிர இஸ்லாமிய மதப் பற்றாளராக தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும் அமீர், அரசியல் மற்றும் பொதுவெளியில் இஸ்லாத்துக்கு எதிராக கருத்துக் கூறுபவர்களை கண்டித்து தன்னுடைய எண்ணத்தை தொடர்ந்து பதிவு செய்து வருகிறார். இந்நிலையில் இவர் நடிப்பில் புதிய திரைப்படம் வெளியாகவிருப்பதாக தகவல்கள் வெளிவந்திருக்கிறது.

இவரும், இஸ்லாத்தில் அண்மையில் இணைந்தவருமான யுவன் சங்கர் ராஜாவும் இணைந்து புதிய திரைப்படத்தை வழங்கவிருப்பதாக இருவரும் இணைந்து அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள். இந்த திரைப்படமாவது தயாராகி, முழுமையடைந்து, எந்தவித தடையும் இல்லாமல் பட மாளிகையில் வெளியாக வேண்டும் என அவரது ரசிகர்கள் பிரார்த்திக்கிறார்கள்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ராபர் - திரை விமர்சனம்

2025-03-14 18:26:12
news-image

'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி வெளியிட்ட...

2025-03-14 17:41:17
news-image

ரசிகர்களுக்கும், ஊடகத்திற்கும் நன்றி தெரிவித்த 'எமகாதகி'...

2025-03-13 18:32:12
news-image

இயக்குநர் கே. பாக்யராஜ் வெளியிட்ட 'ட்ராமா'...

2025-03-13 18:31:45
news-image

விஜய் அண்டனி நடிக்கும் 'சக்தி திருமகன்'...

2025-03-13 18:25:30
news-image

நடிகை சௌந்தர்யா மரணத்தில் மோகன்பாபுவுக்கு தொடர்பா?...

2025-03-13 10:29:57
news-image

மாதவன் நடிக்கும் 'டெஸ்ட்' படத்தின் சிங்கிள்...

2025-03-12 15:38:17
news-image

இலங்கை மக்கள் அன்பானவர்கள் என கேள்விப்பட்டிருக்கிறேன்;...

2025-03-12 17:05:46
news-image

நடிகை பாவனா நடிக்கும் 'தி டோர்'...

2025-03-12 15:35:09
news-image

படவா - திரைப்பட விமர்சனம்

2025-03-12 11:29:42
news-image

சத்யராஜ் - சசிகுமார் - பரத்...

2025-03-12 21:10:29
news-image

நடிகர் 'கயல்' வின்சென்ட் நடிக்கும் 'அந்தோனி...

2025-03-11 17:36:01