logo

மகளிர் பிறீமியர் லீக் சம்பியன் பட்டத்தை முதல் முறையாக சுவீகரித்து வரலாறு படைத்தது மும்பை இண்டியன்ஸ்

Published By: Digital Desk 5

27 Mar, 2023 | 10:49 AM
image

(நெவில் அன்தனி)

இந்தியாவில் நடைபெற்றுவந்த 5 அணிகளுக்கு இடையிலான அங்குரார்ப்பண மகளிர் பிறீமியர் லீக் இருபது 20 கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் முதலாவது சம்பியன் பட்டத்தை சுவீகரித்து வரலாறு படைத்தது மும்பை இண்டியனஸ்.

டெல்ஹி  கெப்பிட்டல்ஸ்  அணிக்கும் மும்பை இண்டியன்ஸ் அணிக்கும் இடையில் மும்பை, ப்றேபோன் விளையாட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை (26) இரவு நடைபெற்ற மிகவும் பரபரப்பான இறுதிப் போட்டியில் மும்பை இண்டியன்ஸ் 3 பந்துகள் மீதமிருக்க 7 விக்கெட்களால் வெற்றியீட்டி சம்பியன் பட்டத்தை சுவீகரித்தது.

டெல்ஹி கெப்பிட்டல்ஸ் அணியினால் நிர்ணயிக்கப்பட்ட 132 ஓட்டங்கள் என்ற சற்று கடினமான வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மும்பை இண்டியன்ஸ் அவ்வப்போது எதிர்கொண்ட சவால்களை சமாளித்தவாறு 49.3 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து 134 ஓட்டங்களைப் பெற்று  வெற்றியீட்டி  சம்பியன் பட்டத்தை உறுதிசெய்துகொண்டது.

நெட் சிவர்-ப்றன்ட் குவித்த ஆட்டமிழக்காத அரைச் சதம், அணித் தலைவி ஹார்மன்ப்ரீத் கோரின் நிதான துடுப்பாட்டம், அமேலியா கேரின் அதிரடி துடுப்பாட்டம் என்பன மும்பை இண்டியன்ஸ் அணியின் வெற்றியை உறுதிசெய்தன.

இந்த இறுதிப் போட்டியில் டெல்ஹி கெப்பிட்டல்ஸ் சார்பாக ஷிக்கா பாண்டி, ராதா யாதவ் ஆகிய இருவரும் பிரிக்கப்படாத கடைசி விக்கெட்டில் 52 ஓட்டங்களைப் பகிர்ந்து இந்த சுற்றுப் போட்டியில் கடைசி விக்கெட்டுக்கான இணைப்பாட்ட சாதனையை நிலைநாட்டியபோதிலும் அது இறுதியில் வீண்போனது.

மும்பை  இண்டியன்ஸ் ஆரம்ப வீராங்கனைகளான யஸ்திகா பாட்டியா (13), ஹெய்லி மெத்யூஸ் (4) ஆகிய இருவரும் குறைந்த எண்ணிக்கைகளுக்கு ஆட்டமிழந்ததும் மும்பை இண்டியன்ஸ் பெரும் அழுத்தத்தையும் சவாலையும் எதிர்கொண்டது.

எனினும் நெட் சிவர் - ப்றன்ட், ஹார்மன்ப்ரீத் கோர் ஆகிய இருவரும் நிதானத்துடனும் பொறுமையுடனும் துடுப்பெடுத்தாடி 3ஆவது விக்கெட்டில் 75 பந்துகளில் 72 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியின் மொத்த எண்ணிக்கைக்கு வலு சேர்த்தனர்.

ஹார்மன்ப்ரீத் கோர் 37 ஓட்டங்கள் பெற்ற நிலையில் 17ஆவது ஓவரின் முதலாவது பந்தில் ஆட்டமிழந்தபோது மும்பையின் வெற்றிக்கு 23 பந்துகளில் 37 ஓட்டங்கள் தேவைப்பட்டது.

நெட் சிவர்-ப்றன்டுடன் ஜோடி சேர்ந்த அமேலியா கேர் 8 பந்துகளில் 14 ஓட்டங்களைப் பெற்று மும்பை இண்டியன்ஸின் அழுத்தத்தைக் குறைத்தார். மறுபக்கத்தில் கடைசி நேரத்தில் வேகமாகத் துடுப்பெடுத்தாடிய நெட் சிவர் - ப்றன்ட் கடைசி ஓவரின் 3ஆவது பந்தில் பவுண்டறி அடித்து மும்பை இண்டியன்ஸ் சம்பியனாவதை உறுதிசெய்தார்.

55 பந்துகளை எதிர்கொண்ட நெட் சிவர் - ப்றன்ட் 7 பவுண்டறிகளுடன் 60 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழக்காதிருந்தார்.

