(இராஜதுரை ஹஷான்)
உள்ளூராட்சிமன்றத் தேர்தலை காலவரையறையின்றி பிற்போடும் தீர்மானத்திற்கும், எதிர்க்கட்சிகளுக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது.
தேர்தலை விரைவாக நடத்துமாறு சகல எதிர்க்கட்சிகளும் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு வலியுறுத்திய போது தேர்தலுக்கு முரணான கருத்துக்களை மாத்திரம் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன முன்னணி முன்வைத்தது என பாராளுமன்ற உறுப்பினர் நாலக கொடஹேவா தெரிவித்தார்.
சமகால அரசியல் நிலைவரம் தொடர்பில் வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
சகல அரசியல் கட்சிகளுடன் கலந்துரையாடியதன் பின்னர் உள்ளூராட்சிமன்றத் தேர்தல் பிற்போடப்பட்டப்பட்டது என ஆளும் தரப்பினர் குறிப்பிடுவது அடிப்படையற்றது.
உள்ளூராட்சிமன்றத் தேர்தலை காலவரையறையின்றி பிற்போட தேர்தல்கள் ஆணைக்குழு எடுத்த தீர்மானத்திற்கும், எதிர்க்கட்சிகளுக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது.
பாராளுமன்றத்தினால் ஒதுக்கப்பட்டுள்ள நிதியை விடுவிக்குமாறு உயர்நீதிமன்றம் பிறப்பித்த இடைக்காலத் தடையுத்தரவை மதிக்காமல் அரசாங்கம் குறிப்பாக நிதியமைச்சு செயற்படுகிறது.
உள்ளூராட்சிமன்றத் தேர்தல் நடவடிக்கைக்கு ஏற்பட்டுள்ள தடைகளுக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் ஆணைக்குழுவின் அடிப்படையின் வழக்குத் தாக்கல் செய்யுமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களிடம் வலியுறுத்தினோம்.
நிதியமைச்சு வெளியிட்டுள்ள சுற்றறிக்கையால் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்வதற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது என ஆணைக்குழு குறிப்பிட்டது. ஆணைக்குழுவின் சுயாதீனத்தன்மையை நிதியமைச்சு சுற்றறிக்கையால் நெருக்கடிக்குள்ளாக்கியுள்ளது.
தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவுடன் கடந்த 23 ஆம் திகதி வியாழக்கிழமை இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போது உள்ளூராட்சி மன்றத் தேர்தலை வெகுவிரைவாக நடத்துமாறு சகல எதிர்க்கட்சிகளும் வலியுறுத்திய போது ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன மாத்திரம் தேர்தலுக்கு எதிரான கருத்துக்களை முன்வவைத்தது.
தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களையும்,தேர்தலுக்கான நிதி விடுவிப்பு தொடர்பில் இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பித்த உயர்நீதிமன்ற நீதிபதிகளையும் பாராளுமன்ற சிறப்புரிமைகள் மற்றும் ஒழுக்கவியல் குழுவுக்கு அழைக்க அளும் தரப்பினர் தீர்மானித்துள்ளனர் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM