logo

பாணந்துறையில் கடல் அலைகளால் அடித்துச் செல்லப்பட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர்; காப்பாற்றிய பொலிஸ் பிரிவினர்!

Published By: Nanthini

26 Mar, 2023 | 01:01 PM
image

பாணந்துறை கடற்கரையில் நீராடிக்கொண்டிருந்தபோது அலைகளால் அடித்துச்செல்லப்பட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வரை பாணந்துறை பிரதேச பொலிஸ் உயிர்காப்புப் பிரிவினர் காப்பாற்றியுள்ளனர். 

களுத்துறை வடக்கு, கல்பட டயகம பிரதேசத்தில் வசிக்கும் 29 மற்றும் 35 வயதுடைய தம்பதியரும், 13 மற்றும் 29 வயதுடைய அவர்களது சகோதர, சகோதரிகளுமே இவ்வாறு  காப்பாற்றப்பட்டுள்ளனர். 

இந்த நால்வரும் நேற்று (25) மாலை 4.30 மணியளவில் பாணந்துறை கடற்கரையில் நீராடிக்கொண்டிருந்தபோது அலையில் சிக்கி சுமார் 50 மீற்றர் தூரம் இழுத்துச் செல்லப்பட்டுள்ளனர். 

இதனையடுத்து பாணந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொலிஸ் உயிர்காப்பு பிரிவின்  பொலிஸ் கான்ஸ்டபிள்கள் மற்றும் சுழியோடிகள் உடனடியாக செயற்பட்டு அவர்கள் அனைவரையும் காப்பாற்றியுள்ளனர்.  

இதனையடுத்து காப்பாற்றப்பட்ட நால்வரும்  பாணந்துறை போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஒளி மற்றும் ஒலி பரப்பு சட்டமூலம்...

2023-06-10 20:20:30
news-image

யாழில் தனியார் கல்வி நிலையங்கள் சங்கமொன்றை...

2023-06-10 20:17:48
news-image

யாழில் 'சுயமரியாதை நடைபவனி' முன்னெடுப்பு

2023-06-10 20:16:58
news-image

வீடொன்றினுள் புகுந்து நகை, பணம், கையடக்கத்தொலைபேசியை...

2023-06-10 20:15:20
news-image

மாங்குளம் பகுதியில் உயிரிழந்த நிலையில் காட்டு...

2023-06-10 19:56:20
news-image

பிள்ளைகளின் போதைப்பொருள் பாவனைக்கு பெற்றோரின் கவனயீனமும்...

2023-06-10 19:53:28
news-image

மொபைல் போன் பாவனையாளர்களுக்கு ஒரு இனிப்பான...

2023-06-10 17:45:01
news-image

பதுரலிய, மத்துகம வீதியில் இடம்பெற்ற விபத்தில்...

2023-06-10 17:04:49
news-image

சமூக அரசியல் செயற்பாட்டாளர் பிரசாத்வெலிக்கும்புரவை சிஐடியினர்...

2023-06-10 16:51:18
news-image

ஸ்ரீலங்கா டெலிக்கொம் தனியார் மயப்படுத்தல் தேசிய...

2023-06-10 15:22:50
news-image

விடுதலைப்புலிகளால் பல்வேறுகாலகட்டங்களில் பல தமிழ் அரசியல்வாதிகள்...

2023-06-10 15:02:42
news-image

வெளியக சுயநிர்ணயம் கோரும் நிலை ஏற்படும்...

2023-06-10 16:14:27