சட்ஜிபிடி போன்ற எழுதும் கருவிகளே கற்றலின் எதிர்காலம் - இவை ஏமாற்றுவேலை இல்லை

Published By: Rajeeban

27 Mar, 2023 | 10:17 AM
image

 Aleksandra Bliszczyk

சட்ஜிபிடி (ChatGPT) என்பது OpenAI ஆல் உருவாக்கப்பட்ட ஒரு சக்திவாய்ந்த மொழி மாதிரியாகும். இது மனிதனைப் போன்ற உரையை உருவாக்கும் திறன் கொண்டது. சட்ஜிபிடி தன்னை பற்றி இவ்வாறுதான் வர்ணிக்கின்றது.

2020 இன் இறுதியில் எலோன் மஸ்க்கின் நிறுவனத்தினால் ஆரம்பிக்கப்பட்ட AI chatbot  மென்பொருளை பயன்படுத்தி நீங்கள் எதனைவேண்டுமென்றாலும் எழுதலாம். உண்மையானது அல்லது தவறானது எதைவேண்டுமென்றாலும் எழுதலாம்.

சட்ஜிபிடி குறித்து வைசிற்கு ஒரு கட்டுரை எழுதுங்கள் என தெரிவித்தால் போதும்  அது அதனை செய்யும். பதிலை மீண்டும் உருவாக்குக என்பதை அழுத்தினால் உங்களை வேறு பதிப்பாக மாற்றும்.

கல்விமான் போல ஒரு கட்டுரை எழுதுங்கள் என்று கேட்டால் ஒரு சில செகன்ட்களில் கட்டுரை தயாராகிவிடும். வைசிற்கு பொருத்தமான கட்டுரையொன்றிற்கான கருவொன்றை நான் கேட்டபோது உடனடியாக எனக்கு பதில் கிடைத்தது.

சட்பொட் தொழில்நுட்பம் பல வடிவங்களில் பலவருடங்களாக காணப்படுகின்ற போதிலும் சட்பொட் ஜிபிடி என்பது மிகவும் நவீனமானது. இதன் செல்வாக்கு அதிகரிப்பது குறிப்பாக மாணவர்களிடையே அதிகரிப்பது ஆச்சரியமளிக்க கூடிய விடயமல்ல.

ஒரு கோடைகாலத்தில் தான் திருத்திய 54 கட்டுரைகளில் பொட்தொழில்நுட்பத்தின் bot technology உதவியுடன் எழுதப்பட்டவை என்பதை கண்டுபிடிப்பதற்கான முயற்சியில்  சலி பிரென்டன் ஈடுபட்டார். communications lecturer at Melbourne’s Deakin University, அந்த கட்டுரைகளில் பத்து கட்டுரைகள் குறிப்பிடத்தக்க அளவிற்கு பொட்தொழில்நுட்பத்தினை பயன்படுத்தி எழுதப்பட்டவை என்பதை அவர் கண்டுபிடித்தார்.

கடந்த ஐந்து வருடகாலமாக அவர் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எழுதப்படும் கட்டுரைகள் குறித்து ஆராய்ந்து வருகின்றார் இந்த வருடமே அவ்வாறான கட்டுரைகள் அதிகமாகனவையாக காணப்படுகின்றன.

மாணவர்கள் மீது எதிர்மறையான தாக்கத்தை தவிர்ப்பதற்காக அமெரிக்காவின் சில பாடசாலைகள் யுஆர்எல்லை தடை செய்துள்ளன.

சட்ஜிபிடி என்பது ஏமாற்றுதல் என்பதற்கான இன்னொரு பெயராகவும் மாறியுள்ளது.

பிரன்டனின் கண்டுபிடிப்புகள் கல்விசார் நேர்மை மற்றும் இந்த தொழில்நுட்பம் காணப்படும் நிலையில் மாணவர்கள் குறித்து நேர்மையான மதிப்பீடுகளை எவ்வாறு மேற்கொள்வது என்ற கரிசனையை அவுஸ்திரேலியாவில் ஏற்படுத்தியுள்ளன.

எனினும் கணிணி நிபுணர்களும் சில பல்கலைகழகங்களும் புதிய கற்றல் யுகத்தின் ஆரம்பமே இந்த தொழில்நுட்பம் என தெரிவிக்கின்றன.

இப்போது நாங்கள் பார்த்துக்கொண்டிருப்பது மனித திறன்களின் அதிகரிப்பு என நான் கருதுகின்றேன்  பிலிப்டோவ்சன் co-director at Deakin University’s Centre for Research in Assessment and Digital Learning வைசிற்கு தெரிவித்தார்.

ஐந்து வருடங்களில் பட்டப்படிப்பை பூர்த்தி செய்யும் மாணவன் ஒருவன் எங்களால் செய்ய முடிந்ததை விட அதிகமாக செய்யப்போகின்றான்-இவ்வாறான சாதனங்களை அவர்கள் பயன்படுத்துவதே அதற்கு காரணம் என அவர் தெரிவித்தார்.

சட்ஜிபிடியை எழுத்துசாதனம் என வர்ணித்த டோவ்சன்  நவீன விமானங்களை செலுத்துவது எப்படி என விமானிக்கு கற்றுக்கொடுப்பது போல இந்த சாதனம் கட்டுரைகள் எழுதுவது எப்படி என்பதை மாணவர்களிற்கு கற்றுக்கொடுக்கப்போகின்றது என தெரிவித்தார்.

சாதனங்களை பயன்படுத்தி எப்படி பணிபுரிவது என தெரியவேண்டும்அதேவேளை இந்த சாதனங்கள் இயங்க மறுத்தாலும் செயற்படுவதற்கு உங்களிற்கு தெரிந்திருக்கவேண்டும்சாதனங்கள் இயங்க மறுத்த பின்னரும் விமானத்தை பாதுகாப்பாக தரையிறக்கதெரிந்திருக்கவேண்டும்  என அவர் தெரிவிக்கின்றார்.

சட்ஜிபிடி அதன் போட்டியாளர்களை விட பெரிய தரவுத்தொகுப்பில் உருவாக்கப்பட்டது.உலகெங்கிலும் உள்ள புத்தகங்கள் கட்டுரைகள் மற்றும் இணையப்பக்கங்களில்உள்ள வடிவங்களை அவதானிப்பதன் மூலம் இது செயற்படுகின்றது.

எந்த வார்த்தைகள் ஒன்றாக தோன்றக்கூடும் என்பதை இது கற்றுக்கொள்கின்றது.

ஆனால் இது ஒரு தரவுத்தளமல்ல இது ஒரு புதிய உரைநடையை உருவாக்குகின்றது ஏனெனில் இது கற்றறிந்த பண்புகளை தேடுகின்றது இது கற்பிக்கப்பட்டவற்றிலிருந்து மாத்திரம் கற்றுக்கொள்கின்றது.

இதனால் இது தவறுகளை செய்யலாம்இஅதன் அறிவில் இடைவெளிகளை குறைபாடுகனை கொண்டிருக்கலாம்இ மற்றும் உள்ளாந்த பக்கச்சார்புகளை கொண்டிருக்கலாம்.

முதலாவது வரைபை எழுதுவதற்கு சட்ஜிபிடி சிறந்தது என்கின்றார் கலாநிதி செரில் பொப் ஆனால் மனிதர்கள் ஒப்புநோக்குவதற்கும் எடிட் செய்வதற்குமான தேவை என்றும் இல்லாமல்போகாது என்கின்றார்.

நன்றி வைஸ் 
மொழிமாற்றம் -ரஜீபன்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மனித உரிமைகளை வலுப்படுத்த விரும்பும் இளைஞர்களின்...

2024-03-18 16:04:18
news-image

சமாதானத்தை ஜனநாயகத்தை வலுப்படுத்துவதில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தினையும்...

2024-03-18 11:46:14
news-image

செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தும்போது ஒழுக்கவியல் சார்ந்த...

2024-03-15 15:43:14
news-image

டிக்டொக்கை பின்னுக்குத் தள்ளிய இன்ஸ்டாகிராம்

2024-03-11 10:13:06
news-image

மனித மூளையில் ‘சிப்’ ; எலான்...

2024-01-30 13:16:57
news-image

“மூன் ஸ்னைப்பர்” வெற்றிகரமாக தரையிறங்கியது :...

2024-01-19 21:59:46
news-image

எதிர்காலத்தை ஆளப்போகும் செயற்கைநுண்ணறிவு

2023-11-22 15:47:57
news-image

வட்ஸ் அப்பில் ஒரே நேரத்தில் இரண்டு...

2023-10-21 12:02:07
news-image

ஸ்னாப் செட்டின் புதிய செயற்கை நுண்ணறிவு...

2023-10-07 11:02:07
news-image

கூகுளுக்கு இன்று வயது 25

2023-09-27 10:36:57
news-image

ஏகத்துவத்தை நோக்கி தொழில்நுட்பத்தில் வேகமாக மாற்றமுறும் ...

2023-09-22 18:33:26
news-image

சமூக வழிகாட்டுதல்கள் பற்றிய விழிப்புணர்வை இலங்கையில்...

2023-08-28 20:48:26