தேசிய நல்லிணக்கத்துக்கு 'நிலைமாறுகால செயன்முறை' தேவை

Published By: Nanthini

25 Mar, 2023 | 08:05 PM
image

தென்னாபிரிக்காவில் இரு தசாப்தங்களுக்கும் அதிகமான காலத்துக்கு முன்னர் இடம்பெற்ற நல்லிணக்கச் செயன்முறைகளை பற்றியும் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவைப் பற்றியும் ஆராய்வதற்காக அமைச்சர்கள் குழுவொன்று அந்த நாட்டுக்கு விஜயம் மேற்கொள்வதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருக்கின்றன. 

இன ஒதுக்கலுக்கு எதிரான பல தசாப்த கால போராட்டத்தின்போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க் குற்றங்களை கையாண்டதில் ஒரு முன்னோடியாக அமைந்தமைக்காக தென்னாபிரிக்காவின் நல்லிணக்கச் செயன்முறைகளும் குறிப்பாக உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவும் உலகளாவிய அங்கீகாரத்தை பெற்றிருக்கின்றன.

தென்னாபிரிக்காவின் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் முக்கியமான அம்சம் அதன் ஒளிவுமறைவின்மையும், திறந்த போக்குமாகும். 

ஆணைக்குழுவினால் நடத்தப்பட்ட பகிரங்க விசாரணைகள் இன ஒதுக்கல் வருடங்களின்போது இழைக்கப்பட்ட மீறல்களை தென்னாபிரிக்கர்கள் அறிந்துகொள்வதை உறுதிப்படுத்தின. 

அப்பட்டமான மனித உரிமை மீறல்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, சமாதானம் மற்றும் நல்லிணக்கம் தொடர்பில் இலங்கையர்களுக்கு   புதிய நம்பிக்கையை அத்தகைய ஆணைக்குழுவொன்றினால் ஏற்படுத்த முடியும் என்று தேசிய சமாதானப் பேரவை நம்புகிறது.

உள்நாட்டுப் போர் மற்றும் இடதுசாரிக் கிளர்ச்சிகளின்போது காணாமல்போன தங்கள் உறவினர்களுக்கு நேர்ந்த கதி பற்றி அவர்களின் குடும்பத்தினர் அறிந்துகொள்வதற்கு ஆணைக்குழுவினால் வகைசெய்யக்கூடியதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நல்லிணக்கச் செயன்முறை இலங்கையின் இயல்பான நிலைவரங்களுக்கு ஏற்புடையதாக உள்நாட்டில் வகுக்கப்பட்டதாக இருக்கவேண்டும். அந்த செயன்முறை அவ்வாறு அமைந்தால் மனித உடல் அதன் அவயவத்தை எவ்வாறு அந்நியமானது என்று நிராகரிக்க முடியாதோ, அதே போன்று அதையும் நிராகரிக்க முடியாமல் போகும்.

தீங்கிழைப்புக்கு இழப்பீடு வழங்கும் நீதி (Restorative Justice) மற்றும் தண்டனை வழங்கும் நீதி (Retributive Justice) செயன்முறைகளுக்கு அப்பால் செல்வதற்கு இலங்கை முயற்சிக்க வேண்டும் என்று தேசிய சமாதானப் பேரவை நம்புகிறது. 

குற்றவியல் நீதி முறைமை ஒரு தடுப்பு நடவடிக்கையின் வடிவமாக தண்டனை வழங்கும் நீதியை பயன்படுத்துகிறது. இது குற்றம் மீண்டும் இடம்பெறாமல் இருப்பதற்கான பாதுகாப்பை வழங்கவில்லை.

போருக்கு முன்னரான நிலைவரத்துக்கு  சமூகத்தை மீள ஏற்படுத்துவது நல்லிணக்கத்தை சாதிக்கப் போதுமானதல்ல. இயல்பான சமூக குற்றவுணர்வு இல்லாத நிலையில் மீறல்களுக்கு பொறுப்பானவர்களுக்கு தண்டனை வழங்குவது சமூகத்தை துருவமயப்படுத்தும்.

இன மோதல்களுக்கோ அல்லது பெரிய பரந்தளவிலான மோதல்களுக்கோ பொருத்தமில்லாத தண்டனை வழங்கும் நீதிச் செயன்முறையை விடவும் தென்னாபிரிக்கா பாணியிலான 'நிலைமாறுகால அணுகுமுறை' (Transformative approach) பொருத்தமானது என்று தேசிய சமாதானப் பேரவை நம்புகிறது.

வன்முறையை நிராகரிக்கின்ற அதேவேளை இலங்கை மக்களினால் ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய இலங்கையின் விழுமியங்களுக்கும் நீதி வடிவங்களுக்கும் இசைவான தீர்வுகளை கண்டுபிடிப்பதே சவாலாக அமையும். 

எனவே, பாதிக்கப்பட்டவர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்த உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு சகல சமூகங்களையும் பிரதிநிதித்துவப்படுத்துவதாக அமையவேண்டியது அவசியம் என்று தேசிய சமாதானப் பேரவை நம்புகிறது.

தென்னாபிரிக்காவில் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் உறுப்பினர்கள், நாடளாவிய ரீதியில் விண்ணப்பங்கள் கோரப்பட்டு, சுயாதீன தெரிவுக்குழு ஒன்றினால்  நேர்முகப் பரீட்சைகள் நடத்தப்பட்டே நியமிக்கப்பட்டனர்.

அந்த தெரிவுக்குழு நாட்டில் உள்ள சகல அரசியல் கட்சிகள், சிவில் சமூகம் மற்றும் மத அமைப்புக்களின் பிரதிநிதிகளைக் கொண்டதாக இருந்தது. அதேபோன்றே இலங்கையிலும் உகந்த கலந்தாலோசனைச் செயன்முறை மூலமாக ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் நியமனம் இடம்பெற வேண்டியது மிக மிக முக்கியமானதாகும்.

அதனால், தென்னாபிரிக்காவின் ஆணைக்குழுவின் செயன்முறைகளை ஆராய்பவர்கள், இலங்கையில் சமாதானம் மற்றும் நல்லிணக்கத்தை அடையும் முகமாக ஆணைக்குழுவொன்று அமைக்கப்பட்டு, நடைமுறைப்படுத்தப்படுவதை உறுதிசெய்யவேண்டியது அவசியமாகும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மத்திய கிழக்கு புவிசார் அரசியலில் ஈரானின்...

2024-04-19 18:33:36
news-image

எல்லா காலத்துக்கும் மிகவும் முக்கியமான ஒரு...

2024-04-19 14:59:40
news-image

கச்சதீவை வைத்து அரசியல் செய்யாதீர்கள்

2024-04-19 14:37:29
news-image

இந்தியப் பெருங்கடலில் 'சீனா - குவாட்'...

2024-04-18 10:36:33
news-image

'ஆரம்பிக்கலாமா?' : தமிழை கையிலெடுத்துள்ள பிரதமர்...

2024-04-17 19:36:36
news-image

சர்வதேச நீதிமன்றத்தில் ஆர்மேனியா - அஸர்பைஜான்...

2024-04-17 19:37:33
news-image

சிங்களவர்களாக ஒருங்கிணையும் இந்தியத் தமிழர் –...

2024-04-17 18:00:59
news-image

பிரித்தானியாவில் ஆளுங்கட்சி தோல்வி? சொந்த தொகுதியில்...

2024-04-17 11:04:13
news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13