(நெவில் அன்தனி)
12 பாடசாலை அணிகள், 8 பிரதான கழக அணிகள், 2 வெளிநாடுகள் உட்பட 6 பெண்கள் அணிகள்
இலங்கையின் பழைமையான றக்பி கழகங்களில் ஒன்றான சிலனீஸ் றக்பி அண்ட் புட்போல் கிளப்பின் (Ceylonese Rugby & Football Club) நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அழைப்பு றக்பி போட்டியில் 12 பாடாசலை அணிகள், 8 பிரதான கழகங்கள், 6 மகளிர் கழகங்கள் பங்குபற்றுகின்றன. மகளிர் போட்டியில் அவுஸ்திரேலியா, கத்தார் ஆகிய நாடுகளைச் சேர்ந்த இரண்டு அணிகள் பங்குபற்றுகின்றமை சிறப்பம்சமாகும்.
அவுஸ்திரேலியாவிலிருந்து புரானியர் பெண்கள் றக்பி கழகமும் கத்தாரிலிருந்து தோஹா பெண்கள் றக்பி கழகமும் இப் போட்டியில் பங்குபற்றுகின்றன.
இலங்கை றக்பி வரலாற்றில் பாடசாலை அணிகள், ஆண்கள் பிரிவில் பிரதான கழகங்கள், பெண்கள் பிரிவில் 2 வெளிநாட்டு அணிகள் உட்பட 6 கழகங்கள் ஒரே போட்டியில் பங்குபற்றுவது இதுவே முதல் தடவை என சிலனீஸ் றக்பி அண்ட் புட்போல் கிளப் தலைவர் டெட் முத்தையா தெரிவித்தார்.
இந்த வரலாற்று முக்கியம்வாய்ந்த சுற்றுப் போட்டியை பிரமாண்டமான வகையில் களியாட்டங்கள், கொண்டாட்டங்களுடன் நடத்தவுள்ளதாக போட்டி ஏற்பாட்டுக் குழுத் தலைவர் டில்ரோய் பெர்னாண்டோ கூறினார்.
இப் போட்டிகள் சீ.ஆர். மைதானத்தில் மார்ச் 31ஆம், ஏப்ரல் 1ஆம், 2ஆம் திகதிகளில் நடைபெறும்.
பாடசாலைகளுக்கு இடையிலான லீக் சுற்றும், கால் இறுதிகள் மற்றும் அரை இறுதிகள் வெள்ளிக்கிழமை 31ஆம் திகதி நடைபெறும். ஆண்களுக்கான கழக மட்டப் போட்டிகளும் பெண்களுக்கான கழக மட்டப் போட்டிகளும் சனிக்கிழமை 1ஆம் திகதி நடைபெறும்.
பெண்கள் பிரிவில் 6 கழகங்கள் மாத்திரம் பங்குபற்றுவதால் ஒரே பிரிவில் லீக் அடிப்படையில் போட்டிகள் நடத்தப்படும். இதன் காரணமாக சனிக்கிழமை (01), 9 போட்டிகளும் ஞாயிற்றுக்கிழமை (02) 6 போட்டிகளும் நடத்தப்படும்.
கடைசி நாளான ஞாயிற்றுக்கிழமை பாடசாலைகளுக்கான கிண்ணம் மற்றம் கோப்பை இறுதிப் போட்டிகளும் கழகங்கங்களுக்கு இடையிலான இறுதிச் சுற்றுடன் கிண்ணம் மற்றும் கோப்பைக்கான இறுதிப் போட்டிகளும் நடத்தப்படும்.
பெண்கள் பிரிவில் லீக் சுற்று நிறைவில் முதலிரண்டு இடங்களைப் பெறும் அணிகள் கிண்ணத்துக்கான இறுதிப் போட்டியிலும் 3ஆம், 4ஆம் இடங்களைப் பெறும் அணிகள் கோப்பைக்கான இறுதிப் போட்டியிலும் விளையாடும். கடைசி இரண்டு அணிகள் நிரல்படுத்தலுக்கான இறுதிப் போட்டியில் விளையாடும்.
பங்குபற்றும் அணிகள்
பாடசாலைகள்
குழு ஏ: றோயல், புனித பேதுருவானவர், வெஸ்லி.
குழு பி: பிலியந்தலை மத்திய கல்லூரி, கண்டி திரித்துவம், புனித சூசையப்பர்.
குழு சி: ஸாஹிரா, வித்யார்த்த, இஸிபத்தன.
குழு டி: டி.எஸ். சேனாநாயக்க, கிங்ஸ்வூட், சென் தோமஸ்.
கழகங்கள் (ஆண்கள்)
குழு ஏ: கண்டி, இராணுவம், சி.ஆர். அண்ட் எவ்.சி., பொலிஸ்.
குழு பி: விமானப்படை, ஹெவ்லொக்ஸ், கடற்படை, சீ.எச். அண்ட் எவ்.சி.
கழகங்கள் (பெண்கள்)
விமானப்படை, சீ.ஆர். அண்ட் எவ்.சி., புரானியர் பெண்கள் றக்பி கழகம், இராணுவம், கடற்படை, கத்தார் - தோஹா பெண்கள் றக்பி கழகம்.
மொத்தப் பணப்பரிசு 1875000 ரூபா
பாடசாலைகள் பிரிவில் சம்பியனாகும் அணிக்கு 250,000 ரூபாவும் 2ஆம் இடத்தைப் பெறும் அணிக்கு 125,000 ரூபாவும் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான பிரிவுகளில் சம்பியனாகும் அணிகளுக்கு தலா 500,000 ரூபாவும் 2ஆம் இடங்களைப் பெறும் அணிகளுக்கு தலா 250,000 ரூபாவும் பணப் பரிசுகளாக வழங்கப்படும்.
(படப்பிடிப்பு: எஸ். சுரேந்திரன்)
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM