logo

துவிச்சக்கர வாகன பந்தயத்தை மையப்படுத்தி தயாரான 'ரேஸர்'

Published By: Digital Desk 5

27 Mar, 2023 | 11:06 AM
image

புதுமுக நடிகர் அகில் சந்தோஷ் கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் 'ரேஸர்' எனும் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது.

அறிமுக இயக்குநர் சதீஷ் எனும் சட்ஜ் ரெக்ஸ் இயக்கியிருக்கும் முதல் திரைப்படம் 'ரேஸர்'. இதில் புதுமுக நடிகர் அகில் சந்தோஷ் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை லாவண்யா நடித்திருக்கிறார். 

இவருடன் 'ஆறு' பாலா, 'சூப்பர் குட்' சுப்பிரமணியன், மாதவன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். பிரபாகர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு பரத் இசையமைத்திருக்கிறார். 

சாலையில் துவிச் சக்கர வாகன பந்தயத்தை மையப்படுத்தி தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஹஸ்ட்லர்ஸ் என்டர்டெய்ன்மென்ட் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கார்த்திக் ஜெயாஸ் தயாரித்திருக்கிறார்.

படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து இறுதி கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தில் ஃபர்ஸ்ட் லுக் அண்மையில் வெளியிடப்பட்டது. பெரும் வரவேற்பை பெற்று வரும் நிலையில், தற்போது இப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. 

முன்னோட்டத்தில் தமிழக சாலைகளில் நடைபெற்ற இந்தியாவின் முதலாவது அனைத்து வகை நிலத்தின் ஊடாக நடைபெறும் துவி சக்கர வாகன பந்தய நிகழ்வு இடம்பெற்றிருப்பதால்.. இந்த விளையாட்டில் ஈடுபட்டிருக்கும் இளைய தலைமுறையினரையும், இத்துறை மீது ஆர்வம் கொண்டிருக்கும் இளைய தலைமுறையினரையும் வெகுவாக கவர்ந்திருக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right