அங்குரார்ப்பண WPL இறுதிப் போட்டியில் டெல்ஹி - மும்பை இன்று மோதுகின்றன

Published By: Vishnu

26 Mar, 2023 | 10:52 AM
image

(நெவில் அன்தனி)

இந்தியாவில் நடைபெற்றுவந்த 5 அணிகளுக்கு இடையிலான அங்குரார்ப்பண மகளிர் பிறீமியர் லீக் (WPL) இருபது 20 கிரிக்கெட் சுற்றுப் போட்டி மும்பை ப்றேபோன் விளையாட்டரங்கில் இன்று ஞாயிற்றுக்கிழமை (26) இரவு டெல்ஹி கெப்பிட்டல்ஸ் அணிக்கும் மும்பை இண்டியன்ஸ் அணிக்கும் இடையிலான இறுதிப் போட்டியுடன் நிறைவுக்கு வருகிறது.

டெல்ஹி கெப்பிட்டல்ஸ், மும்பை இண்டியன்ஸ் ஆகிய இரண்டு அணிகளும் தலா 6 வெற்றிகளுடன் 12 புள்ளிகளைப் பெற்றிருந்தன.

நிகர ஓட்ட வேக அடிப்படையில் முதலாம் இடத்தைப் பெற்ற டெல்ஹி கெப்பிட்டல்ஸ் நேரடியாக இறுதிப் போட்டியில் விளையாட தகுதிபெற்றது.

ஆனால், நீக்கல் போட்டியில் UP வொரியர்ஸ் அணியை 72 ஓட்டங்களால் வெற்றிகொண்டதன் மூலமே மும்பை இண்டியன்ஸ் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

நெட் சிவர் - ப்றன்ட் குவித்த ஆட்டம் இழக்காத 72 ஓட்டங்களும் மகளிர் பிறீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் இசி வொங் பதிவு செய்த முதலாவது ஹெட்-ட்ரிக்கும் மும்பை இண்டியன்ஸின் வெற்றியை இலகுவாக்கின.

இந்த இரண்டு அணிகளும் லீக் சுற்றில் இரண்டு தடவைகள் ஒன்றையொன்று சந்தித்துக்கொண்டபோது முதலாவது போட்டியில் மும்பை இண்டியன்ஸ் 8 விக்கெட்களாலும் 2ஆவது போட்டியில் டெல்ஹி கெப்பிட்டல்ஸ் 9 விக்கெட்களாலும் வெற்றிபெற்றிருந்தன.

இரண்டாவது போட்டியில் டெல்ஹி கெப்பிட்டல்ஸ் பதிலுக்கு துடுப்பெடுத்தாடி பெற்ற 110 ஓட்டங்களே இரண்டு அணிகளுக்கு இடையிலான 2 போட்டிகளிலும் பெறப்பட்ட அதிகூடிய மொத்த எண்ணிக்கையாகும்.

இரண்டு அணிகளிலும் சிறந்த துடுப்பாட்ட வீராங்கனைகளும் பந்துவீச்சாளர்களும் இடம்பெறுவதால் இறுதிப் போட்டி விறுவிறுப்பைத் தோற்றுவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டெல்ஹி கெப்பிட்டல்ஸ் அணித் தலைவர் மெக் லெனிங் 2 அரைச் சதங்களுடன் 310 ஓட்டங்களை மொத்தமாக பெற்று சுற்றுப் போட்டியில் அதிக ஓட்டங்கள் பெற்றவர்கள் வரிசையில் முதலிடத்தில் இருக்கிறார்.

ஷஃபாலி வர்மா 2 அரைச் சதங்களுடன் 241 ஓட்டங்களையும் மாரிஸ்ஆன் கெப் 159 ஓட்டங்களையும் அலிஸ் கெப்சி 159 ஓட்டங்களையும் ஜெமிமா ரொட்றிக்ஸ் 117 ஓட்டங்களையும் பெற்றுள்ளனர்.

பந்துவீச்சில் ஷிக்கா பாண்டி 10 விக்கெட்களையும் மாரிஸ்ஆன் கெப் 9 விக்கெட்களையும் ஜெசி ஜோனாசன் 8 விக்கெட்களையும் தாரா நொரிஸ் 7 விக்கெட்களையும் கைப்பற்றியுள்ளனர்.

மும்பை இண்டியன்ஸ் அணியில் நெட் சிவர் - ப்றன்ட் 2 அரைச் சதங்களுடன் 272 ஓட்டங்களையும் ஹெய்லி மெத்யூஸ் 258 ஓட்டங்களையும் அணித் தலைவி ஹார்மன்ப்ரீத் 3 அரைச் சதங்களுடன் 244 ஓட்டங்களையும் யஷ்திகா பாட்டியா 210 ஓட்டங்களையும் அமேலியா கேர் 135 ஓட்டங்களையும் பெற்று துடுப்பாட்டத்தில் திறமையை வெளிப்படுத்தியுள்ளனர்.

சய்க்கா இஷாக் 15 விக்கெட்களையும் அமேலியா கேர், ஹெய்லி மெத்யூஸ் ஆகிய இருவரும் தலா 13 விக்கெட்களையும் இஸி வொங் 12 விக்கெட்களையும் நெட் சிவர் - ப்றன்ட் 10 விக்கெட்களையும் வீழ்த்தி பந்துவீச்சில் சிறப்பாக செயற்பட்டுள்ளனர்.

தனிப்பட்ட வீராங்கனைகளின் பெறுதிகளின் அடிப்படையில் மும்பை இண்டியன்ஸ் சற்று முன்னிலையில் இருக்கின்றபோதிலும் டெல்ஹி கெப்பிட்டல்ஸ் இந்தப் போட்டியை இலகுவில் நழுவ விடும் என எதிர்பார்க்க முடியாது.

அணிகள்

டெல்ஹி கெப்பிட்டல்ஸ்: மெக் லெனிங் (தலைவி), ஜெமிமா ரொட்றிக்ஸ் (உதவித் தலைவி), ஷஃபாலி வர்மா, மாரிஸ்ஆன் கெப், அலிஸ் கெப்சி, ஜெஸ் ஜோனாசன், தானியா பாட்டியா, அருந்ததி ரெட்டி, ராதா யாதவ், ஷிக்கா பாண்டி, பூணம் யாதவ், தாரா நொரிஸ், லோரா ஹெரிஸ், மின்னு மணி.

மும்பை இண்டியன்ஸ்: ஹார்மன்ப்ரீத் கோர் (தலைவி), யஸ்திகா பாட்டியா, ஹெய்லி மெத்யூஸ், நெட் சிவர் - ப்றன்ட், அமேலியா கேர், பூஜா வஸ்த்ராக்கர், இசி வொங், ஹுமாரியா காஸி, ஆமன்ஜோத் கோர், ஜிந்திமணி கலிட்டா, சய்க்கா இஷாக், நீலம் பிஷ்த், ப்ரியன்கா பாலா, ஹீதர் க்ரஹம், தாரா குஜார், க்ளோ ட்ரயொன், சோனம் யாதவ்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

23 வயதுக்குட்பட்ட பொதுநலவாய பளுதூக்கல் சம்பியன்ஷிப்பில்...

2023-06-01 17:19:41
news-image

47ஆவது தேசிய கூடைப்பந்தாட்டம்: இருபாலாரிலும் வட...

2023-06-01 15:51:26
news-image

"இந்திய மல்யுத்த வீராங்கனைகள் பொலிஸாரினால் நடத்தப்பட்ட...

2023-06-01 14:03:45
news-image

டோனிஅரசியல் களத்தை கருத்தில் கொள்ள வேண்டும்...

2023-06-01 12:40:51
news-image

20 ஆவது ஆசிய கனிஷ்ட மெய்வல்லுநர்...

2023-06-01 09:41:55
news-image

ரொஹான் டி சில்வா போட்டியின்றி மீண்டும்...

2023-05-31 17:32:53
news-image

நான் அன்றிரவு உறங்கவில்லை - இறுதி...

2023-05-31 15:26:14
news-image

ஜோகோவிச்சுக்கு எதிராக ஓழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு...

2023-05-31 15:06:31
news-image

கனிஷ்ட மெய்வல்லுநர் போட்டியில் வத்தளை லைசியம்...

2023-05-31 09:59:37
news-image

ஆசிய கிண்ண கிரிக்கெட் இழுபறி தொடர்கிறது...

2023-05-31 09:39:26
news-image

ஆப்கானிஸ்தானுடனான ஒரு நாள் தொடர்: இலங்கை...

2023-05-30 22:11:44
news-image

மலேஷிய மாஸ்டர்ஸ் பெட்மின்டன் போட்டியில் இந்தியாவின்...

2023-05-30 16:37:29