இலங்கை அணியின் முன்னணி சகலத்துறை வீரர் திசர பெரேரா அவுஸ்திரேலியாவில் இடம்பெற்று வருகின்ற 'பிக் பேஷ் லீக்' தொடரில் விளையாடவுள்ளார்.

குறித்த தொடரில் மெல்போர்ன் ரினேகாட்ஸ் அணிக்காக இவர் விளையாடவுள்ளார்.

போட்டியின் போது உபாதைக்குள்ளான மேற்கிந்திய தீவுகளின் பிராவோவுக்கு பதிலாக இவர் அணிக்குள் அழைக்கப்பட்டுள்ளார்.

பிக் பேஷ் லீக்கில் ஹோபார்ட் ஹிரிக்கன்ஷ் அணிக்காக இலங்கை அணியின் குமார் சங்கக்கார விளையாடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது