ராம்சரண் நடிக்கும் புதிய படத்தின் தலைப்பு அறிவிப்பு

Published By: Digital Desk 5

27 Mar, 2023 | 12:22 PM
image

தெலுங்கின் முன்னணி நட்சத்திர நடிகர்களில் ஒருவரான ராம் சரண் கதையின் நாயகனாக நடித்து வரும் புதிய படத்திற்கு 'கேம் சேஞ்சர்' என ஆங்கிலத்தில் பெயரிடப்பட்டு, அதன் டைட்டில் லுக் வெளியாகி இருக்கிறது. இத்துடன் டைட்டில் லுக்கிற்கான பிரத்யேக காணொளியும் வெளியிடப்பட்டிருக்கிறது.

பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் தயாராகி வரும் புதிய திரைப்படம் 'கேம் சேஞ்சர்'. இதில் ராம்சரண் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக பொலிவுட் நடிகை கியாரா அத்வானி நடிக்கிறார். 

இவர்களுடன் எஸ் ஜே சூர்யா, ஜெயராம், சுனில், ஸ்ரீகாந்த், நவீன் சந்திரா, நாசர், சமுத்திரக்கனி, நடிகை அஞ்சலி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். 

திருநாவுக்கரசு - ரத்னவேலு இணைந்து ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு எஸ். தமன் இசையமைத்திருக்கிறார்.

அரசியலை மையப்படுத்தி தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் எனும் பட நிர்வனம் சார்பில் தயாரிப்பாளர் இதில் ராஜு -சிரீஷ் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இப்படத்தின் கதையை எழுத, திரைக்கதையில் எழுத்தாளர் சு. வெங்கடேசன் தன்னுடைய பங்களிப்பை வழங்கி இருக்கிறார்.

ரசிகர்களின் பாரிய எதிர்பார்ப்பில் இருக்கும் இந்த திரைப்படத்தின் டைட்டில்  இப்படத்தின் நாயகனான ராம்சரண் பிறந்த நாளன்று வெளியிடப்பட்டிருக்கிறது. அந்த வகையில் இந்த திரைப்படத்திற்கு 'கேம் சேஞ்சர்' என பெயரிடப்பட்டிருக்கிறது. 

இதற்கான பதாகையில் மக்கள் தேர்தல் அரசியலில் பயன்படுத்தும் வாக்குப்பதிவினை பிரதானமாக பயன்படுத்தி, இப்படத்தின் தலைப்பு உருவாக்கப்பட்டிருப்பதால் பெரும் கவனத்தை ஈர்த்திருக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பூஜையுடன் தொடங்கிய பிரபு தேவாவின் 'பேட்ட...

2023-06-02 10:57:34
news-image

சமுத்திரகனி நடிக்கும் 'விமானம்' பட முன்னோட்டம்...

2023-06-02 10:43:53
news-image

சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 'ஜெயிலர்' படப்பிடிப்பு...

2023-06-02 10:44:21
news-image

உதயநிதி ஸ்டாலினின் 'மாமன்னன்' ஒடியோ வெளியீடு

2023-06-02 10:43:16
news-image

எஸ்.ஜே. சூர்யாவின் 'பொம்மை' திரைப்படத்தின் வெளியீட்டு...

2023-06-02 10:46:49
news-image

ரேகா நடிக்கும் 'மிரியம்மா' பட தொடக்க...

2023-06-02 09:55:25
news-image

'எறும்பு' திரைப்படத்தின் சிங்கிள் ட்ராக் வெளியீடு

2023-06-01 17:02:25
news-image

'டக்கர்' அதிவேகமான திரைக்கதை - நடிகர்...

2023-06-01 14:05:31
news-image

இளைய தலைமுறையினரைக் கவருமா சித்தார்த்தின் ‘டக்கர்’..?

2023-06-01 12:03:24
news-image

சுனைனா நடிக்கும் 'ரெஜினா' பட டீசர்...

2023-06-01 11:31:49
news-image

ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிட்ட ‘போர் தொழில்’படத்தின் முன்னோட்டம்

2023-05-31 14:32:35
news-image

நடிகர் குரு சோமசுந்தரம் நடிக்கும் 'பெல்'

2023-05-31 10:47:00