(எம்.மனோசித்ரா)
தமிழ் - சிங்கள புத்தாண்டை முன்னிட்டு ஏப்ரல் 10ஆம் திகதிக்கு முன்னர் அரச உத்தியோகத்தர்களின் சம்பளம் , ஓய்வூதியம் மற்றும் சமூர்த்தி கொடுப்பனவுகளை செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டி தெரிவித்துள்ளார்.
இதற்காக 140 பில்லியன் ரூபாவை ஒதுக்க வேண்டியுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டி சுட்டிக்காட்டினார்.
ஏப்ரல் மாதம் என்பது ஏனைய மாதங்களை விட சுமை கூடிய மாதமாகும். மாத இறுதியில் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளை ஏப்ரல் 10ஆம் திகதிக்கு முன்னர் மேற்கொள்ள வேண்டியுள்ளது.
அதற்கமையவே மேற்கூறப்பட்டவற்றை முன்னதாகவே வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
எவ்வாறான நெருக்கடிகளை எதிர்கொள்ள நேரிட்டாலும் ஏப்ரல் 10ஆம் திகதிக்கு முன்னர் இவற்றை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆலோசனை வழங்கியுள்ளார். அதற்கமையவே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM