இலங்கைக்குக் கைகொடுக்கும் இந்தியாவிற்கு ‘நன்றி’ 

Published By: Vishnu

26 Mar, 2023 | 08:40 PM
image

இலங்கை ஆறு மாத குறுகிய காலத்தில் பொருளாதார பேரழிவிலிருந்து ஓரளவு மீண்டு வந்து கொண்டிருக்கின்றது. அண்டைய நாடான இந்தியாவானது இலங்கை நாட்டுக்கு மூத்த சகோதரராக இருந்து பல உதவிகளை செய்துவருகின்றது. இலங்கையர் என்ற ரீதியில் இந்த முயற்சிக்கு கைகோர்த்து நிற்கின்ற இந்திய நாட்டிற்கும்  மக்களுக்கும், இலங்கை மக்கள் சார்பாக முதற்கண் நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம். 

இதற்கு சான்று பகரும் வகையில்,  “ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் செலுத்துகின்ற வரிப்பணத்தின் வாயிலாகவும் ஆட்சியில் உள்ள இந்திய அரசாங்கத்திற்கு இலங்கை மக்கள் மீது கொண்டுள்ள கரிசனை காரணமாகவும் இலங்கைக்கு எண்ணிலடங்கா சிறந்த உதவிகள் தகுந்த நேரத்தில் கிடைக்கப்பெற்றுக் கொண்டிருக்கின்றன.  

இலங்கையின் பொருளாதாரத்தினை மீட்டெடுக்க இந்தியாவினால் வழங்கப்பட்ட மொத்த உதவியானது, ஏனைய உலகநாடுகளால் வழங்கப்பட்ட ஒட்டுமொத்த உதவிகளிலும் அதிகம், என்று இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். இந்தியாவானது காலாகாலமாக இலங்கைக்கு பல்வேறு வகையான உதவிகளை வழங்கியுள்ளது. அவற்றில் முக்கியமாக பின்வருவனவற்றை குறிப்பிடலாம்.

⦁ எரிபொருள் உதவி: இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு உதவும் வகையில் இந்தியா இலங்கைக்கு வழங்கிய 500 மில்லியன் அமெரிக்க டொலர் கள் எண்ணெய்க் கடன். 

⦁ உணவு மற்றும் மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை பெற்றுக் கொள்வதற்காக ஒரு பில்லியன் டொலர்கள் கடன் வசதி. 

⦁ 400 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பணப்பரிமாற்றல் உள்ளடங்கலாக 2.5 பில்லியன் அமெரிக்க டொலர்கள் கடனுதவி. 

⦁ துறைமுகங்கள், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தி போன்ற முக்கிய துறைகளில் இலங்கையில் மேம்படுத்தப்பட்ட இந்திய முதலீட்டின் மூலம் நடுத்தர முதல் நீண்ட கால திறன் உருவாக்கத்திற்கான முயற்சிகளை இந்திய அரசு தொடர்ந்து ஊக்குவித்து வருகின்றமை.

⦁ பொருளாதார மேம்பாட்டு மற்றும் கொள்கை அமுலாக்க ஆலோசனை  வழங்கி வருகின்றமை.

⦁ மனிதாபிமான உதவி, இராணுவ உதவி, கலாசார உதவி உள்ளிட்ட ஏனைய உதவிகள்

⦁ பொருளாதார பரிவர்த்தனைகளுக்கு இந்திய ரூபாவினை பயன்படுத்துதல் 

 இலங்கை மற்றும் இந்தியாவிற்கு இடையிலான பொருளாதார பரிவர்த்தனைகளுக்கு இந்திய ரூபாவினை பயன்படுத்துவது குறித்து இந்தியாவும், இலங்கையும் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ள இலங்கை வங்கி , பாரத ஸ்டேட் வங்கி மற்றும் இந்தியன் வங்கி பிரதிநிதிகள் இதுதொடர்பான தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொண்டுள்ளனர். 

இந்த உதவிகள் வாயிலாக இலங்கை மக்கள் தங்களுடைய வாழ்க்கையிலும், வியாபார நடவடிக்கைகளிலும்  ஏற்பட்ட  பேரழிவிலிருந்து மீண்டெழுந்து வருவதற்கு பேருதவியாக இருகின்றது. குறிப்பாக மக்கள் மற்றும் வியாபாரிகளிடம் காணப்பட்ட ஒரு எதிர்மறை எண்ணங்கள் இந்த உதவிகளின் மூலமாக மாறிவிட்டது. இதன் காரணமாக நம்மால் சாதிக்க முடியும், வழமை போன்று மீண்டெழுந்து வரமுடியும் என்கின்ற நேர் மறையான எண்ணங்களினையும் மனோ சக்தியையும் கொடுத்துள்ளது.

இலங்கை அரசாங்கம் நிச்சயமாக மனதில் ஒன்றை வைத்துக்கொள்ள வேண்டும். அது என்னவென்றால்  “உதவி என்பது நாம் தேவையில் இருக்கும் பொழுது கிடைப்பது”.  ஆகவே பிறநாடுகளும், வெளிநாட்டு நிதிநிறுவனங்களும் எப்பொழுதும் உதவிசெய்யும் என்ற எண்ணத்தில் செயல்படாது, அவ்வாறு பெறப்பட்ட உதவிகளின் வாயிலாக (குறிப்பாக இந்தியாவிடம்) எவ்வாறு மீண்டும் நம்மை செழுமைப்படுத்தி இனிவரும் காலத்தில் வளமுள்ள ஒரு பொருளாதாரத்தை உருவாக்க முடியும் என்கின்ற நோக்கத்துடன் செயல்படுதல் வேண்டும்.  அந்த வகையில் பின்வருவனவற்றை கவனத்தில் கொள்ளல் வேண்டும்.

⦁ தற்போது கிடைக்கின்ற உதவிகளில் அனேகமானவை கடன்களாக அமைந்து காணப்படுகின்றன. ஆகவே என்றோ ஒருநாள் இலங்கை அரசாங்கம் அதனை வட்டியுடன் திருப்பி செலுத்த வேண்டும்.

⦁ அவ்வாறு கிடைக்கின்ற உதவிகளின் வாயிலாக மக்களுக்கும், வியாபார நிறுவனங்களுக்கும் உடனடியாக தேவைப்படுகின்ற பொருட்கள் மற்றும் சேவைகளினை  பெற்றுக்கொடுத்தல் வேண்டும். 

⦁ பெற்றுக்கொண்ட உதவிகளின் வாயிலாக மேற்கொள்ளப்படுகின்ற செயல் திட்டங்களுக்கு எவ்வகையில் பணம் ஒதுக்கீடு செய்யப்படுகிறது, அதன் மூலம் மக்களும் வியாபாரிகளும் எவ்வாறான நன்மைகளை பெற்றுக்கொள்ள போகின்றார்கள் போன்றவை உரிய முறையில்  இனங்காணப்படுதல் வேண்டும். 

⦁ வியாபார கொடுக்கல் வாங்கல்களினை வழமைக்கு கொண்டுவருவதன் வாயிலாகவே மக்கள் தமது வருமானத்தை ஈட்டிக்கொள்ளக்கூடிய சந்தர்ப்பம் ஏற்படும். அதன்மூலம் அவர்களுடைய நாளாந்த செயற்பாடுகளை தங்கு தடையின்றி செய்யக் கூடியதாக இருக்கும்.

⦁ வியாபார நடவடிக்கைகளை முறையாக செயல்படுத்துவதன் வாயிலாக அரசாங்கத்தினால் உள்நாட்டு உற்பத்திக்கு தேவையான மூலப்பொருட்களை பெற்றுக் கொடுக்கக் கூடியதாக இருக்கும். இதன் காரணமாக வேலை வாய்ப்பு மற்றும் அரசாங்கம் திட்டமிட்டபடி வரிவருமானத்தையும் பெற்றுக் கொள்ள முடியும்.

⦁ முறைப்படியாக இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்துவதன் வாயிலாக பொருட்கள் மற்றும் சேவைகளின் வளங்களினை அதிகரித்து பணவீக்கத்தினை கட்டுப்படுத்தக் கூடியதாக இருக்கும்.

⦁ அரசாங்கத்தின் செயல் திட்டங்களில் தேவையற்ற ஆடம்பர செலவுகளை குறிப்பிட்ட காலம் வரை தவிர்த்துக் கொள்ளல் மிகவும் முக்கியம்.

⦁ ஏற்கனவே பெற்றுக் கொண்ட கடன் மற்றும் அதற்கான வட்டியினை செலுத்துவதற்காக தற்போது நிதி உதவியாக கிடைக்கின்ற பணத்தினை பயன்படுத்துதல் அறவே தவிர்த்தல் வேண்டும்.

⦁ கிடைக்கப்பெற்ற புதிய உதவிகள் மற்றும் கடன்கள் (குறிப்பாக  இந்தியாவிலிருந்து கிடைக்கப்பெற்ற புதிய உதவிகள் மற்றும் கடன்கள்) பற்றிய முழு விபரம், அவற்றின் பயன்பாடுகள், அதனால் வீழ்ச்சி அடைந்த பொருளாதாரத்தில் எவ்வகையான சாதக விளைவுகள் ஏற்படும், போன்ற  முழு விபரமும் காலத்திற்கு காலம் மக்களுக்கு உரிய முறையில் தெரியப்படுத்தல் வேண்டும்.

⦁ திட்டமிட்ட செயல்திட்டங்களினை சீரழிக்கும் முகமாக சட்டத்திற்கு முரணான எந்தவித செயல்பாடுகளும் நடைபெறாத வண்ணம் கண்காணித்தல் அவசியம். குறிப்பாக ஊழல், லஞ்சம் மற்றும் சட்டத்தை மீறுகின்ற ஏனைய செயற்பாடுகளை இனங்கண்டு அவற்றினை கடுமையாக தண்டிக்க கூடியதாக சட்ட நடவடிக்கைகள் எடுத்தல் வேண்டும். இதன் வாயிலாக சிறந்த முறையில் திட்டங்களை அமுல்படுத்தி, அதிகப்படியான பெறுபேறுகளினை இனி வரும் காலங்களில் இலங்கை  பெற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்கும். 

⦁ அரசாங்கத்தினால் முன்மொழியப்படுகின்ற புதிய செயற்திட்டங்களின் வாயிலாக பெற்றுக் கொள்ள வேண்டிய இலக்கினை அடையாமல் இருக்கும் சந்தர்ப்பங்களில், அந்த திட்டத்திற்கு பொறுப்பாக இருக்கின்ற திட்டக்குழுவினை தண்டிக்கக்கூடிய சட்டம் உருவாக்கப்படுதல் வேண்டும்.  இதன் வாயிலாக புதிய ஒரு முறைமையை இலங்கையில் ஏற்படுத்தி நாட்டு மக்களுக்கு சிறந்த  எதிர்காலத்தை உருவாக்க முடியும்.

⦁ முடியுமானவரையில் உள்நாட்டு உற்பத்திகள் மற்றும் சேவைகள் சார்ந்த துறைகளினை ஊக்கப்படுத்தி தன்னிறைவு பொருளாதார முறைமையை நாட்டு மக்கள் மத்தியில் பிரபல்யப்படுத்தல் அவசியமாகின்றது. இதன்வாயிலாக மக்களுக்கு தேவையான பொருட்கள் மற்றும் சேவைகளினை உள்ளூரிலேயே பெற்றுக் கொள்ளக் கூடியதாக அமைத்து, இறக்குமதியில் தங்கியிருக்காது, பாரியளவில் இறக்குமதிக்காக தேவைப்படுகின்ற வெளிநாட்டு செலாவணி வெளிப்பாய்ச்சலை தடுக்க முடியும். இதன் மூலம் நிரந்தரமாக அமெரிக்க

⦁ டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியினை அதிகரிக்க கூடிய சந்தர்ப்பம் ஏற்படும். 

⦁ காலத்திற்கேற்ற புதிய கல்வி செயற்திட்டங்களை உள்வாங்குவதுடன், ஆரம்பப்பாடசாலை தொடக்கம் பல்கலைக்கழகம் வரையிலும் நாட்டுப்பற்றினை உருவாக்கி, நாட்டிற்காக மக்கள் அனைவரும் செயல்படுவதன் முக்கியத்துவத்தை உணர்த்துதல் வேண்டும். இதன் வாயிலாக இனிவரும் காலத்தில் ஜப்பான் நாடு போன்று சிறந்த பிரஜைகளை உருவாக்கி, வளமான இலங்கையினை உருவாக்க முடியும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மோடி சூட்டிய பெயர் அங்கீகரிப்பு

2024-03-28 18:11:54
news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

வரலாற்றில் முதல் முறையாக... சவூதியில் ஒரு...

2024-03-28 18:03:05
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48
news-image

பலஸ்தீன இனப்படுகொலைக்கு மேற்குலகின் ஆதரவு 

2024-03-25 16:01:54
news-image

காஸாவுக்குள் பலஸ்தீன அதிகார சபையைத் திணித்தல்...

2024-03-25 15:24:04