நடிகர் ஜெய் முதன்மையான வேடத்தில் நடிக்கும் புதிய இணையத் தொடருக்கு 'லேபிள்' என பெயரிடப்பட்டு, அதன் முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையில் தொடங்கியது.
இத்துடன் டிஸ்னி ப்ளஸ் ஹொட் ஸ்டார் டிஜிட்டல் தளத்திற்காக உருவாகும் இந்த இணைய தொடருக்கான டைட்டில் லுக்கும் வெளியிடப்பட்டது.
'கனா', 'நெஞ்சுக்கு நீதி' ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் தயாராகும் முதல் இணைய தொடர் 'லேபிள்'.
இதில் நடிகர்கள் ஜெய், தான்யா ஹோப், மகேந்திரன், ஹரிசங்கர் நாராயணன், சரண்ராஜ், இளவரசு, ஸ்ரீமன், சுரேஷ் சக்கரவர்த்தி, கும்கி சரவணன் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்யும் இந்த இணைய தொடருக்கு சாம் சி. எஸ். இசையமைக்கிறார்.
நிலவியல் பின்னணியை சார்ந்தே ஒருவரது சுய அடையாளம் தீர்மானிக்கப்படுகிறதா..! என்பதை மையப்படுத்தி தயாராகும் இந்த இணையத் தொடரை முத்தமிழ் எனும் படைப்பகம் எனும் நிறுவனம் தயாரிக்கிறது.
டிஸ்னி ப்ளஸ் ஹொட் ஸ்டார் எனும் டிஜிட்டல் தளத்தின் அசல் இணைய தொடராக உருவாகும் இந்த 'லேபிள்' இணைய தொடர், எட்டு அத்தியாயங்களாக உருவாகிறது. இந்த இணைய தொடரின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கியிருக்கிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM