கொக்கலை சுதந்திர வர்த்தக வலயத்தில் கையுறை தயாரிக்கும் மாபெரும் தொழிற்சாலை ஒன்று இன்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவால் திறந்துவைக்கப்படுகிறது. இதன் மூலம் சுமார் 7 ஆயிரம் இளைஞர், யுவதிகளுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கவுள்ளது.

ஜனாதிபதியாக மைத்ரிபால சிறிசேன பதவியேற்று இரண்டு வருடங்கள் பூர்த்தியடையும் விழாவை ஒட்டியதாகவே இந்தத் திறப்பு விழா நடைபெறுகிறது.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, 1994ஆம் ஆண்டு தொழிற்சாலை அபிவிருத்தி அமைச்சராகப் பதவி வகித்த காலத்தில் கொக்கலை சுதந்திர வர்த்தக வலயம் அமைக்கப்பட்டது. அந்தத் திட்டத்தின் கீழான கடைசி தொழிற்சாலையாக இது அமைந்துள்ளது.

இந்தத் திறப்பு விழாவின்போது பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் வெகுசன ஊடகத் துறை அமைச்சர் கயந்த கருணாதிலக்க மற்றும் எரிபொருள் வள அபிவிருத்தித் துறை அமைச்சர் சந்திம வீரக்கொடி உள்ளிட்ட பல முக்கியஸ்தர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.