வவுனியா மாவட்டத்திலுள்ள செட்டிகுளம் பகுதியிலிருந்து மெனிக்பாம் செல்லும் பிரதான வீதியிலிருக்கும், அருவித்தோட்டம் சிவானந்தா வித்தியாலயம் பாடசாலை பகுதியிலுள்ள பஸ் தரிப்பிடத்தின் இன்றைய நிலைதான் இதுவாகும்.

கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக இப்படியாக காட்சியளித்து கொண்டிருக்கின்றது. குறித்த வீதியினைப்பயன்படுத்தி செட்டிகுளம் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் சென்றுவருகின்றார்கள்.

அருவித்தோட்டப் பாடசாலையில் 538 மாணவர்கள் கல்வி கற்று வருகின்றார்கள். இப்பகுதியில் வசித்துவரும் பொதுமக்கள், மாணவர்கள் இப்பேரூந்து தரிப்பிடத்தில் மழை, வெயில் நேரங்களில் காத்திருக்கின்ற நிலையில்  இல்லை. பலரிடம் இது தொடர்பில் முறையிட்டும் இன்று வரையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை என்று இப்பகுதியிலுள்ள கிராமமக்கள் தெரிவித்துள்ளனர்.