உரம் வழங்கும் வேலைத்திட்டங்களில் அரசாங்கம் தலையிடாது - சாகல ரத்நாயக்க

Published By: Digital Desk 3

25 Mar, 2023 | 01:46 PM
image

(எம்.மனோசித்ரா)

உரம் வழங்கும் வேலைத்திட்டங்களை அடுத்த வருடம் முதல் அரசாங்கத்தின் தலையீடு இன்றி முன்னெடுத்துச் செல்வதற்கான ஒழுங்குபடுத்தல்களை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி அலுவலகப் பிரதானி சாகல ரத்நாயக்கவினால் விவசாயத்துறை அமைச்சின் செயலாளர் மற்றும் கமநல சேவை ஆணையாளருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

பெரும்போகத்திற்கு தேவையான அனைத்து வகை உரங்களை விநியோகிப்பது தொடர்பிலான கலந்துரையாடல் கடந்த வாரம் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.

இதன்போது உர விநியோகம் தொடர்பில் எதிர்காலத்தில் அரசாங்கம் தலையிடப் போவதில்லை என சாகல ரத்நாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.

அரசாங்கத்தினால் விவசாயிகளுக்கு உரத்தை வழங்குவதற்குத் தேவையான நிதி வழங்கப்படும் என்றும், அரசாங்கம் பெறுகின்ற வெளிநாட்டு உதவிகளை உரத்தை இறக்குமதி செய்யும் தனியார் நிறுவனங்களுக்கு வழங்கி விலையை குறைக்க தலையிடுவதாகவும் சாகல ரத்நாயக்க அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளார். அதற்கு மேல் உரம் வழங்குவதில் அரசாங்கம் தலையிடாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ரூபாவின் பெறுமதி அதிகரித்தல் மற்றும் உலக வங்கி போன்ற நிறுவனங்கள் விவசாயத்திற்கு வழங்கும் உதவிகளினால் உரங்களின் விலை எதிர்காலத்தில் மேலும் குறையும் எனவும் அவர் அதிகாரிகளிடம் சுட்டிக்காட்டியுள்ளார். 

அதிகாரிகளின் நிலைப்பாடுளையும் கேட்டறிந்து கொண்டதன் பின்னர், அரசாங்கத்தின் தலையீடு இல்லாமல் விவசாயிகளுக்கு உரங்களை வழங்குவதற்கான முறையான அமைப்பைத் தயாரிக்குமாறு சாகல ரத்நாயக்க அவர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஹீத்ரோ விமானநிலையம் மூடப்பட்டது ; ஸ்ரீலங்கன்...

2025-03-21 15:26:30
news-image

மது போதையில் பஸ்ஸை செலுத்திச் சென்ற...

2025-03-21 15:48:13
news-image

15 வயது சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல்...

2025-03-21 15:24:44
news-image

கணேமுல்ல சஞ்சீவவின் கொலையுடன் தொடர்புடைய 10...

2025-03-21 14:42:49
news-image

ஜேர்மனிய பெண்ணின் வேட்பு மனு நிராகரிப்பு 

2025-03-21 15:05:25
news-image

இலங்கையை சர்வதேச நீதிமன்றத்திற்கு கொண்டு செல்வதை...

2025-03-21 14:03:11
news-image

ஹிம்புல்கொட காணி மோசடியுடன் சிரந்தி ராஜபக்ஷவுக்கு...

2025-03-21 15:41:16
news-image

சிரேஷ்ட பிரஜைகளின் 10 இலட்சத்துக்கும் குறைவான...

2025-03-21 15:07:09
news-image

மது அருந்திய போது நண்பரின் கை...

2025-03-21 13:23:49
news-image

மனித விற்பனை, துஷ்பிரயோகத்தை தடுக்க சிறுவர்கள்...

2025-03-21 13:05:35
news-image

அமைதியான இந்து சமுத்திர வலயத்திற்காக இலங்கை...

2025-03-21 13:19:00
news-image

யாழில் வேட்பு மனுத் தாக்கலின் போது...

2025-03-21 13:02:16