(ஏ.என்.ஐ)
இந்தியாவின் ஜம்மு - காஷ்மீரில் இதுவரை 11,567 மெகாவாட் நீர்மின் ஆற்றல் கண்டறியப்பட்டு, அதில் 29 சதவீதம் மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளதாக புள்ளிவிபரங்கள் மூலம் தெரியவந்துள்ளது.
அத்துடன் தற்போது அங்கு இரண்டு நீர்மின் திட்டப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் இந்திய அரசு தெரிவித்துள்ளது.
அண்மையில் நடைபெற்ற இந்திய நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் அரசு தரப்பு இது தொடர்பாக கருத்து தெரிவித்தபோது, ஜம்மு - காஷ்மீரில் கடந்த மூன்று ஆண்டுகளில் 1,390 மெகாவாட் திறன் கொண்ட இரண்டு நீர்மின் திட்டங்கள் தொடங்கப்பட்டு, தற்போது இந்த இரண்டு திட்டங்களுக்கான பணிகளும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் இத்திட்டங்கள் எதிர்வரும் 2026ஆம் ஆண்டுக்குள் செயற்படுத்தப்படும் என குறிப்பிட்டுள்ளது.
850 மெகாவாட் ரிட்லி மற்றும் 540 மெகாவாட் குவாரா ஆகிய இந்த இரு நீர்மின் திட்டங்களும் 2021ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டுள்ளன.
இந்திய பண மதிப்பின்படி, 850 மெகாவாட் ரிட்லி திட்டம் 5,281.94 கோடி ரூபாய் செலவிலும், 540 மெகாவாட் குவாரா திட்டம் 4,526.12 கோடி ரூபாய் செலவிலும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன எனவும் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின்படி, நீர்மின் ஆற்றல் நிறைந்த ஜம்மு மற்றும் காஷ்மீரில் இதுவரை 11,567 மெகாவாட் நீர்மின் திறன் கண்டறியப்பட்டுள்ளதாகவும், அதேவேளை 3,360.0 மெகாவாட் நீர்மின் திறன் (29 சதவீதம்) செயற்படுத்தப்பட்டுள்ளது என்றும் கட்டுமானத்தில் 3,099.5 மெகாவாட் (26.8 சதவீதம்) நீர்மின் திறன் காணப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
எனினும், அரசு தெரிவித்த இரு திட்டங்களுக்கும் தேவையான மின்சாரத்தை வழங்குவதற்கான மின் கொள்முதல் ஒப்பந்தங்கள் இன்னும் கையெழுத்திடப்படவில்லை.
இந்நிலையில் நாட்டில் நீர்மின் திறனை வளர்ப்பதில் உள்ள முக்கிய சவால்களாக தொலைதூர இடம், கணிக்க முடியாத புவியியல், இயற்கை பேரழிவுகள், சுற்றுச்சூழல் மற்றும் வனப் பிரச்சினைகள் முதலியன காணப்படுவதாக இந்திய அரசு தெரிவித்துள்ளது.
மேலும், நீர்மின் ஆற்றலை மேம்படுத்தும் விடயத்தில் கவனம் செலுத்தி வருகிறது என்றும், நீர்மின் வசதிகளை சிறப்பாக பயன்படுத்துவதை உறுதி செய்வதற்கும், புதிய திட்டங்களை அமைப்பதற்கும் புதிய கொள்கை முடிவுகள் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் இந்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM