காஜல் அகர்வாலின் 'கருங்காப்பியம்' வெளியீட்டு திகதி அறிவிப்பு

Published By: Digital Desk 5

27 Mar, 2023 | 11:22 AM
image

நடிகர் கலையரசன் கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'கருங்காப்பியம்' எனும் திரைப்படத்தின் வெளியீட்டு திகதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

'யாமிருக்க பயமே', 'கவலை வேண்டாம்', 'காட்டேரி' ஆகிய படங்களை இயக்கிய இயக்குவர் டிகே தனது அசல் பெயரான கார்த்திகேயன் எனும் பெயரில் இயக்கியிருக்கும் புதிய திரைப்படம் 'கருங்காப்பியம்'.

இதில் கலையரசன், கருணாகரன், நடிகைகள் ரெஜினா கஸண்ட்ரா, காஜல் அகர்வால், ஜனனி, ரைசா வில்ஸன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். 

விக்னேஷ் வாசு ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு எஸ். என். பிரசாத் இசையமைத்திருக்கிறார்.

ஹாரர் கொமடி ஜேனரில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை பாவே என்டர்டெய்ன்மெண்ட்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் படார்த்தி பத்மஜா தயாரித்திருக்கிறார். இந்த திரைப்படத்தை ஐ கிரியேசன்ஸ் எனும் நிறுவனம் வெளியிடுகிறது.

இந்த திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக், பாடல்கள் ஆகியவை வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது. இந்நிலையில் இந்த திரைப்படம் எதிர்வரும் ஏப்ரல் மாதம் ஏழாம் திகதியன்று உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியாகிறது.

நடிகை காஜல் அகர்வால் கதையின் நாயகியாக நடித்த 'கோஸ்டி' எனும் திரைப்படம் வெளியாகி வெற்றியை பெற்றதாலும், அவரது நடிப்பில் தயாராகி இருக்கும் 'கருங்காப்பியம்' எனும் திரைப்படத்தை திரையுலக வணிகர்களால் வெளியிடப்படுகிறது. இந்தத் திரைப்படம் வெளியாகி வெற்றி பெற்றால் நடிகை காஜல் அகர்வாலின் சந்தை மதிப்பு அதிகரிக்கும் என திரையுலகினர் தெரிவிக்கிறார்கள்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right