(நெவில் அன்தனி)
வெஸ்லி கல்லூரிக்கு எதிராக எஸ்.எஸ்.சி. மைதானத்தில் சனிக்கிழமை (25) நடைபெற்ற வருடாந்த ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 19 ஓட்டங்களால் பரபரப்பான வெற்றியை ஈட்டிய புனித பெனடிக்ற் கல்லூரி 2ஆவது தொடர்ச்சியான தடவையாக அருட் சகோதரர் லூக் கேடயத்தை சுவீகரித்தது.
அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த புனித பெனடிக்ற் கல்லூரி 47.1 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 241 ஓட்டங்களைப் பெற்றது.
போட்டியின் 12ஆவது ஓவரில் புனித் பெனடிக்ற் அணியின் 4ஆவது விக்கெட் வீழ்ந்தபோது அதன் மொத்த எண்ணிக்கை 57 ஓட்டங்களாக இருந்தது.
ஆரமப வீரர் விதுனேத் வில்சன் 20 ஓட்டங்களுடனும் வெகுவாக எதிர்பார்க்கப்பட்ட ஷாருஜன் சண்முகநாதன் 11 ஓட்டங்களுடனும் கோஜித்த ஹிம்சரா 13 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர்.
இந் நிலையில் மெவான் திசாநாயக்க, அணித் தலைவர் சமத் சத்துரிய ஆகிய இருவரும் 5ஆவது விக்கெட்டில் ஜோடி சேர்ந்து 70 ஓட்டங்களைப் பகிர்ந்து புனித பெனடிக்ற் அணிக்கு உற்சாகத்தைக் கொடுத்தனர்.
ஆனால், இருவரும் 3 ஓட்டங்கள் வித்தியாசத்தில் களம் விட்டகன்றனர்.
திசாநாயக்க 32 ஓட்டங்களுடனும் சத்துரிய 46 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழந்தனர்.
இதனைத் தொடர்ந்து 2 முக்கிய இணைப்பாட்டங்களில் ஷெனால் சமரதுங்க பங்காற்றி அணியை நல்ல நிலையில் இட்டார்.
8ஆவது விக்கெட்டில் விஹிர அத்தநாயக்கவுடன் 44 ஓட்டங்களைப் பகிர்ந்த சமரதுங்க, 9ஆவது விக்கெட்டில் அர்ஷான் ஜோசப்புடன் மேலும் 46 ஓட்டங்களைப் பகிர்ந்தார்.
சமரதுங்க மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடி 74 ஓட்டங்களைக் குவித்தார். ஆனால் அத்தநாயக்க 8 ஓட்டங்களையும் ஜோசப் 14 ஓட்டங்களையுமே பெற்றனர்.
வெஸ்லி பந்துவீச்சில் சனிந்து அமரசிங்க 43 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களையும் உவின் பெரேரா, சாமத் கோமஸ் ஆகிய இருவரும் தலா 33 ஓட்டங்களுக்கு தலா 3 விக்கெட்களைக் கைப்பற்றினர்.
242 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய வெஸ்லி 47.4 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 222 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.
சீரான இடைவெளியில் விக்கெட்களை இழந்த வெஸ்லி ஒரு கட்டத்தில் 5 விக்கெட்களை இழந்து 113 ஓட்டங்களைப் பெற்று தடுமாறிக்கொண்டிருந்தது.
ஆனால், அணித் தலைவர் லினெல் சுபசிங்கவும் அனுக்க பஹன்சரவும் மிகவும் திறமையாகத் துடுப்பெடுத்தாடி 6ஆவது விக்கெட்டில் 75 ஓட்டங்களைப் பகிர்ந்து புனித பெனடிக்ற் அணிக்கு சவால் விடுத்த வண்ணம் இருந்தனர்.
ஆனால், அவர்கள் இருவரும் ஆட்டம் இழந்ததும் வெஸ்லி அணியின் எதிர்பார்ப்பு தவிடுபொடியானது.
லினெல் சுபசிங்க 56 ஓட்டங்களையும் அனுக்க பஹன்சர 32 ஓட்டங்களையும் பெற்றனர்.
முன்வரிசையில் ஏ. இசிர 36 ஓட்டங்களையும் சாமத் கோமஸ் 29 ஓட்டங்களையும் உவின் பெரேரா 26 ஓடடங்களையும் பெற்றனர்.
புனித பெனடிக்ற் பந்துவீச்சில் வி. அத்தநாயக்க 41 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் சமத் சத்துரிய 48 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
ஆட்டநாயகனாக ஷெனல் சமரதுங்கவும் சிறந்த துடுப்பாட்ட வீரராக லினெல் சுபசிங்கவும் சிறந்த பந்துவீச்சாளராக சனிந்து அமரசிங்கவும் சிறந்த களத்தடுப்பாளராக ருக்ஷான் தரங்கவும் தெரிவாகினர்.
படவிளக்கங்கள்
அருட்சகோதரர் லூக் கேடயத்துடன் குதூகலிக்கும் புனித பெனடிக்ற் அணியினர் (பட உதவி: பீட்டர் டி குரூஸ்)
ஆட்டநாயகன்: ஷெனல் சமரதுங்க (புனித பெனடிக்ற்)
சிறந்த துடுப்பாட்டவீரர்: லினெல் சுபசிங்க (வெஸ்லி)
சிறந்த பந்துவீச்சாளர்: சனிந்து அமரசிங்க (வெஸ்லி)
சிறந்த களத்தடுப்பாளர்: ருக்ஷான் தரங்க (வெஸ்லி)
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM