logo

தாயை கொலை செய்த மகன் 8 வருடங்களுக்கு பின்னர் கைது!

Published By: Nanthini

26 Mar, 2023 | 04:27 PM
image

(எம்.வை.எம்.சியாம்)

கெப்பத்திகொல்லாவ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் தாயை கொலை செய்த மகன் 8 வருடங்களுக்கு பிறகு நேற்று (25)  கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த 2015ஆம் ஆண்டு ஜூன் மாதம் 5ஆம் திகதி 50 வயதுடைய பெண்ணொருவர் வீட்டில் கொலை செய்யப்பட்ட நிலையில் பொலிஸாரால் சடலமாக மீட்கப்பட்டிருந்தார். 

இந்நிலையில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்திருந்திருந்தனர்.

இச்சம்பவம் தொடர்பில் குறித்த பெண்ணின் மகன் 8 வருடங்களுக்கு பின்னர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

32 வயதுடைய அவர், கட்டுநாயக்க இராணுவ முகாமில் கடமையாற்றுவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

படுகொலை செய்யப்பட்ட பெண்ணின் கணவர் பொலிஸ் உத்தியோகத்தர் எனவும் அவர் இறுதி யுத்தத்தின்போது தாக்குதலில் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மகனால் துன்புறுத்தப்படுவதாக தாய் பல முறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதோடு, முன்னதாக மகன் பொலிஸாரால் எச்சரிக்கப்பட்டமையும் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் சந்தேக நபர் தாயை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளதாக தடயவியல் அறிக்கையின் மூலம் தெரியவந்துள்ளது.

இன்றைய தினம் சந்தேக நபர் கெப்பத்திகொல்லாவ நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் கெப்பத்திகொல்லாவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஒளி மற்றும் ஒலி பரப்பு சட்டமூலம்...

2023-06-10 20:20:30
news-image

யாழில் தனியார் கல்வி நிலையங்கள் சங்கமொன்றை...

2023-06-10 20:17:48
news-image

யாழில் 'சுயமரியாதை நடைபவனி' முன்னெடுப்பு

2023-06-10 20:16:58
news-image

வீடொன்றினுள் புகுந்து நகை, பணம், கையடக்கத்தொலைபேசியை...

2023-06-10 20:15:20
news-image

மாங்குளம் பகுதியில் உயிரிழந்த நிலையில் காட்டு...

2023-06-10 19:56:20
news-image

பிள்ளைகளின் போதைப்பொருள் பாவனைக்கு பெற்றோரின் கவனயீனமும்...

2023-06-10 19:53:28
news-image

மொபைல் போன் பாவனையாளர்களுக்கு ஒரு இனிப்பான...

2023-06-10 17:45:01
news-image

பதுரலிய, மத்துகம வீதியில் இடம்பெற்ற விபத்தில்...

2023-06-10 17:04:49
news-image

சமூக அரசியல் செயற்பாட்டாளர் பிரசாத்வெலிக்கும்புரவை சிஐடியினர்...

2023-06-10 16:51:18
news-image

ஸ்ரீலங்கா டெலிக்கொம் தனியார் மயப்படுத்தல் தேசிய...

2023-06-10 15:22:50
news-image

விடுதலைப்புலிகளால் பல்வேறுகாலகட்டங்களில் பல தமிழ் அரசியல்வாதிகள்...

2023-06-10 15:02:42
news-image

வெளியக சுயநிர்ணயம் கோரும் நிலை ஏற்படும்...

2023-06-10 16:14:27