logo

கடல் தொழில் இல்லாத மீனவர்களுக்கு அமைச்சர் டக்ளஸ் அனுமதிப்பத்திரம் வழங்கினார் என்பது பொய் பிரச்சாரம் - மட்டு. மீனவர் சங்கங்கள் கண்டனம்

Published By: Nanthini

26 Mar, 2023 | 08:39 PM
image

டற்றொழில் இல்லாத மீனவர்களுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அனுமதிப்பத்திரம் வழங்கியுள்ளார் என்பது பொய்யான பிரச்சாரம். எனவே, உண்மைக்கு புறம்பான இப்பிரச்சாரத்துக்கு மட்டக்களப்பு மாவட்ட மீனவர் சங்கங்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

மட்டக்களப்பு கல்லடியிலுள்ள வெஸ் ஒஃப் மீடியா கற்கை நிலையத்தில் நேற்று சனிக்கிழமை (25) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் மாவட்ட தேசிய மீனவர் மகா சம்மேளனத்தின் தலைவர் நற்குணம் பத்மநாதன், முகைதீன், ஆழ்கடல் மற்றும் வாவி கூட்டுறவு சங்க செயலாளர் வை.எல்.பள்ளித்தம்பி ஆகியோர் கலந்துகொண்டு இவ்வாறு தெரிவித்துள்ளனர். 

அவர்கள் மேலும் கூறுகையில்,

கடந்த 2019ஆம் ஆண்டு தொடக்கம் மட்டக்களப்பு மாவட்டத்தில் சங்கு, இறால், மீன்கள், அட்டைகளை பிடிப்பதற்கான அனுமதிப்பத்திரத்தை பெற்றுக்கொள்பவர்களின் பெயர்கள் வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டு, அனுமதிப்பத்திரங்கள் நாரா அமைப்பால் வழங்கப்பட்டு வருகின்றன.

எனினும், கடந்த சில தினங்களுக்கு முன்னர் கடற்றொழில் இல்லாதவர்களுக்கு மீன்பிடி அமைச்சர் அட்டை பிடிக்க அனுமதிப்பத்திரம் வழங்கியதாக பெய்யான பிரச்சாரங்கள் சில ஊடகங்கள் ஊடாக வெளிவந்துள்ளன.

எனவே, நாங்கள் மீனவர்கள் இல்லையா? எங்களுக்கும் தான் அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ளது. இது சட்ட ரீதியாக வழங்கப்பட்டது. இருந்தபோதும் சிலர் இந்த விஷமத்தனமான பொய் பிரச்சாரத்தில் ஈடுபட்டு குழப்பி வருகின்றனர். எனவே, இவ்வாறான ஆதாரமற்ற பொய் குற்றச்சாட்டை மீனவர் சங்கங்கள் வன்மையாக கண்டிக்கிறது.

அடுத்து, மண்ணெண்ணெய் பிரச்சினை. காத்தான்குடியில் இருந்து மட்டக்களப்புக்கு நாங்கள் வரவேண்டியுள்ளது. முதல் ஒரு லீற்றர் மண்ணெண்ணெய் 70 ரூபாயாக இருந்தது. இப்போது 305 ரூபாயாக உள்ளது. 

எப்படி தொழில் செய்யமுடியும்? மின்சாரத்தின் விலை அதிகரிப்பும் அப்படித்தான். முதலில் 1500 ரூபாய் வரையில் காணப்பட்ட மின்சார பட்டியல் தற்போது 3500 ரூபாயாக இருக்கின்றது. எப்படி பணம் செலுத்த முடியும்? 

நாங்கள் மிகவும் கஷ்டத்தின் மத்தியில் வாழ்ந்து வருகின்றோம். இலங்கை மீனவர்களுக்கு பெரும் சிரமங்கள் இருக்கிறது. அழுவதா, சாவதா என்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே, அரசேனும் தொழிலாளர்களுக்கு திட்டமிட்டு உதவிகள் செய்ய வேண்டும். அத்துடன் எங்களுக்குரிய கடல் தொழில் மற்றும் அட்டை, மீன் பிடிக்கின்ற வளங்களை அரசாங்கம் பெற்றுத்தர வேண்டும்.

அதேவேளை வடக்கில் இலங்கையின் கடல் எல்லைக்குள் இந்திய மீனவர்கள் றோலர் படகுகளில் ஊடுருவி வந்து, மீனை பிடித்துச் செல்வதால் எங்களது மீனவர்களால் மீன்பிடிக்க முடியாதுள்ளது. எனவே, இந்திய மீனவர்களை முற்றாக எதிர்க்கின்றோம்.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மீன்பிடி அமைச்சராக பதவியேற்றதும் மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி, பல உதவிகளை செய்து வருவதுடன், சங்கு, இறால், கடல் மீன்கள், அட்டைகளை பிடிப்பதற்கு அனுமதிப்பத்திரம் பெற்றுத் தந்துள்ளார். அவருக்கு நன்றிகள் என தெரிவித்துள்ளனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஒளி மற்றும் ஒலி பரப்பு சட்டமூலம்...

2023-06-10 20:20:30
news-image

யாழில் தனியார் கல்வி நிலையங்கள் சங்கமொன்றை...

2023-06-10 20:17:48
news-image

யாழில் 'சுயமரியாதை நடைபவனி' முன்னெடுப்பு

2023-06-10 20:16:58
news-image

வீடொன்றினுள் புகுந்து நகை, பணம், கையடக்கத்தொலைபேசியை...

2023-06-10 20:15:20
news-image

மாங்குளம் பகுதியில் உயிரிழந்த நிலையில் காட்டு...

2023-06-10 19:56:20
news-image

பிள்ளைகளின் போதைப்பொருள் பாவனைக்கு பெற்றோரின் கவனயீனமும்...

2023-06-10 19:53:28
news-image

மொபைல் போன் பாவனையாளர்களுக்கு ஒரு இனிப்பான...

2023-06-10 17:45:01
news-image

பதுரலிய, மத்துகம வீதியில் இடம்பெற்ற விபத்தில்...

2023-06-10 17:04:49
news-image

சமூக அரசியல் செயற்பாட்டாளர் பிரசாத்வெலிக்கும்புரவை சிஐடியினர்...

2023-06-10 16:51:18
news-image

ஸ்ரீலங்கா டெலிக்கொம் தனியார் மயப்படுத்தல் தேசிய...

2023-06-10 15:22:50
news-image

விடுதலைப்புலிகளால் பல்வேறுகாலகட்டங்களில் பல தமிழ் அரசியல்வாதிகள்...

2023-06-10 15:02:42
news-image

வெளியக சுயநிர்ணயம் கோரும் நிலை ஏற்படும்...

2023-06-10 16:14:27