அமெரிக்கா டிக்டொக்கை தடை செய்ததன் பின்னணி

Published By: Digital Desk 3

27 Mar, 2023 | 09:49 AM
image

மாதுரி 

மிக்க குறுகிய காலத்திலேயே  மக்கள் மத்தியில் டிக்டொக் (TikTok) செயலி பிரபலமானது. பொழுது போக்காக பலரும் இதனை  பயன்படுத்த ஆரம்பித்து  இறுதியில் இதற்கே அடிமையாகி விட்டனர். குறிப்பாக இந்தியா , இலங்கை என்ற வரிசையில்   ஐரோப்பிய  நாடுகளைச் சேர்ந்தவர்களும் அதிக அக்கறை காட்ட  ஆரம்பித்தனர்.

இந்நிலையில் கலாசாரம் சீரழிவதாக கூறி இந்தியாவில்  கடும் எதிர்ப்பு கிளம்பியது. மறுபுறம்  அமெரிக்க வேறு கண்ணோட்டத்துடன் இதனை பார்க்க தொடங்கியது. சீனா  குறித்த நாடுகளின் பாதுகாப்பு தரவுகளை பெற்றுக்கொள்ள  இதனை பயன்படுத்துவதாக சந்தேகம்வெளியிட்டது. அமெரிக்காவை பொறுத்தமட்டில்  சீனாவின் ஒவ்வொரு நகர்வுகளையும்    உன்னிப்பாக கவனிக்க தவறுவதில்லை. அதில் உண்மை இல்லாமலுமில்லை.

அண்மையில் அமெரிக்கா  உட்பட பல்வேறு நாடுகளின் வான் எல்லையில் அத்துமீறி  நுழைந்து பலூன்களை  அனுப்பி அந்நாட்டை  வேவு  பார்க்கும்  முயற்சியில் சீனா ஈடுபட்டது. அமெரிக்க  இதனை அவதானித்ததை  அடுத்து , சீனா அந்த பலூன்கள் காற்றால்  இழுத்து செல்லப்பட்ட தாக சாட்டு  கூறியது.

பின்னர் அதனை அமெரிக்கா சுட்டு வீழ்த்தியதை அடுத்து  அது பெரும்  இராஜதந்திர விவகாரமாக உருவெடுத்தது. அமெரிக்காவும்  சீனாவை  விட்ட பாடில்லை என்ற வகையில் துரத்திக்கொண்டே இருக்கிறது. இந்தப் பின்னணியில் தான்  நாம்  டிக் டொக்   செயலியையும்  பார்க்கவேண்டும் .  

டிக்டொக்கின் சீன உரிமையாளர்கள் குறித்த சமூக ஊடக தளத்தை விற்க வேண்டும் அல்லது தடையை எதிர்கொள்ளும் அபாயத்தை எதிர்நோக்க நேரும் என அமெரிக்க அரசாங்கம் கூறிவந்தது . இந்தப்பின்னணியில் குறித்த செயலியில் இருந்து பயனர் தரவை சீனா என்ன செய்யக்கூடும் என்பது குறித்து பல நாடுகள் கவலை தெரிவித்து வந்தன.

மேலும்,  டிக்டொக் மற்றைய செயலிகளைப் போலவே தரவுகளையும் சேகரிக்கிறது. ஆனால் இந்தத் தரவு அமெரிக்கர்களை உளவு பார்க்கவோ அல்லது பிரசாரத்தைப் பரப்பவோ பயன்படுத்தப்படலாம் என்று அமெரிக்கா கூறுகிறது. இந்நிலையில்  அமெரிக்கா   ஏற்கனவே தமது அரசாங்க சாதனங்களிலிருந்து பயன்பாட்டைத் தடை செய்துள்ளது, இதனை பிரிட்டன் , கனடா மற்றும் ஐரோப்பிய ஒன்றியநாடுகள்  பின்பற்றுகின்றன. இந்தியாவும் 2020 இல் இந்த செயலியை முழுவதுமாக தடை செய்தது.

தாம்  மற்ற சமூக ஊடக நிறுவனங்களில் இருந்து வேறுபட்டு செயல்படவில்லை என்று டிக்டொக் வலியுறுத்துகிறது. மேலும் சீன அதிகாரிகளுக்கு தரவை மாற்றும் உத்தரவுக்கு அது ஒருபோதும் இணங்காது என்றும் கூறுகிறது. எனினும் அதனை ஏற்க அமெரிக்கா தயாரில்லை .

மூன்று அமெரிக்கர்களில் ஒருவர் டிக்டொக்கைப் பயன்படுத்துகிறார். மேலும் இதுபோன்ற பிரபலமான செயலியைத் தடை செய்வது அமெரிக்காவில் முன்னெப்போதும் இல்லாத நடவடிக்கை என்பதும் பலரது வாதம். அப்பிள் மற்றும் கூகுள் போன்ற அப் ஸ்டோர்கள் தங்கள் தளங்களில் இருந்து டிக்டொக்கை அகற்ற உத்தரவிடுவதே  அரசாங்கத் தடையை அமுல்படுத்துவதற்கான மிகவும் சாத்தியமான வழி. என்பது  அமெரிக்காவின் எதிர்பார்ப்பு.அப்போது  மக்கள் இனி அந்த பயன்பாட்டைப் பதிவிறக்க முடியாது, என்று கருதப்படுகிறது .

ஆனால் ஏற்கனவே பயன்பாட்டை வைத்திருப்பவர்கள் அதைத் தங்கள் தொலைபேசிகளில் வைத்திருப்பார்கள். இருந்த போதும் காலப்போக்கில்,  டிக்டொக் புதுப்பிப்புகளைப் பெற முடியாது போய் விடும். இது பயனர்களுக்கு சிக்கல்களை ஏற்படுத்தக்கூடும்.பெரும்பாலான மொபைல் சாதனங்களில் அப்ஸ்டோரின் பகுதியை மாற்றலாம்.

இது பிற நாடுகளில் இருந்து பயன்பாடுகளை அணுக  அனுமதிக்கிறது -மறுபுறம்  சாதனத்தை மாற்றியமைப்பதன் மூலம் அப்ஸ்டோர்களை விட இணையத்தில் இருந்து பதிவிறக்கம் செய்ய முடியும் - இது பதிப்புரிமைச் சட்டத்தை மீறலாம். இறுதியில்,அப்பிள் மற்றும் கூகிள் அமெரிக்க சாதனங்களுக்கு தரவுகளை அனுப்ப முடிவு செய்யலாம். இது குறிப்பாக டிக்டொக் செயலியை முழுவதுமாக தடுக்க வழிவகுக்கும். இதனால் இந்த தீர்வுகள் பயனை தராது  என்பதே  யதார்த்தம். 

இந்திய அரசாங்கம் டிக்டொக்கை தடை செய்தபோது, அது பதிவிறக்கங்களை முடக்கியது மற்றும் இணைய சேவை வழங்குநர்கள் (ISP கள்) அதை முழுவதுமாக தடுக்க வேண்டும் என்று கோரப்பட்டனர் .இது இந்தியாவில் உள்ள பெரும்பாலான ISP களில் இருந்து பயன்பாடு அல்லது இணையதளத்தை அணுகுவதை மிகவும் கடினமாக்கி  உள்ளது. சிலர்  VPNகள்  அல்லது மெய்நிகர் தனியார் நெட்வொர்க்கைப் பயன்படுத்தியுள்ளனர் . இது குறித்த  சாதனத்திற்கும் மற்றொரு கணினிக்கும் இணையத்துடனான  பாதுகாப்பான இணைப்பாகும், இதனால்  குறித்த நபர்  வேறு நாடு அல்லது பிராந்தியத்தில் இருப்பது போல் தோன்றும்.ஆனால் தடையைத் தவிர்க்க இது  போதுமானதாக இருக்காது.

டிக்டொக்கின் சிம் கார்ட் மற்றும் ஐபி முகவரியைச் சரிபார்த்து ஒருவரின்  இருப்பிடம் பற்றிய எழுந்தமானமான தகவலை இது சேகரிக்கிறது.வேறு வார்த்தைகளில் கூறுவதானால், உங்கள் சாதனத்தின் போன் எண் +1 எனத் தொடங்கினால், நீங்கள் அமெரிக்காவில் இருப்பதை டிக்டொக் அறிந்திருக்கும், மேலும் உங்கள் சாதனத்தில் பயன்பாட்டை அணுகுவதைத் தடுக்கலாம். ஆனால் டிக்டொக் பயனர்கள் பயன்படுத்துவதைத் தடுக்குமா என்பது தெரியவில்லை.

அமெரிக்காவில், வர்த்தகர்கள் உட்பட பலரும்  வருமானத்தைப் பெற டிக்டொக்கை  பயன்படுத்தியுள்ளனர். உலகெங்கிலும் உள்ள பொருட்களை விற்கவும்,  அவற்றின் உள்ளடக்கத்தை விளம்பரப்படுத்தவும் மக்கள் இதை பயன்படுத்துகின்றனர். தரவுகளின்படி  அமெரிக்காவில் 5 மில்லியனுக்கும் அதிகமான வர்த்தகர்கள் டிக்டொக் பயன்பாட்டைப் பயன்படுத்துவதாக தெரிவிக்கப்படுகிறது. சிறு நிறுவனங்களுக்கு பிற சமூக ஊடகங்களில் பார்வையாளர்கள் இல்லை என்றால், இந்த தடை அவர்களின் வர்த்தகத்தை மோசமாக ப்  பாதிக்கும்  என்று கூறலாம்.

இதேவேளை டிக்டொக் தொடர்பில்  அமெரிக்கா தவறான தகவல்களை பரப்புவதாகவும்,மேலும் "அமெரிக்கா போன்ற உலகின் தலைசிறந்த வல்லரசுநாடுகள்  இளைஞர்களின் விருப்பமான செயலியைப் பயன்படுத்துவது  பற்றி அஞ்சு கிறது என்றும்  சீனா குற்றம் சாட்டியுள்ளது.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

'லிபரேஷன் ஒபரேஷன்' : 36 ஆண்டுகளுக்கு...

2023-06-01 21:34:26
news-image

வீழ்ச்சியடையும் சுகாதார துறையுடன் போராடும் பொதுமக்கள்

2023-06-01 15:31:15
news-image

இலங்கை பல்கலைக்கழகங்களில் பணி நீக்கம் செய்யப்பட்ட ...

2023-06-01 14:44:30
news-image

சிரிப்பதற்கு உரிமையில்லை

2023-05-31 16:56:52
news-image

நான்கு தசாப்தம் கடந்தும் நெஞ்சில் கொழுந்து...

2023-05-31 16:00:00
news-image

கிழக்கு கரையில் இருந்து எங்களது குரல்

2023-05-31 14:24:50
news-image

Factum Perspective: தாய்லாந்து தேர்தல் -...

2023-05-31 11:43:39
news-image

புத்தகங்களையும் விட்டு வைக்காத சிங்கள பேரினவாதம்

2023-05-31 10:18:04
news-image

கனவுகள் சிதைக்கப்பட்ட புலம்பெயர் பணிப்பெண்கள்

2023-05-31 20:51:08
news-image

“உலக புகைத்தல் தடுப்பு தினம்”

2023-05-26 11:25:08
news-image

குப்பை மேடு, காட்டு யானை பிரச்சினைகளுக்கு...

2023-05-30 17:10:57
news-image

சட்டத்தரணியாக பணிபுரிந்த பெண்ணின் கரங்களில் ஆயுதம்...

2023-05-30 16:27:16