பந்துவீச்சில் ராதா யாதவ் 24 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் ஜெஸ் ஜோனாசன் 24 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த டெல்ஹி கெப்பிட்டல்ஸ் 20 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 131 ஓட்டங்களைப் பெற்றது.

இரண்டாவது ஓவரில் ஷஃபாலி வர்மா (11), அலிஸ் கெப்சி (0) ஆகிய இருவரும் ஆட்டம் இழக்க டெல்ஹி கெப்பிட்டல்ஸ் தடுமாற்றம் அடைந்தது.

தொடர்ந்து ஜெமிமா ரொட்றிக்ஸ் 9 ஓட்டங்களுடன் 5ஆவது ஓவரில் ஆட்டம் இழந்தபோது மொத்த எண்ணிக்கை 35 ஓட்டங்களாக இருந்தது. இந்த மூவரையும் ஃபுல் டொஸ் பந்துகள் மூலம் இஸி வொங் ஆட்டம் இழக்கச் செய்திருந்தார்.

எவ்வாறாயினும் அணித் தலைவி மெக் லெனிங், மாரிஸ்ஆன் கெப் ஆகிய இருவரும் 4ஆவது விக்கெட்டில் 38 ஓட்டங்களைப் பகிர்ந்து மொத்த எண்ணிக்கையை 11ஆவது ஓவரில் 73 ஓட்டங்களாக உயர்த்தினர்.

ஆனால், மாரிஸ்ஆன் கெப் (18), மெக் லெனிங் (35), அருந்ததி ரெட்டி (0), ஜெஸ் ஜோனாசன் (22), மின்னு மணி (1), தானியா பாட்டியா (0) ஆகிய 6 வீராங்கனைகளும் 6 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆட்டம் இழக்க 16 ஓவர்கள் நிறைவில் டெல்ஹி கெப்பிட்டல்ஸ் 9 விக்கெட்களை இழந்து வெறும் 79 ஒட்டங்களைப் பெற்றிருந்தது.

ஆனால், ஷிக்கா பாண்டி, ராதா யாதவ் ஆகிய இரண்டு பந்துவீச்சாளர்களும் துணிவே துணை என்பதை நிரூபிக்கும் வகையில் எதிர்த்தாடலில் ஈடுபட்டு பிரிக்கப்படாத கடைசி விக்கெட்டில் 24 பந்துகளில் (கடைசி 4 ஓவர்கள்) சாதனைமிகு 52 ஓட்டங்களைப் பகிர்ந்து டெல்ஹி கெப்பிட்டல் அணியை பலமான நிலையில் இட்டனர்.

மகளிர் பிறீமியர் லீக் இருபது 20 கிரிக்கெட் போட்டியில் 10ஆவது விக்கெட்டில் பகிரப்பட்ட அதிகூடிய இணைப்பாட்ட ஓட்டங்கள் இதுவாகும்.

மும்பை இண்டியன்ஸ் பந்துவீச்சில் ஹெய்லி மெத்யூஸ் 2 ஓட்டமற்ற ஓவர்கள் உட்பட 5 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் இஸி வொங் 42 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் அமேலியா கேர் 18 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

ஆட்டநாயகி: நெட் சிவர்-ப்றன்ட்.

மிகவும் பெறுமதிவாய்ந்த வீராங்கனை: ஹெய்லி மெத்யூஸ்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

14இன் கீழ் சமபோஷ பாடசாலைகள் கால்பந்தாட்டம்...

2023-06-10 10:56:20
news-image

டயலொக் பாடசாலைகள் றக்பி லீக் -...

2023-06-09 20:36:53
news-image

இந்தியா 296 ஓட்டங்களுடன் சுருண்டது; ரஹானே,...

2023-06-09 20:15:07
news-image

சுப்மன் கில்லை ஆட்டமிழக்கச்செய்த ஸ்கொட்பொலன்டின் பந்து...

2023-06-09 14:29:31
news-image

அவுஸ்திரேலியாவுடனான உலக டெஸ்ட் இறுதிப் போட்டியில்...

2023-06-09 07:39:23
news-image

உலகக் கிண்ண தகுதிகாண் இலங்கை குழாத்தில்...

2023-06-08 20:15:49
news-image

கிரிக்கெட் தொடர்பாக விசாரணை நடத்த ஜனாதிபதி...

2023-06-08 20:15:31
news-image

எமது பயணம், எமது நம்பிக்கை கருப்பொருளில்...

2023-06-08 15:48:55
news-image

அமெரிக்காவின் இன்டர் மியாமி கழகத்தில் இணைவதாக...

2023-06-08 09:40:54
news-image

உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதியில் ஹெட்,...

2023-06-08 06:20:32
news-image

ரிட்ஸ்பறி விதுதய நீச்சல் சம்பியன்ஷிப்: புனித...

2023-06-07 21:18:13
news-image

ஊக்கமருந்து பாவனையை எதிர்க்கும் ஆசிய சமுத்திரவலய...

2023-06-07 21:19:45